Advertisment

அ.தி.மு.க. வைக்கிற கூட்டணி! எனக்குத்தான் லாபம்! -தினகரன் கணக்கு!

dinakaran

"அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணியை உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார் தினகரன். பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளை இணைத்து ஒரு கூட்டணியை எடப்பாடி உருவாக்க வேண்டும் என்பதே தினகரனின் விருப்பமாக இருக்கிறது' என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமான வர்கள்.

Advertisment

dinakaran"நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது தலைமைக்கு அ.தி.மு.க. வந்துவிடும் என கணக்குப் போடுகிறார் தினகரன்' என்றவர்கள், ""அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவானால்தான் எங்களுக்கு பிரச்சார

"அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணியை உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார் தினகரன். பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளை இணைத்து ஒரு கூட்டணியை எடப்பாடி உருவாக்க வேண்டும் என்பதே தினகரனின் விருப்பமாக இருக்கிறது' என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமான வர்கள்.

Advertisment

dinakaran"நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது தலைமைக்கு அ.தி.மு.க. வந்துவிடும் என கணக்குப் போடுகிறார் தினகரன்' என்றவர்கள், ""அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவானால்தான் எங்களுக்கு பிரச்சாரம் செய்ய வலுவான சூழல் உருவாகும். இந்த கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கான அனைத்து செயல் திட்டங்களையும் பா.ஜ.க.வும் எடப்பாடியும் செய்து முடித்திருப்பதாக தினகரனுக்கு தகவல் கிடைத்தது'' என்றனர்.

சமீபத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் தினகரன். அப் போது, ""பா.ஜ.க.வையும் பா.ம.க.வையும் இணைத்துக்கொண்டு ஒரு கூட்டணி அமைவது நமக்கு நல்லதுதான். எத்தனையோ முறை மோடி வலி யுறுத்திய போதும், "நட்பு வேறு அரசியல் வேறு. கூட்டணி குறித்து வற்புறுத்தாதீர்கள்' என மோடியிடமே தெளிவாக சொன்னவர் அம்மா. ஆனால் அந்த பா.ஜ.க.வின் அடிமைகளாக மாறிப்போனார்கள் எடப்பாடி அண்ட் கோவி னர். இப்போது அம்மாவின் முடிவுகளுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார்கள். அதனால், அப்படி ஒரு கூட்டணி அமைவது நமக்கு நல்லதுதான். அதேபோல, "ஊழல் குற்றச்சாட் டில் தண்டிக்கப்பட்ட ஜெய லலிதாவுக்கு மக்கள் வரிப்பணத் தில் நினைவிடம் கட்டுவதா?' என எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்குப் போட்டது பா.ம.க.! அதேசமயம், கலைஞர் நினை விடத்துக்கு எதிராக போட்ட வழக்கை பா.ம.க. வாபஸ் பெற்றது. அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கவும் நினைக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதும் நமக்கு நல்லதுதான்.

அ.தி.மு.க தொண்டர்களே "இந்தக் கூட்டணியை விரும்பவில்லை' என ஆதங்கப்படும் அதன் நிர்வாகிகள், "அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் உங்களுக்குத்தான் நாங்கள் ஓட்டுப் போடுவோம்' என சொல்கின்றனர். அதனால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வந்தால், "அம்மா உருவாக்கிய ஆட்சியை அடிமையாக நடத்தும் பா.ஜ.க.வுடனும், அம்மாவின் நினைவிடத்துக்கு எதிரான பா.ம.க.வுட னும் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடிக்கா உங்கள் ஓட்டு என பிரச்சாரம் செய்தால் மொத்த அ.தி.மு.க. தொண் டர்களையும் நம் பக்கம் இழுத்துவிட முடியும். கடைசியில் எனக்குத் தான் லாபம்' என பிரச் சார வியூகத்தைக் கோடிட்டு காட்டியிருக் கிறார் தினகரன்'' என விவரிக்கிறார்கள் அ.ம.மு.க. நிர்வாகிகள்.

-இளையர்

nkn160219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe