ண்ணாமலை முகத்தில் கரியை பூசியிருக்கிறார் அமித்ஷா.

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் நான் ராஜினாமா செய்வேன்'' என பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு சவால்விட்டார் அண்ணாமலை. அவரை பார்வையாளராக மட்டும் வைத்துக்கொண்டே எடப்பாடியுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் அமித்ஷா. அண்ணாமலையை அவமானப்படுத்திய செயல் என வர்ணிக்கப்படும் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. தலைமை எடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு எப்படி வந்தது என தெளிவாகவே விளக்குகிறார்கள் டெல்லி பா.ஜ.க.வை சார்ந்தவர்கள்.

இந்த முடிவுக்கு காரணம் இரண்டு பிதாமகன்கள். ஒருவர் மயிலாப்பூரில் இருக்கக்கூடிய ஆடிட்டர். இன்னொருவர் கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து எடியூரப்பாவிடம் மோதிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ். ஆடிட்டர் காஞ்சி மடத்தை சேர்ந்தவர். பி.எல்.சந்தோஷ் சிருங்கேரி மடத்தை சேர்ந்தவர்.

Advertisment

dd

‘ஜெ.’இறந்ததும், ஓ.பி.எஸ். மூலம் அ.தி.மு.க.வை உடைத்து இரட்டை இலையை முடக்கினார் ஆடிட்டர். இந்த இடைவெளியில் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வந்து அவர் மூலம் ரஜினி, ஓ.பி.எஸ் ஆகிய பிம்பங்கள் மூலம் பா.ஜ.க.வை தமிழகத்தில் வளர்த்துவிடலாம் என கணக்குப் போடப்பட்டது. ஓ.பி.எஸ். முயற்சிகளை சசிகலா முறி யடித்தார். ரஜினி வரப்போகிறார்’ என்கிற செய்தியை நீண்டநாட்களாக வாசித்து வந்தார் ஆடிட்டர். அந்த செய்தியும் பொய்யாய்ப் போனது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தந்திரமாக ஓ.பி.எஸ்.ஸை வைத்துக்கொண்டு இரட்டைத் தலைமை என சமாளித்தார் எடப்பாடி. ரஜினி அரசியலுக்கு வருவது நடக்காத காரியம் என ஆனவுடன் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஓ.பி.எஸ்.ஸுக்கும் எடப்பாடிக்கும் இடையே மோதல் வந்தது. இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள நினைத்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டாவது பிதாமகனான பி.எல்.சந்தோஷ்.

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரையும் பயன்படுத்தி அ.தி.மு.க. வாக்குகளை முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் ஆகியோருக்கு இடையேயான போட்டியாக மாற்றி பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் எடப்பாடியை எதிர்க்கும் அ.தி.மு.க. என ஒரு அணியை உருவாக்கி பா.ஜ.க. வை வெற்றிபெறச் செய்யலாம் என பி.எல்.சந்தோஷ் கணக்கு போட்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்த லிலும் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால் நாங் கள் ஆதரிப்போம் என ஓ.பி.எஸ். அறிவித்தார். தந்திரமாக ஒரு வழக்கு மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் இரட்டை இலையைப் பெற்றார் எடப் பாடி. அத்துடன் அவசர அவசரமாக பொதுச்செய லாளர் தேர்தல் நடத்தி அதிலும் வெற்றி பெற்றார். கேரளாவின் முன்னாள் ஆளுநரான உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் மூலம் எடப்பாடி எடுத்த இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தார் அண் ணாமலை. ‘அதையடுத்து, "அ.தி.மு.க. ஒரு ஊழல் கட்சி... அதனுடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்'’என பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படை யாகவே அறிவித்தார். அத்துடன், சமீபத்தில் தி.மு.க. ஊழல் செய்தது என ஒரு பட்டியலை வெளியிட்ட போது, அ.தி.மு.க.வும் ஊழல் கட்சிதான் அதன் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்'' என வெளிப்படையாகவே அறிவித்தார்.

Advertisment

dd

"அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர்' என்று எதிர்த் தாக்குதல் நடத்தினார் எடப்பாடி. அதேநேரம் முன்னாள் கேரள கவர்னர் மூலம் அமித்ஷாவை சந்தித்து, “"அண்ணாமலை, ‘கொங்கு நாடு ஜனதா கட்சி’ என ஒரு கட்சியை ஆரம்பிக்க பா.ஜ.க.வை பயன்படுத்துகிறார். அவர் ரஜினியுடன் நெருக்க மாக இருந்து அரசியலுக்கு வரும்போதே தனியாக அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்ற ஆசையுடன்தான் வந்தார். சசிகலாவை பா.ஜ.க எதிர்த்தது. அவருடன் கூட்டுச் சேர்ந்து பி.எல். சந்தோஷும், மயிலாப்பூர் ஆடிட்டரும் என்னை அழிக்க நினைக்கிறார்கள். எனது கொடும்பாவியை பா.ஜ.க.வினரை விட்டு அண்ணாமலை எரிக்கிறார். வெளிப்படையாகவே என்னை எதிர்த்துப் பேசு கிறார்''’என சொல்ல... கர்நாடகத்தில் எடியூரப் பாவை பி.எல்.சந்தோஷ் எதிர்ப்பதால் அங்கு தோல்வியின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பா.ஜ.க., அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட்டு களைப் பெற எடப்பாடியின் தயவு தேவை என பி.எல்.சந்தோஷ், ஆடிட்டர் ஆகியோரின் அரசியல் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தேர்தல் கமிஷன் மூலம் இரட்டை இலையையும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியையும் அங்கீகரித்து எடப்பாடிக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுத் தந்து,. கூட்டணியை இறுதி செய்ய டெல்லிக்கு அழைத்தது பா.ஜ.க.

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற எடப்பாடியுடனான சந்திப்பில், கர்நாடகாவில் இருந்த அண்ணாமலையையும் இடம்பெறச் செய்தது. அந்த சந்திப்பில் ஜி ஸ்கொயர் ரைடு மற்றும் பி.டி.ஆர். டேப் ஆகியவற்றுடன் எடப்பாடி அண்ணாமலை மேல் வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இனி அண்ணாமலை அப்படிப் பேச மாட்டார் என அவரது தனித்துப் போட்டி பார்முலாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித்ஷா, "அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என உறுதியளித்தார்.

அடுத்தகட்டமாக, "பா.ஜ.க.வுக்கு பாராளு மன்ற தேர்தலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் வேண்டும்' என்கிற கோரிக்கையை ஜே.பி.நட்டா முன்வைத்தார். அதற்கு ‘"பார்த்துக் கொள்ளலாம்'’ என எடப்பாடி பதில் சொன்னார். இப்போது அண்ணாமலை எதிரியல்ல என எடப்பாடி பேசி வருகிறார். இனிமேல் அ.தி.மு.க.வுக்கு எதிராகப் பேசினால் மாநிலத் தலைவர் பதவி காலியாகி விடும் என்கிற எச்சரிக்கையோடு டெல்லியில் இருந்து திரும்பியிருக்கிறார் அண்ணாமலை.