மைச்சர் பொன்முடியின் அநாகரிகப் பேச்சைக் கண்டித்து, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலையில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்ட ஜெ. பேரவை துணைத்தலைவர் ரேடியோ.ஆறுமுகத்தின் கன்னத்தில் அ.தி.மு.க. மகளிரணி பெண் பளாரென அறைய, அவரது ஆதரவாளர்களும் அடித்து வெளுத்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேடியோ.ஆறுமுகத்தை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அம்பேத்கர் பிறந்தநாளின்போது அவரது சிலைக்கு மா.செ. ராமச்சந்திரன் மாலை அணிவித்த புகைப்படம் பத்திரிகை செய்திகளில் வந்திருந்தது. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது, முன்னாள் நகரச்செயலாளர் மறைந்த கனகராஜின் மனைவி ஞானசௌந்தரியை பார்த்து மா.செ. ராமச்சந்திரன் வணங்குவதுபோல் இருந்தது. பொதுமக்கள் இந்தப் படத்தை பார்த்தால் என்ன பேசுவார்கள் என மா.செ. ராமச்சந்திரனுக்குத் தெரியாதா? இந்த படத்தை பார்க்கும்போது கேவலமாக இருக்கிறது என கட்சி நிர்வாகிகள் சிலரிடம் சொன்னேன்.

tt

இதை யாரோ அந்தப் பெண்மணியிடம் தவறாக சொல்லியுள்ளார்கள். அதனால் ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்த என்னை நோக்கி வந்தவர், 'என்னைப்பத்தி என்னடா தப்பா பேசுறியாமே?' எனக் கேட்டபடி என் கன்னத்தில் பளாரென அறைந்தார். அவருடன் இருந்த இருவர் என்னை சரமாரியாகத் தாக்கினார்கள். உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளேன். நகரச் செயலாளராக இருந்த கனகராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் உயிருடன் இருந்தவரை கட்சிப்பணி, டெண்டர் குறித்து என்னை அழைத்து ஆலோசனை நடத்துவார். அவரின் மனைவியிடம் என்னைப் பற்றி யாரோ தப்புத்தப்பாக சொன்னதால் என்னைத் தாக்கியுள்ளார்'' என்றார்.

இதுகுறித்து ஞான சௌந்தரியிடம் கேட்டபோது, "அம்பேத்கர் சிலையை நோக்கி மா.செ. வணங்குகிறார். நாங்கள் எதிரில் உள்ள மக்களை நோக்கி வணங்குகிறோம். மா.செ. என்னைப் பார்த்துக் கும்பிடுவதாக தவறாக சித்தரித்து வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் போட்டுள்ளதாக சொன்னார்கள். நான் அதனைப் பார்த்தபோது போட்டோவோடு ஒரு ஆடியோ பதிவும் இருந்தது. அந்த ஆடியோவில், 'சிலையை பார்த்து கும்பிடறதுக்கு பதிலா, கனகராஜ் பொண்டாட்டியை பார்த்து கும்பிடுடறார். பொது இடத்திலும் இப்படித்தான் நடந்துக்கறார், வீட்டுக்குள்ளயும் இப்படித் தான் நடந்துக்கறார்' எனச் சொல்லியிருந்ததைக் கேட்டு அதிர்ச்சியாகிட்டேன். உடனே ந.செ. செல்வத்தை தொடர்புகொண்டு, 'ஒரு பெண்ணான நான் அரசியலுக்கு வரக்கூடாதா? ஏன் இவ்வளவு மோசமாக கமெண்ட் செய்துள்ளார்? இது என் மனசை கஷ்டப் படுத்திவிட்டது. அவர் பதிவிட்டது நகர கழக வாட்ஸ்அப் குரூப். இதுக்கு நீங்கதான் பொறுப்பு. அவரை முதலில் மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள்' என்றேன். 'நான் இன்னும் அதைப் பார்க்கல, அந்தாளு அப்படித்தான் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பார். நான் அவர்கிட்ட பேசறேன்' அப்படின்னு சொன்னார். மூன்று நாளாகியும் அந்த பதிவை டெலீட் செய்யல, மன்னிப்பும் கேட்கல.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி பெண்களை அவதூறாகப் பேசியதற்கான ஆர்ப்பாட்டத்துக்கு நான் வரவேண்டுமென்று நகரக் கழகத்தின் சார்பாகவும், மாவட்டக் கழகத்தின் சார்பாகவும் அழைத்தார்கள். "கட்சியில் மாவட்ட நிர்வாகி ஒருவரால் நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். அதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு என்னை வரச் சொல்கிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயம்?' எனக் கேட்டேன். "அதெல்லாம் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்' எனத் தொடர்ந்து அழைத்ததால், கட்சிக்கு கட்டுப் பட்டு ஆர்ப்பாட்டத்துக்கு சென்றேன்.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலும் அந்த ரேடியோ.ஆறுமுகம் என்னை அவதூறாகப் பேசினார். என்னுடன் இருந்தவர்கள், "ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க' எனக் கேட்டதால் சின்ன சலசலப்பு ஏற்பட்டது. நான் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் எல்லார் முன்பாகவும், 'மூன்றுநாள் டைம் தருகிறேன், அதற்குள் அவர் மன்னிப்பு கேட்கவில்லை யென்றால் நான் காவல்துறையில் நிச்சயம் புகார் தருவேன்' எனச் சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு பயந்துகொண்டு நான் அடித்ததாகச் சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு நாடகமாடுவதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பெண்ணாக நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாதா? அரசியலுக்கு வரும் பெண்களை எல்லாம் இப்படித்தான் கொச்சைப் படுத்துவார்களா?'' எனக் கேட்டார்.

ஜெ. பேரவை மா.செ. பெருமாள்நகர் ராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர், ஆறுமுகத்தைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தந்துள்ளனர்.

Advertisment

இதுபற்றி அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, "ராஜன் ஆதரவாளராகக் காட்டிக்கொள்ளும் ஆறுமுகம், மா.செ ராமச் சந்திரனை விமர்சித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ராமச்சந்திரன் ஆதரவாளரான வட்டச் செயலாளர் சரவணன், தனது ஆட்களை ஏவி, ரேடியோ ஆறுமுகத்தின் வீட்டுக்கே சென்று மிரட்டச் செய்தார். அதுபற்றி காவல்நிலையத் தில் புகார் தந்த ஆறுமுகத்தை நகர இன்ஸ் பெக்டர் மிரட்டி புகாரை வாபஸ் வாங்கச் சொன்னார். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு புகாரனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கோபத்தில் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். கனகராஜ் மனைவியை விமர்சித்து பதிவு போட்ட தும் உண்மை, அவர் அடித்ததும் உண்மை'' என்கிறார்கள்.