திதிராவிடர் அரசு விடுதிகளில் நடைபெறும் ஊழலால் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பொறுத்தது போதும் என்று மாநில அளவில் போராட்டம் நடத்துவது எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

f

தமிழகம் முழுவதும் 1,325 ஆதி திராவிடர் அரசு விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 60.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிவருகிறது. ஒரு மாணவரின் மாத உணவிற்கு 1000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இதர செலவிற்கு 75 ரூபாயும், இதுபோக பெட்சீட், தட்டு, தம்ளர் என அதற்கு தனியாக 500 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒரு விடுதிக்கு 400 மாணவர்கள் வீதம் 1,325 விடுதிகளுக்கும் மொத்தமாக 60 கோடி ஒதுக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள விடுதிகளுக்கு மட்டும் பொருளாகவே வழங்கப்பட்டு வருகிறது. சென்னை தவிர மற்ற பகுதிகளுக்கு அந்தந்த விடுதிக்கு பணமாக செலுத்தப்பட்டு வருகிறது. இப்படி செலுத்தப்படும் தொகையில்தான் கொள் ளைத் தாண்டவம் ஆடியுள்ளனர் அரசு அதிகாரிகள்.

Advertisment

சென்னையில் உள்ள அரசு கல்லூரி களில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்து தங்கி பயிலுகின்ற மாணவர் களாகவே உள்ளனர். சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், ராயபுரம், மயிலாப்பூர், வில்லிவாக்கம் என 27 ஆதி திராவிடர் விடுதிகள் இருக்கின்றன. இதில் எந்த விடுதிகளிலும் அரசு விதியின் கீழ் செயல்பாடுகள் இல்லை. மெனுவின்படி காலை உணவுடன் டீ, காபி, இட்லியில் தொடங்கி, மாலை மட்டன், சுண்டல் என எதுவுமே மாணவர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. மூன்றுவேளையும் ஒரே வகையான சாப்பாடுதான். அதுவும் கல்லும், புழுவுமாய் உள்ளது என்று மாணவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். சாப்பாடு வடிக்கின்ற கஞ்சி தண்ணியில்தான் சாம்பார் செய்யப்படுகிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

rr

இப்படி போடப்படும் உணவில் இருந்துதான் ஊழலின் முதல் புள்ளி தொடங்குகிறது. அரிசி, பருப்பை திருவள்ளூர், திருத்தணி, கச்சேரிமேடுவில் உள்ள குடோன்களில் பதுக்கி வைத்து இரவோடு இரவாக 6 மாதத்திற்கு ஒருமுறை ஆந்திராவிற்கு கொண்டுசென்று விற்பனை செய்கிறார்கள். சென்னையில் உள்ள சில விடுதி காப்பாளர்களான சைமன், மனோகரன், அன்பழகன், மோகன் ஆகியோர் இந்த அமோக விற்பனையின் துருப்புச்சீட்டாக செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு அச்சாணியாக அமைச்சர் ராஜலட்சுமியின் பி.ஏ.வான ரவி இருந்துள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்கள் வருடம்தோறும் ரவிக்கு கப்பம் கட்டிதான் வருகிறார்களாம்.

Advertisment

அதேபோல விடுதிகளுக்கு மறுசீரமைப்பு என ஒரு விடுதிக்கு 1 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர், "இந்தந்த விடுதிகள் படுமோசமாக இருக்கிறது. அதனை மறுசீரமைக்க வேண்டும்' என்று ஆதி திராவிடர் இயக்குனரிடம் மனுவை கொடுப்பார். அவர் ஆதி திராவிடர் துறை அமைச்சருக்கு மனு கொடுத்து, தமிழக அரசு இதற்கான தொகையை ஒதுக்குகிறது. அந்த தொகையில்தான், மறுசீரமைப்பு என்ற பெயரில் பழைய சுவரின் மீது பெயிண்ட் மட்டும் பூசப்பட்டு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

rrஇந்த நிலையில் கோடம் பாக்கம், நந்தனம், விடுதிகளின் உள்ளே மின்சாரவயர் அறுந்து தொங்கி, குப்பையும், விரிசலு மாக உள்ளது. இப்படி வெளி யில் பார்ப்பதற்கு மினுக்காகவும் உள்ளே அழுக்காகவும் சென்னையிலுள்ள அனைத்து விடுதிகளும் உள்ளன. முக்கிய நகரமான சென்னையிலேயே இப்படி என்றால் மற்ற மாவட்டங்களின் கதி என்னவாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இது தொடர்பாக பேசிய கோடம்பாக்கம், நந்தனம் மாணவர்கள், ""காலம் காலமாக எங்களுக்கு இதே நிலைதான். நாங்கள் மெனுபடி சாப்பாடு வழங்குங்கள் என்று போராட்டம் செய்தால், போராட்டம் செய்கின்ற நாள் மட்டும் பொங்க லோ, புளியோதரையோ கொடுப்பாங்க. அப்புறம் பழைய கதைதான். நாங்கள் படிக்கவா? இல்லை தினந்தோறும் இவர்களோடு போராடவா?'' என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

விடுதி வார்டன்களிடம் கேட்டபோது, ""சார்... எங்களை எல்லாம் கேட்காதீங்க. போய் அமைச்ச ரையும், இயக்குநரையும் கேளுங்கள். அவர்கள்தான் இப்படி போடச்சொல்கிறார்கள்''’என்று வெளிப் படையான ஸ்டேட்மெண்ட் கொடுத்தனர். சமூக ஆர்வலர் அருங்குணம் விநாயகத் திடம் பேசியபோது, ""மாணவர் களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளில் 25 சதவீதம்கூட முறையாக போய் சேருவதில்லை. இதை செயல்படுத்த ஆதி திராவிடர் மாநில கமிட்டிக் குழு ஒன்று உள் ளது. அது rrrமுழுமையாக செயல் படுவதே இல் லை. அனைத்து டெண்டர்களும் அமைச்சரின் உறவுக்கே போ கிறது. பாதியை இவர்களே கொள்ளை அடித் துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. கிராமப் புறத்திலிருந்து சிட்டி நோக்கி வருகின்ற மாணவர்களுக்கு சொத்தாக இருப்பது கல்வி மட்டும்தான். அதையும் இப்படி செய்வது, கருக் கொலை செய்வதற்கு சமம்'' என்றார்.

இதுதொடர்பாக ஆதி திராவிடர் துறை இயக்குநர் முரளிதரனிடம் விளக்கம் கேட்டபோது, ’""அரிசி கடத்தியவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், மற்றபடி ஒன்றுமில்லை''’என்று முடித்துக் கொண்டார். மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ஹேமலதாவோ, இது தொடர் பாக எந்த பதிலும் கொடுக்க மறுத்துவிட்டார்.

தலித் மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் திருநாவுக் கரசுவிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, ""இதை தடுக்க தனிக் குழு இருந்தாலும் அவர் களும் ஒன்றும் விதிவிலக்கு இல்லை. இதைப்போன்று தவறு கள் நடக்காமல் இருக்க பயோ மெட்ரிக் பதிவு பொருத்தப்பட வேண்டும். அதன்மூலம் மாண வர்கள் எத்தனைபேர் இன்று சாப்பிட வந்தார்கள், எத்தனை பேர் வரவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவரும். இதை நடைமுறைப்படுத்த வேண்டும். விடுதியில் பணியாளர்கள் குறை வாக உள்ளனர். இந்த அரசு அதை சீர்செய்ய வேண்டும். இது போன்ற மோசடிக் கும்பலை வேலையைவிட்டே நீக்கினால் தான் கோடிக்கணக்கில் கொள்ளை நடக்காமல் இருக்கும். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலித் அமைப்புகளை திரட்டி மாநில அளவில் போராட்டம் நடத்து வோம்''’என்று எச்சரித்தார்.

-அ.அருண்பாண்டியன்