"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறதே''”
"ஆமாம்பா, தீபாவளிக்கு முன் சட்டப் பேரவை கூடுவதாகச் சொல்கிறார்களே?''’
"உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றம் வருகிற 14ஆம் தேதி கூடுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூடவேண்டும் என்கிற மரபுப்படி இந்த கூட்டம் கூட்டப்படுறது. 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், இந்தக் கூட்டம் அதிகபட்சம் 4 நாட்கள் மட்டுமே நடக்கும் எனத் தெரிகிறது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ரோட் ஷோவுக்கு தடை விதித்துள்ளது தி.மு.க. அரசு. இதனால், கடந்த 2 மாதங்களாக மக்களிடம் பரப்புரை பிரச்சாரத்தை நடத்தி வந்த எடப்பாடி, தன் பயணத்தை ரத்து செய்துவிட்டார். தே.மு.தி.க. பிரேமலதாவின் பிரச்சாரத்துக்கும் போலீஸ், அனுமதி தர மறுத்துவிட்டது. எதிர்காலத்தில் ரோட் ஷோ நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், கருர் சம்பவத்தை மையப்படுத்தி ஆளும் கட்சியை அட்டாக் செய்யும் வகையில், பல்வேறு பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்து வைப்பதற்காக, அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இப்போதே பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறதாம்.''”
"இந்த சட்டமன்றக் கூட்டம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறதே?''”
"அதுக்குக் காரணங்கள் இருக்கு தலைவரே, செங்கோட்டையனிடமிருந்து கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட பிறகு அவர் கலந்துகொள்ள இருக்கும் முதல் கூட்டம் இது. இப்படி ஒரு சூழலில் அவர் எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர் களை சபையில் எதிர்க்கொள்ள இருக்கிறார். அதேபோல, பா.ம.க.வில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக நடந்த மோதலில், எந்த சமரசமும் ஏற்படவில்லை. இந்த சூழலில், பா.ம.க. எம்.எல். ஏ.க்கள் 5 பேரில் 3 பேர் அன்பு மணியையும், 2 பேர் ராமதாசையும் ஆதரித்துவருவதால், இந்தக் கூட்டத்தில் அவர்களின் சந்திப்பு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. பா.ம.க.வின் சட்டமன்ற கொறடாவாக அருள் இருந்துவருகிறார். அவரை நீக்கிவிட்டதாக சபாநாயகர் அப்பாவுக்கு அன்புமணி தரப்பி-ருந்து கடிதம் தரப்பட்டுள்ளது. இதை சபாநாயகர் ஏற்பாரா? மறுப்பாரா? என்கிற கேள்வியும் பா.ம.க.வில் சிறகடிக்கின்றன.''’
"செங்கல்பட்டு மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா அக்டோபர் 4-ஆம் தேதி சிறப்பா நடந்து முடிஞ்சிருக்கே''”
"ஆமாப்பா, இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "தி.க.வின் நீட்சிதான் தி.மு.க., தமிழ்நாட்டின் உரிமைகளை, பகுத்தறிவு, சமூகநீதிச் சிந்தனை உள்ளிட்டவற்றை பாதுகாக்கிறோ மென்றால், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர் விட்டதுதான் அதற்குக் காரணம். 92 வயதிலும் ஓய்வின்றி உழைத் துக்கொண்டிருக்கும் தமிழர் தலைவர் அய்யாவுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்'னு உருக்கமா பேசினார். விழாவில் திரளாக தி.க. தலைவர்களும், தி.மு.க. தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தனர். விழாவில், திருச்சி சிறுகனூரில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் பெரியார் உலகத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 126 பேர், எம்.பி.க்கள் 31 பேரின் ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக அளித்தது கவனத்தை ஈர்த்தது.''’
"தி.மு.க. ஆட்சியிலும் அரசுப் பணி மோசடியில் எடப்பாடி மகன் மிதுன் பெயர் அடிபடுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை -நுங்கம் பாக்கம் பார் ஒன்றில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மகன் செல்வபாரதி என்பவருக்கும், தூண்டில் ராஜா என்பவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பிரமுகர்களான பிரசாத், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் களமிறங்க, அனைவரையும் நுங்கம்பாக் கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்திருக் கிறார்கள். அவர்களிடம் விசாரித்தபோது கட்டப் பஞ்சாயத்து, போதைப் பொருள் விற்பனை என இந்த டீம் இல்லீகல் சமாச்சாரங்களில் இறங்கிவந்ததோடு, அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறியும் மோசடி செய்துவந்தது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க. பிரசாத்தும், ஐ.ஏ.எஸ். குடியிருப்பில் வசித்துவரும் கணேசன் என்பவரும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே பலரிடமும் பணம் வாங்கிக்கொண்டு, எடப்பாடி மகன் மிதுன் மூலம் பல டிரிக்குகளைப் பயன் படுத்தி, அரசு வேலையைப் பெற்றுக்கொடுத்தார் களாம். அந்த நம்பிக்கையைக் காட்டியே, இந்த தி.மு.க. ஆட்சியிலும் இந்த டீம் பலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் வசூலித்திருக்கிறதாம். இந்த வசூலில் 50 சதம் எடப்பாடி மகன் மிதுனுக்குச் சென்றுவிடுமாம். பணம் கொட
த்தவர்கள் நெருக்கும்போது, "அடுத்து அ.தி.மு.க. ஆட்சிதான் வரப்போகிறது, வேலை நிச்சயம்' என்று அவர்களை டபாய்த்துவருகிறார் களாம். இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்வது என போலீஸே குழம்பிவருகிறதாம்.''”
"உத்தரகாண்ட் போன ஆதவ் அர்ஜுனாவை பாதுகாப்புத்துறை கண்காணித்தது என்கிறார் களே?''”
"ஆமாங்க தலைவரே, இவ்வளவு களேபரத் திற்கு நடுவிலும் த.வெ.க. பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, உத்தரகாண்டில் நடக்கும் பாஸ்கட் பால் மாநாட்டிற்குச் சென்றிருக்கிறார். அவரைப் பாதுகாப்புத்துறை கண்காணித்துவருகிறது. அந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. முதல்வர் புஸ்கர்சிங் தாமி இருந்திருக்கிறார். உடனே அவரை, அங்குள்ள உளவுத்துறை, சட்டச் சிக்கலோடு தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனாவுடன் நிகழ்ச்சியில் இருக்காதீர்கள் என்று எச்சரித்திருக்கிறது. தமிழகம் மணிப்பூராக மாறும் என்று ஆதவ், டுவீட் போட்டதை டேஞ்சரஸாகப் பார்க்கிறது என்.ஐ.ஏ. இதெல்லாம் ஆதவ்வுக்கு மோசமான இமேஜை இப்போது உருவாக்கியிருக்கிறது.''”
"விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே?''”
"கரூர் நிகழ்வுக்கு முன் நாமக்கல் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு விஜய் கரூரை நோக்கிச் சென்றபோது, கரூர் மாவட்ட எல்லையான தளவாபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட விஜய் ரசிகர்கள் சிலர், அவர் வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். அப்போது கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி அருகே அதில் இருவரின் வாகனம், விஜய் வாகனத்தின் பக்கவாட்டில் இடிபட்டு, சக்கரத்தருகே அவர்கள் வாகனங்களுடன் விழுந்தனர். மயிரிழையில் அவர்கள் உயிர் தப்பினர். இந்த பகீர் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், "விஜய்யின் பரப்புரை வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?' என்று கேள்வியையும் எழுப்பியது. இதைத் தொடர்ந்து கரூர் வேலாயுதம்பாளையம் போலீ ஸார், விஜய் வாகனத்தின் ஓட்டுநர் மீதும் இருசக்கர வாகனங்களில் சென் றவர்கள் மீதும் வழக்கைப் பதிவு செய்தனர். விஜய் யின் வாகனத்தையும் பறிமுதல் செய்ய போலீஸ் திட்டமிட்டிருப்ப தாகவும் சொல்கிறார்கள்.''”
"இப்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார்களே?''”
"தேர்தல் நெருங்கிவருவதால், சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மீண்டும் தங்கள் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி யில் இறங்கிவிட்டார்கள். அவர்களில் ஒருவரான நாங்குனேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், இந்தமுறை தனக்கு சீட் கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் பரிதவிக்கிறார். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்டர் விவகாரத் தில் தானும் விசாரணை வளையத்தில் இருப்பதால், கட்சித் தலைமை சீட் கொடுக்காது என்று நினைக்கிறார். அப்படியே சீட் கொடுத்தாலும் தங்கள் கட்சியைச் சேர்ந்த நெல்லை எம்.பி.யான ராபர்ட் புரூஸ், தனக்கு மீண்டும் சீட் கிடைப்பதை விரும்பவில்லை என்பதையும் புரிந்துவைத்திருக் கிறார். அதனால் இந்தமுறை நாங்குனேரியில் தன் மகனான அசோக்மேனனுக்கு சீட் தரமுடியுமா? என்று டெல்லியை முற்றுகையிட்டாராம். அங்கு க்ரீன் சிக்னல் கிடைக்காததால், விளவங்கோட்டி லாவது தனக்கோ, தன் மகனுக்கோ சீட் வாங்கி விடவேண்டும் என்று அல்லாடிவருகிறாராம் ரூபி.''”
"பா.ஜ.க. தரப்பில் சலசலப்பு தெரிகிறதே?''”
"தமிழக பா.ஜ.க.வில் சென்னையில் மட்டும் அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 7 மாவட்டங்களிலும் கட்சியின் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் தென்சென்னை மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சஞ்சீவி. தென் சென்னையில் பா.ஜ.க.வில் பல்வேறு அணிப் பொறுப்பாளர் நியமனங்களை இவர் விலை பேசி விற்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தன் இஷ்டம்போல் ஏகத்துக்கும் லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டுதான், ஒவ்வொரு அணி பொறுப்பாளர்களையும் அவர் நியமித்து வருகிறாராம். இந்த விவகாரம் தென்சென்னை பா.ஜ.க.வில் ஒரே புகைச்சலாக இருந்து வருகிறது. விரைவில் இந்த விவகாரம் கமலாலயத்தில் பகிரங்கமாக வெடிக்கும் என்கிறார்கள்''”
"டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்ல அதிகாரி ஒருவரைப் பற்றியும் விமர்சனங்கள் வருகிறதே?”
"தமிழக அரசின் கட்டுப்பாட்டில் டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் ரெசிடென்ஸியல் கமிஷனராக இருப்பவர் ஆசிஸ்குமார். இவரது நிர்வாகத்தில் அங்கே பல சீர்கேடுகள் நடப்பதாக ஓயாத புகார்கள் எழுந்து வருகின்றன. இவரிடம் அதிக நெருக்கம் பாராட்டி வரும் அவரது பர்சனல் உதவியாளர், கேட்டரிங் மேனேஜர், சூப்பிரடெண்ட் ஆகிய மும் மூர்த்திகள் வைத்ததுதான் அங்கு சட்டமாக இருக்கிறதாம். இந்த மும்மூர்த்திகளால் அரசு ரகசியங்கள் வெளியே கசிகிறதாம். இதனால் மத்திய அரசு தரப்பிலிருந்தே ஆசிஸ்குமாரை எச்சரிக்கை செய்தார்கள் என்கிறார்கள். இருந்தும் அவர் இதுகுறித் துக் கவலைப்படவில் லையாம். கடந்த ஆண்டு கலைஞருக்கு தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்த நிலையில், கலைஞரின் தோற்றம் குறித்து இவரிடம் சில கேள்விகள் கடிதம் மூலம் வைக்கப்பட்டதாம். அதற்கு 50 நாட்களுக்கு மேலாகியும் இவர் பதில் தரவில்லையாம். பிறகுதான் அவர் அந்தக் கடிதத்தைப் பிரித்தே பார்க்கவில்லை என்பது தெரியவந்ததாம். பிறகு சிக்கலைத் தீர்த்து அந்தத் தபால்தலையை வெளி யிட்டிருக்கிறார்கள். இப்படிப் பல உதாரணங்களைக் காட்டி, இவரது ’அக்கறை யைப் பற்றிச்சொல்லி பலரும் இவரைக் கடுமையாக விமர் சித்துவருகிறார்கள்.”
"நீதிமன்ற உத்தரவு வந்ததும் ஐ.ஜி. அஸ்ராகார்க் ஜரூரா கரூர்ல விசாரணை யைத் தொடங்கிட்டாரே''”
"ஆமாங்க தலைவரே, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில நாமக்கல் எஸ்.பி. விமலா, சிவில் சப்ளை சி.ஐ.டி. எஸ்.பி சியாமளா தேவி அடங்கிய எஸ்.ஐ.டி. குழுவினர் கரூர் -வேலுச் சாமிபுரம் பகுதியில் சம்பவ இடத்தில் ஆய்வில் ஈடு பட்டிருக்காங்க. கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள், மரம் முறிந்து கீழே விழுந்தவர்கள், சாக்கடைகளில் சிக்கி உயிரிழந்த வர்கள் குறித்த விவரங்களையும், இதுவரை கைப்பற்றப்பட்ட தடயங்கள் குறித்தும் உள்ளூர் போலீசார் விளக்கமளிச்சிருக்காங்க. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலான ஆய்வில், அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு வளையத்துக்குள்ளான பகுதியில் மட்டும் 30 நிமிடத்திற்கு மேலாக ஆய்வில் ஈடுபட்ட ஐ.ஜி. அஸ்ரா கார்க் குழுவினர், அந்த பகுதிக்கு எதிர்த்திசையில் உள்ள வணிகக் கட்டிடங்கள் அமைந்துள்ள மற்றொரு பகுதியிலும் ஆய்வு செஞ்சிருக்காங்க. இந்த விவரம் தெரிஞ்சு செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்ட நிலையில், இப்போதைக்கு விளக்கம் எதுவும் தரமுடியாது, ஆய்வு முடியட்டும்னு அவர்களைத் திருப்பி யனுப்பிட்டார். "நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த அதிகாரி ஐ.ஜி. அஸ்ராகார்க் விசாரணையப் பார்த்து த.வெ.க.வினர் கதறப்போறாங்க பாருங்க'ன்னு கிசுகிசுக்கிறார்கள் கரூர்வாசிகள்.''’
"எடப்பாடி கட்சியில அதிரடி மாற்றம் செய்யவிருக்கிறாராமே?''
"ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க.வின் கட்டமைப்பை மாற்ற முடிவெடுத்திருக்கும் எடப்பாடி, மண்டலப் பொறுப்பாளர்களைப் புதிதாக நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். அதேபோல் மா.செ.க்கள் பலரையும் அவர் மாற்றவிருக்கிறாராம். இது கட்சிக்குள் பூகம்பங்களை உருவாக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த அதிரடி மாற்றங்களை அவர் இந்த வாரமே செய்யவிருக்கிறார் என்கிறது அ.தி.மு.க. தரப்பு.’
"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில் சிறப்பாக செயல்பட்டுவரு கிறாராம். முதல்வரின் பல்வேறு நலத் திட்டங் களை மாவட்டத்திலுள்ள மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டியதால், மாவட்டத் தில் ஆளுங்கட்சி மீதான மதிப்பும் மரியாதையும் நன்முறையில் இருக் கிறதாம். வரவுள்ள தேர்தலில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் சூழலில், தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு, தலைமையிடம் செல்லப் பாண்டியன் வாய்ப்புக்கேட்டு வருகிறாராம். ஆனால் அதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களான மெய்யநாதனும் ரகுபதியும், செல்லப்பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைக்காதபடி தடுக்கப் பார்ப்பதாக புகைச்சல் கிளம்பியிருக்கு தலைவரே.''
____________
_______________
இறுதிச் சுற்று!
அவதூறு... கைது!
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு தடைகோரி சமையற்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 6ஆம் தேதி, திங்களன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது. இவ்வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, "சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சிக்கிறார்கள். உத்தரவுகளை பிறப்பித்ததற் காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், முந் தைய கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டு விமர்சிக் கிறார்கள். சமூக வலைத்தள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்'' என்று அவர் கூறியிருக் கிறார். இந்நிலையில், நீதிபதிகள் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி புதுக்கோட்டையைச் சோந்த கண்ணன், பர்கூரைச் சேர்ந்த டேவிட், சென்னை யைச் சேர்ந்த ஹஸ்தினாவுரம் சசி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-கீரன்