Advertisment

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஆதிதிராவிடர் நலத்துறை நிதியா? வெடிக்கும் சர்ச்சை!

dd

லைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுவரும் வேலைகள் விறுவிறுப்படைந்துவரும் சூழ்நிலையில், இதற்கு பொதுநிதியிலிருந்து செலவு செய்வதற்குப் பதிலாக ஆதிதிராவிடர் நலத்துறை நிதியிலிருந்து எடுத்துச் செலவு செய்வதாக ஒரு சர்ச்சை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப் படுகிறது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் 7ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சி யின் மாநிலப் பொதுச்செயலாளரான அன்புவேந் தன் ஜூலை 27ஆம் தேதி தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு அரசு

லைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுவரும் வேலைகள் விறுவிறுப்படைந்துவரும் சூழ்நிலையில், இதற்கு பொதுநிதியிலிருந்து செலவு செய்வதற்குப் பதிலாக ஆதிதிராவிடர் நலத்துறை நிதியிலிருந்து எடுத்துச் செலவு செய்வதாக ஒரு சர்ச்சை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப் படுகிறது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் 7ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சி யின் மாநிலப் பொதுச்செயலாளரான அன்புவேந் தன் ஜூலை 27ஆம் தேதி தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு அரசு பொதுநிதியி லிருந்து எடுக்காமல், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து எடுத்திருப்பது முற்றிலும் தவறானது என புகார் கொடுத்திருந்தார்.

dd

அந்த புகார் குறித்து தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன், தமிழக தலைமைச்செயலர், ஆளுநரின் செயலர் ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீ ஸில் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட் டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் பெயரில் விசாரணை நடத்த முடிவெடுத் துள்ளதாகவும், இதுதொடர்பான தகவல்களை 15 நாட்களுக்குள் அனுப்பவேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களிடமிருந்து எந்த பதிலும் வராத பட்சத்தில் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும்' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தப் புகாரை ஆதிதிராவிடர் நலத்துறை முற்றிலும் மறுத்துள்ளது. "நிதி ஒதுக்கீடு முறை யைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாகவே இந்த புகார் எழுந்துள்ளது. பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப கிடைப்பதை உறுதிசெய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும். தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில் தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோல்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடா மல், திட்டத்தின் பயன்கள் அவர்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது''’என தெரி வித்திருந்தனர்.

dd

ஆனால் சிறப்பு உட்கூறு திட்டத்திலிருந்து நிதியை எந்த காரணத்தைக் கொண்டும் பொதுத் திட்டத்திற்கு எடுக்கக்கூடாது என்பதுதான் கொள்கை விதி. எனவே இவர்கள் எப்படி எடுக்க முடியும்? ஆனால் அப்படியே எடுப்பதாக இருந்தாலும் இந்த சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்குவதால், மாநில அரசு இதுபோன்று ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பணம் எடுக்க தகுந்த காரணத்தைக் காட்டி ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும். அப்படி ஒப்புதல் பெற்றுள் ளார்களா?

பொதுத் திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி மக்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய்க்காகத்தான் 1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த மக்களுக்குத்தான் இந்தத் தொகை வழங்கப்படுகிறதா என்ற ஒரு கேள்வி எழுகின்றது. மற்றொன்று, இவர்கள் கொடுத்துள்ள விண்ணப்பப் படிவத்தில், எந்த இடத்திலும் இவர்கள் இன்ன சாதி என்பதைப் பற்றி தகவல் கேட்காத பட்சத்தில் எப்படி இவர்கள் அந்த மக்களுக்குத்தான் கொடுத்தார்களா என தெரியவரும்?

sd

ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து 1,540 கோடி எனச் சொன்னாலும், மிச்சமுள்ள தொகை எந்தத் துறையிலிருந்து ஒதுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கம் அரசுத் தரப்பிலிருந்து சரிவர விளக்கப்படவில்லை. இவை அனைத்திற்கு மான பதில் தேசிய ஆணைய விசாரணையின் முடிவில் கிடைக்கும்.

இதுகுறித்து இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச்செயலாளர் அன்புவேந்தனிடம் கேட்டபோது, "தேசிய ஆணையம் கேட்ட விளக்கத்திற்கான எந்த பதிலும் இன்னும் அரசு தலைமைச்செயலாளர் மற்றும் ஆளுநர் செயலரிடமிருந்து வரவில்லை. காலம்காலமாக ஆதிதிராவிட மக்களின் நிதி இந்த மக்களுக்குக் கிடைப்பதே இல்லை. ஒன்று திருப்பியனுப்பு வது, இல்லையென்றால் இவர்கள் அரசியல் வாக்குறுதிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வது என்றே நடக்கிறது. இது முறைதானா?'' என்றார்.

nkn090823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe