நதிக்கரையில் பிறப்பெடுத்தது மனித நாகரிகம் என் பார். அந்த வகையில் நம் தமிழர்களின் நாகரிகம், சிந்து நதிக் கரையில் மொகஞ்ச தாரா, ஹரப்பா நாகரிகமாக வளர்ச்சியடைந்தது.
அன்றைய நம் நதிக்கரை நாகரிகத்தை, இன்றைய அகழாய்வுகள் நமக்கு பெருமிதமாய் நாளுக்கு நாள் வெளிப்படுத்தி நம்மை நிமிரவைத்து கொண்டே இருக்கின்றன.
சிந்து நதிக்கரை நாகரிகம்போல, தமிழகத்தின் தாமிரபரணி, வைகைக் கரையோரம் அமைந்த மேலும் மேம்பட்ட நம் நாகரிகத்தை தற்போதைய அகழாய்வுகளும் அதன் முடிவுகளும் தொடர்ந்து வெளிப் படுத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத் தின் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை பகுதிகள் தாமிரபரணி நதிக்கரையோரத்தில் அமைந்திருப்பவை. சிந்து சமவெளியைப் போன்று நம் தென்மண்டல நாகரிகத்தின் தொட்டிலான இந்தப் பகுதிகளில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டாலும், ஆதிச்சநல்லூர் அவற்றைவிட முந்தையது.
"இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலான அகழாய்வாளர்களின் கவனத்தை ஆதிச்சநல்லூர் ஈர்த்ததற்குக் காரணம், அங்கு தோண்டத் தோண்டக் கிடைக்கும் புராதன அதிசயங்களும் அற்புதங்களுமே' என்கிறார் எழுத்தாளரும், தொல்லியல் ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு. அனைத்து அகழாய்விற்கும் முன்னோடி ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என அழுத்தம் கொடுக்கிறார். 1827 முதல் சுமார் 144 வருடங்களாக அகழாய்வுப் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதைய கால கட்டத்தில் தொல்லியல் அகழாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பாக மத்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல இயக்குனரான அருள்ராஜின் தலைமையில் அகழாய்வுப் பணிகள் வேகமெடுத்ததின்
நதிக்கரையில் பிறப்பெடுத்தது மனித நாகரிகம் என் பார். அந்த வகையில் நம் தமிழர்களின் நாகரிகம், சிந்து நதிக் கரையில் மொகஞ்ச தாரா, ஹரப்பா நாகரிகமாக வளர்ச்சியடைந்தது.
அன்றைய நம் நதிக்கரை நாகரிகத்தை, இன்றைய அகழாய்வுகள் நமக்கு பெருமிதமாய் நாளுக்கு நாள் வெளிப்படுத்தி நம்மை நிமிரவைத்து கொண்டே இருக்கின்றன.
சிந்து நதிக்கரை நாகரிகம்போல, தமிழகத்தின் தாமிரபரணி, வைகைக் கரையோரம் அமைந்த மேலும் மேம்பட்ட நம் நாகரிகத்தை தற்போதைய அகழாய்வுகளும் அதன் முடிவுகளும் தொடர்ந்து வெளிப் படுத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத் தின் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை பகுதிகள் தாமிரபரணி நதிக்கரையோரத்தில் அமைந்திருப்பவை. சிந்து சமவெளியைப் போன்று நம் தென்மண்டல நாகரிகத்தின் தொட்டிலான இந்தப் பகுதிகளில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டாலும், ஆதிச்சநல்லூர் அவற்றைவிட முந்தையது.
"இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலான அகழாய்வாளர்களின் கவனத்தை ஆதிச்சநல்லூர் ஈர்த்ததற்குக் காரணம், அங்கு தோண்டத் தோண்டக் கிடைக்கும் புராதன அதிசயங்களும் அற்புதங்களுமே' என்கிறார் எழுத்தாளரும், தொல்லியல் ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு. அனைத்து அகழாய்விற்கும் முன்னோடி ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என அழுத்தம் கொடுக்கிறார். 1827 முதல் சுமார் 144 வருடங்களாக அகழாய்வுப் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதைய கால கட்டத்தில் தொல்லியல் அகழாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பாக மத்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல இயக்குனரான அருள்ராஜின் தலைமையில் அகழாய்வுப் பணிகள் வேகமெடுத்ததின் அடிப்படை, ஆதிச்சநல்லூரிலேயே உலகத் தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் திட்டமே.
அதன் காரணமாக கடந்த அக். 10-ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள், ஆதிச்சநல்லூரில் வேகம் கண்டுள்ளன. இந்த அகழாய்வின் போது சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சுண்ணாம்புக் கொத்தளம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை யான சங்ககாலத் தமிழரின் வாழ்விடப் பகுதிகள், மூன்றடுக்குகளைக் கொண்ட முதுமக்கள் தாழிகள், வெண் கலத்தால் ஆன பொருட்கள், சுண்ணாம்பு அடுப்பு வகைகள், தங்கத்திலான நெற்றிப் பட்டைகள் என பல்வேறு பொருட்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
வயது முதிர்ந்த பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், கொள்ளை நோயால் பலிகொண்ட சிறுவர்கள், குழந்தைகளின் உடல்கள் மூன்றடுக்குகளைக் கொண்ட தாழிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு புதைக்கப் பட்ட எலும்புக் கூடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆதித்தமிழர்கள், சுற்றுப்புறச் சூழலைப் பேணும் வகையில் மரணித்த உடல்களைத் தாழிகளில் வைத்துப் புதைத்தனர். முதுமக்கள் தாழிகளின் பகுதிகளை விலங்கினங்களி லிருந்து பாதுகாக்கவும், மழை, வெள்ள நீரால் அரிப்பெடுத்து விடாதபடியும் தாழிகள் புதைக்கப்பட்ட இடங்களில் பெருங்கற்குவியலையும் ஏற்படுத்தி யிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்தவாரம் ஆதிச்சநல்லூர் வந்த பெங்களூர் தொல்லியல் துறையின் ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள், ஆதிச்ச நல்லூரின் அகழாய்வில் கிடைத்த இரும்பு ஆயுதங் களை, லக்னோவிலிருக்கும் பீர்பால் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் வெப்ப உமிழ்வு காலக் கணிப்பு ஆய்வாள ரான மொர்தக்காயும், முதுமக்கள் தாழி மற்றும் அதன் உள்ளடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த தானி யங்களை மகரந்தத்தூள் ஆய்வாளர் அஞ்சலி திரிவேதியும், தோண்டி யெடுக்கப்பட்ட பொருட் களின் காலத்தைக் கணிப்பதற்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
இது குறித்து நம் மிடம் பேசிய தொல்லியில் ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, “"முன்பெல்லாம் அகழாய்வுப் பணிகளில் தோண்டி எடுக்கப்படும் பொருட்களைக் கொண்டு, தொல் தமிழர்களின் வாழ்விடங்கள் எந்த நூற்றாண் டைச் சார்ந்தவை என்பதை ஆய்வு செய்கின்ற வசதி இங்கு இல்லாமல் இருந்தது. அதனால் ஆதிச்சநல்லூரில் பல வருடங்களுக்கு முன்பு அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் அமெரிக்காவிலிருக்கும் தொல்லியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு கார்பன் டேட்டிங் முறையில் அதன் ஆயுள் கணக்கிடப் பட்டன. அதன் அடிப்படையில் ஆதிச்சநல்லூரின் வாழ்விடங்கள் 2900 வருடங்கள் பழமையானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து ஆய்வினை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து ஆதிச்சநல்லூரின் பரும்புப் பகுதியில் மூன்று இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு அகழாய்வுகள் நடந்து வருகின்றன. விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் முன்னேறி வரும் தற்போது அகழாய்வுப் பொருட்களை ஆய்வுசெய்ய, வெளிநாடு அனுப்பவேண்டிய நிலைமை மாறி, இந்தியாவிலேயே அவற்றை ஆய்வு செய்கிற பத்து தொல்லியல் ஆய்வு மையங்கள் உருவாகிவிட்டன. இவற்றில் தமிழகத்திலுள்ள காமராஜர் பல்கலைக் கழகத்தின், தொல்லியல் ஆய்வுமையமும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆதிச்சநல்லூரின் அகழாய்வில் கிடைக்கும் பல தடயங்கள் மிகத் தொன்மையானதும் அதிசயத்தக்க வகையிலும் இருப்பதையறிந்து நான், சில விஷயங்கள் உரியகவனம் பெறவேண்டும் என்பதற்காக உயர்நீதிமன்றக் கிளையை அணுகி, சில முறையீடுகளைச் செய்தேன். அதன் அடிப்படையில் 2004-ன் போது அகழாய்வு செய்யப்பட்ட பொருட் களின் முழு ஆய்வு அறிக்கையைக் கேட்டேன். மேலும், அகழாய்வு முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றும், ஆதிச்சநல்லூரிலேயே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும் என்றும், ஆய்வுக்காக ஏற்கனவே லண்டன், பெர்லின் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்ட அபூர்வப் பொருட்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வைத்தேன். என் கோரிக்கைகளை ஏற்று உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை அடுத்து தற்போது மாநில மற்றும் மத்திய தொல்லியல் ஆய்வு மையங்கள் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. தவிர, இங்கே பலவகையான பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டதால் ஒவ்வொரு பொருட்களையும் ஆய்வு செய்கிற இந்தியாவின் பிற மாநில தொல்லியல் ஆய்வு மையங்களின் ஆய்வாளர்கள் இங்கு வந்து அகழாய்வுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். . கடந்த வாரம் வந்த பெங்களூரூ, தொல்லியல் ஆய்வாளர்களின் குழு, ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழமையான இரும்புகள், விவசாயக் கருவிகள், போர் ஆயுதங்கள் போன்றவைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அதன்மூலம் அந்த இரும்பு வகைகள் எத்தகைய காலத்தில் புழக்கத்திலிருந்தன என்பது தெரியவரும்.
அதன்பின் லக்னோவிலுள்ள பீர்பால் தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்களான மொர்தக்காய் மற்றும் அதே ஆய்வகத்தைச் சேர்ந்த மகரந்தத் தூள் ஆய்வாளர் அஞ்சலி திரிவேதி ஆகியோர், முதுமக்கள் தாழிகளையும், தானியங்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென் றுள்ளார்கள். இந்தத் தாழிகள் பல நூறு ஆண்டுகளாக மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்தன. அந்தத் தாழிகளில் மண்ணின் வெப்பம் ஏறியிருக்கும். அந்த வெப்ப உமிழ்வை கார்பனைக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறபோது அது எந்தக் காலகட்டத்தில் புதைக்கப்பட்டது என்பதெல்லாம் தெரிய வரும். தவிர, பண்டைய காலங்களில் இறந்தவர்களைப் புதைக்கும்போது நவதானியங்களையும் போட்டுப் புதைப்பது மரபாக இருந்திருக்கிறது. ஆதிச்சநல்லூரின் முதுமக்கள் தாழிகளின் மூன்றடுக்குகளில், ஒரு அடுக்கில் இறந்தவர்களின் உடலுடன் நெல், உமி, தானியங்கள், பயிறு வகைகளைப் போட்டுப் புதைத்துள்ளனர். அவைகளைத் தான் சேகரித்திருக்கிறார் ஆய்வாளர் அஞ்சலி திரிவேதி. அந்தத் தானியங்களின் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கிற மகரந்தத்தூளைக் கொண்டு அவை எந்தக்காலத்தைச் சேர்ந்த தானிய வகைகள் என்பது உலகிற்குத் தெரிய வரும். இதுபோன்று இங்கு கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் பிற மையங்களின் ஆய்வாளர்களால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.
இதுபோன்ற அகழாய்வுகள் பிரதமர் மோடியின் குஜராத்திலும், ஆதிச்சநல்லூரிலும் மட்டுமே நடக்கின்றன. ஆனால் குஜராத்தைக் காட்டிலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் விரைவில் முடிந்து விடும் என்பது நிகழ்வுகளிலிருந்து தெரிகிறது''’என்று நீண்ட பெருமூச்சு விடுகிறார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்களின் ஆய்வு முடிவுகள், தமிழ் வரலாற்றின் நீள அகலத்தை அதிகரிப்பதோடு, தமிழர் பெருமையை புதிய சிகரத்துக்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி.