தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பல மாதங்கள் இருக் கும் சூழ்நிலையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. முன்கூட்டியே கூட்டணி வைத்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எங்கு அ.தி. மு.க. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து விட்டால் நமக்கு சிக்கலாகிவிடுமோ என்கிற அச்சத்திலே அவசர அவசரமாக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது பா.ஜ.க. என்கிறார்கள்.
இன்னும் தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில், கூட்டணிப் பேச்சு வார்த்தையும் முழுமையாக முடிவடையாத நிலையில், அ.தி.மு.க.வில் ஜெயக்குமார், செங் கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகளின் உட்கட்சி மௌனப் போரால் தேர்தல் நெருங்குவதற்குள் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகத்தில் அ.தி.மு.க. பயணித்துக் கொண்டிருக்க, அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட்டுக்கு இப்போதே பலரும் சண்டை போடுவதால் இருக்கிற பிரச்சனையில் இவர்கள் வேறு என எடப்பாடி கொந்தளித்து வருகிறாராம்.
அந்த வகையில் அண்ணாநகர் சட்ட மன்றத் தொகுதியின் அமைப்புச் செயலாளரான

அந்த வகையில் அண்ணாநகர் சட்ட மன்றத் தொகுதியின் அமைப்புச் செயலாளரான கோகுல இந்திரா இப்போதே தனக்கான எம்.எல்.ஏ. சீட்டை கட்சித் தலைமையிடம் உறுதிப்படுத்தப் போராடிவருகிறார். தவிரவும் கட்சியினர், அ.தி.மு.க .பேனர்களில் தன் புகைப் படத்தைத் தவிர்ப்பதாகவும், கூட்டங்களுக்கு தன்னை அழைப்பதற்குத் தயங்குவதாகவும் சில நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.க. கூட்ட மொன்றிலேயே குற்றச்சாட்டாக எடுத்துவைத் தார். அ.தி.மு.க. நடத்திய அனைத்துக் கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கிறது என அவர் குற்றச்சாட்டு வைக்க ஆரம்பித்துள்ளார். தி.மு.க. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு எதிராக அ.தி.மு.க. மேற்கொண்ட கண்டனப் போராட்டத்தின்போது எதிர்ப்பை வெளிக் காட்டும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கருப்புப் புடவை அணிந்துவந்திருந்தனர். அதில் கோகுல இந்திரா மட்டும் கலர் புடவை அணிந்து வந்திருந்தார். அந்தப் போராட்டத்தில் அவர் கடமைக்கு கலந்துகொண்டதாகவே கட்சியினர் கூறுகின்றனர்.
கட்சியில் பலராலும் புறக்கணிக்கப் படுவதைப் பற்றி எடப்பாடியிடம் பேச கோகுல இந்திரா முடிவுசெய்தார். பா.ஜ.க. கூட்டணி அ.தி.மு.க. மீது நிர்பந்திக்கப்பட்ட கடுப்பிலிருந்த எடப்பாடியிடம் சென்று கோகுல இந்திரா, "எனக்கு அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் வேண்டும், அப்படி இல்லையென்றால் எனக்கு மா.செ. பொறுப்பு வழங்கவேண்டும்' என்று கேட்டுள்ளார். "அதற்கு இப்போ என்ன அவசரம்?' என எடப்பாடி கேட்க, இல்லை, மா.செ.வான தி.நகர் சத்யா என்னைச் செயல் படவிடாமல் புறக்கணித்து வருகிறார். என்னு டைய அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு முட்டுக்கட்டையைச் சந்தித்ததில்லை. சத்யா, எனக்கு தொடர்ச்சியாக பிரச்சனை கொடுத்துக்கொண்டே வருகிறார். எனக்கு சீட் உறுதிசெய்து நிர்வாகிகளிடம் அதனைத் தெரிவித்துவிட்டால், நான் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் மத்தியில் என் பணியையும் செயல்பாட்டையும் தொடங்கி விடுவேன்... இல்லையென்றால் விட்டுவிடுங்கள் நான் ஒதுங்கிக்கொள்கிறேன்'’என புலம்பித் தள்ளியுள்ளார்.
இதற்கு எடப்பாடி, "பொறுமையாக இரு, என்னிடம் உன் பிரச்சனையைக் கூறியாகி விட்டதல்லவா... அப்புறம் பார்த்துக்கொள்ள லாம்'’என சமாதானமாக்கி அனுப்பியுள்ளாராம். இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக் குமாரும் பா.ஜ.க. கூட்டணி பற்றி சற்று யோசிக்கலாமே என எடப்பாடியிடம் கேட்டுள்ளாராம். “"தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. நம்முடைய கூட்டணிக்கு வருவதற்கு பல கட்சிகளும் தயாராக இருந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணியென முடிவெடுத்துள்ளதால் பல கட்சிகள் தயங்கிப் பின்னடைய ஆரம்பித் துள்ளன. நீங்கள் பொதுக்குழு கூட்டம் கூட்டிச் சொன்னதை வைத்துத்தானே நாங்கள் வெளிப்படையாகப் பேசினோம் இப்போ இப்படி ஆயிடுச்சி. இப்போதும் கெட்டுப் போகவில்லை. பொறுப்பை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தலுக்குள் என்ன செய்யவேண்டுமோ… அதைச் சிறப்பாகச் செய்கிறேன்'’எனக் கேட்டுள்ளாராம்.
அவரையும் பொறுமையாக இருங்க பார்த்துக்கொள்ளலாம் எனப் பேசி அனுப்பியுள்ளாராம். இவர்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் பலரும் அவரவர் பிரச்சனையுடன் தினம் தினம் வந்து சீட் வேண்டும், கூட்டணி மாற்றுங்க, ஓ.பி.எஸ்., சசிகலா இணைப்பு என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிக் கொந்தளித்துள்ளாராம். என்ன செய்வது, எதைச் செய்யணும் என்பதை நான்தான் முடிவெடுக்கவேண்டும். நான் சொல்வதை மட்டுமே நீங்கள் செய்தால் போதும்.
கட்சியில் யார் இருக்கணும், யாருக்கு சீட் கொடுக்கணும், கூட்டணி யாருடன் என்பது எல்லாம் எனக்குத் தெரியும் என்று நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லி, இனி மேல் சில நாட்களுக்கு எதைப்பற்றியும் என்னி டம் பேசவேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பித்தள்ளுகின்றனர்.
ஆட்சியில் பங்கு என்று குடைச்சல் கொடுக்கும் பா.ஜ.க. வைச் சமாளிப்பதா, அல்லது சொந்தக் கட்சிக்குள்ளே ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி, எனக்கு சீட் வேண்டும் என சந்தர்ப்பமற்ற வேளை களில் டார்ச்சர் கொடுக்கும் நபர் களைச் சமாளிப்பதா எனக் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் இருக்கிறார் எடப்பாடி.
-சே