அ.தி.மு.க. தலைவர் எடப்பாடியின் கொடும் பாவி உருவ பொம்மையை கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் எரித்தார்கள். இது கூட்டணியை உடைக்க அண்ணாமலை போட்ட நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. எடப்பாடியின் கொடும்பாவியை எரித்தது தினேஷ் ரோடி என்கிற பா.ஜ.க. நிர்வாகி. இவர் ஒரு சாதாரண ஆள், கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர், பா.ஜ.க.வில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை”என பா.ஜ.க. தரப்பிலிருந்து எடப்பாடிக்கு சொல்லப்பட்டது. இப்படி சொல்லப்பட்டதை எடப்பாடி கடம்பூர்ராஜுவிடம் விசாரித்தார். அவரும் "ஆமாம் அப்படித்தான்'’என சொன்னதை எடப்பாடி நம்பினார்.

ff

ஊடகங்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடம்பூர் ராஜூ பேட்டி அளிப்ப தற்கு முன்பே கோவில்பட்டி நகரத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடியின் கொடும்பாவியை எரித்தவர்களை கைது செய்யுங்கள் என போராட் டம் நடத்தினர். கொடும்பாவியை எரித்த தினேஷ் ரோடி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக அ.தி.மு.க.வினர் யாரும் புகார் கொடுக்காததால் சிறிதுநேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு எடப்பாடிக்கு வந்த தகவல்கள் வேறு மாதிரி இருந்தன. “தினேஷ் ரோடி சாதாரண ஆள் இல்லை. அவரை பா.ஜ.க.வின் இளைஞர் அணிச் செயலாளராக அண்ணாமலை நியமிக்க இருந்தார். அண்ணாமலையின் சீக்ரெட் ஆபரேஷன்களை நடத்தித் தருபவர்தான் தினேஷ் ரோடி. இவரது வீட்டுக்கு அண்ணாமலை அடிக் கடி வந்து போவார். தினேஷ் ரோடியும், அண்ணா மலைக்கு நெருக்கமான திருச்சியில் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியும் சேர்ந்துதான் அண்ணாமலைக் காக தமிழகத்தில் ரகசிய வேலைகளை செய்வார்கள். அண்ணாமலைக்காக தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து பண வசூல் செய்து கொடுப்பது தினேஷ் ரோடிதான். தினேஷ் ரோடியும் அவருக்கு துணையாக போலீஸ் அதிகாரியும், அமர் பிரசாத் ரெட்டியும், திருச்சி சூரியாவும் ஒன்றாகச் சுற்றி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சென்னைக்கு கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்தப் பெருமளவிலான பணத்தை பெங்களூருவில் உள்ள பி.எல்.சந்தோ ஷிடம் அண்ணாமலையின் ‘இஸட்’செக்யூரிட்டி பாதுகாப்புடன் உள்ள காரில் அண்ணாமலை கொடுத்தனுப்புவார். பி.எல். சந்தோஷை கர்நாடக முதலமைச்சர் ஆக்குவதற்கு வேலை செய்யும் குழுவில் அண்ணாமலை முக்கிய அங்கம். அதற்காக தமிழகத்தில் உள்ள அரசு காண்ட்ராக்டர்கள் மற்றும் சப்ளையர் கள், போலி நிதி நிறுவனங்களை நடத்துபவர்கள் அனைவரையும் மிரட்டி பணவசூல் செய்வதில் தினேஷ் ரோடி ஒரு முக்கியமான அங்கம். எடப்பாடியின் கொடும்பாவியை எரிப்பதற்கு முன்பு அண்ணாமலையுடன் தினேஷ் ரோடி டெலிபோனில் பேசினார். அண்ணாமலை கட்டளையிட்டதன் அடிப்படையில்தான் தினேஷ் ரோடி எடப்பாடியின் கொடும்பாவியை எரித்தார்” என வந்த தகவல்கலைக் கேட்டு எடப்பாடி அதிர்ந்து போனார்.

Advertisment

ff

பின்னர் எடப்பாடி கடம்பூர் ராஜுவைக் கூப்பிட்டு கோவில்பட்டி பகுதியில் உள்ள பா.ஜ.க.வினரிடம் மேலும் விசாரிக்கச் சொன்னார். முதலில் தினேஷ் ரோடி மனநிலை சரியில்லாதவர் எனச் சொன்ன ராஜு பின்னர், அவனைப் பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை”என எடப்பாடியிடம் சொல்ல, எடப்பாடி பதறிப்போனார். முதலில் ஏதோ ஒரு சாதாரண சம்பவம் என நினைத்த எடப்பாடி, இந்த சம்பவத்தின் பின்னணியில் இவ்வளவு பெரிய கிரிமினல் வேலை இருக்கிறது, அண்ணாமலை திட்டமிட்டுதான் கொடும்பாவியை எரித்தார் என கேள்விப்பட்டு கடுப்பாகிப் போனார்.

இதுபற்றி பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த நிர்மல் குமாரையும் விசாரிக்கச் சொன்னார். அவரோ, “அண்ணாமலை பற்றி நக்கீரனில் வெளிவந்த செய்தியான, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் நூறு கோடி அண்ணாமலை வாங்கிய செய்திகளோடு, அமர் பிரசாத் ரெட்டி, தினேஷ் ரோடி மற்றும் காவல்துறை அதிகாரி அடங்கிய டீம்தான் பண வசூல் செய்து கொடுத்ததோடு, அந்தப் பணத்தின் ஒரு பகுதியை தமி ழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கும், பெங்களூருவில் உள்ள பா.ஜ.க. தலைவர் பி.எல்.சந்தோஷுக்கும் கொடுத்தார்கள். கே.டி.ராகவனை ‘ஐஞசஊவ பதஞட’ செய்ததும் இந்த டீம்தான். அண்ணாமலை ஒரு தலைவரே அல்ல. அவர் ஒரு கிரிமினல் புத்தி உள்ள போலீஸ் அதிகாரி. என்னை மாநிலத் தலைவர் ஆக்கு வதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடைபெற்றுவந்தன. அதனால் எனக்கு அவர் ஏகப்பட்ட தொல்லை கொடுத்தார்” என்று அண்ணாமலை கும்பலின் திருவிளையாடல்களை மணிக் கணக்கில் எடப்பாடிக்கு விளக்கினார். அதைக் கேட்ட எடப் பாடி, "அப்படிப்பட்டவனா இவன்! இவன் தலைவனாக இருக் கும்வரை நான் பா.ஜ.க.விற்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டேன்'' என்று சொன்னதுடன் டெல்லி பா.ஜ.க. தலைவர்களைத் தொடர்புகொண்டு, “கொடும்பாவி எரிப்பு எப்படி நடந் தது? என நீண்ட விளக்கத்தைக் கொர்டுத்துவிட்டு, நீங்கள் தமிழ்நாட் டில் அரசியல் செய்கிறீர்களா? அல்லது ஒரு கிரிமினல் கும்பலை வைத்துக் கொண்டு பணத்தைக் கொள்ளை அடிக்கிறீர்களா?” என சீரியஸாகவே கேட்டுள்ளார்.

Advertisment

அண்ணாமலைக்கு எதிரான எடப்பாடியின் விஸ்வரூபம் டெல்லியை அதிர வைத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட அண்ணாமலை, திடீ ரென்று எடப்பாடிக்கு எதிரான ஓ.பி. எஸ். வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளார். அவரை வேண்டா வெறுப்பாக வரவேற்ற ஓ.பி.எஸ்., டெல்லியில் அண்ணாமலைக்கு எதிராக நிகழும் நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.

_____________

இறுதிச் சுற்று!

ss

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் 9-ந் தேதி வியாழக்கிழமை ஆலோசித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதில் ஈரோடு இடைத்தேர்த-ல் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ் .தரப்பில் போடப்பட்ட வழக்கு, அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதல் உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஈரோடு தேர்தல் தோல்விக்கு தி.மு.க.வின் அதிகார பலமும், பண பலமும், அதனை தடுக்க வேண்டிய தேர்தல் பார்வையாளர்கள் தடுக்க நினைக்காததும்தான் முக்கிய காரணம் என சொல்-யிருக்கிறார்கள். மேலும், அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியில் சீரியஸ் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளனர். நிர்வாகிகள், பொதுச்செயலாளருக்கான தேர்தலை விரைந்து நடந்தவேண்டும் என்றும், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதுதான் சரி என்றும் மா.செ.க்கள் கூட்டத்தில் எதிரொ-த்துள்ளது. மா.செ.க்களுடனான ஆலோசனையை அடுத்து கட்சியின் உயர்மட்டக் குழுவிலும் விவாதிக்கவிருக்கிறார் எடப்பாடி.

-இளையர்