ர்கூடித் தேர் இழுப்பதைப் பார்த்திருப் போம்... இங்கோ, இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் முதலீடு, ஒன்றிய அரசின் முழு ஆதரவோடு முறைகேடான வகையில் கொழுத்த அதானி குழுமத்தை விசாரணைக்கு உட்படுத்த, எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் சேர்ந்து தேரின் வடத்தை இழுக்கவேண்டியுள்ளது!

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி இவ்விவகாரம் குறித்து கடுமையாக விவாதித்ததோடு, மோடிக்கு 5 கேள்வி களையும் முன்வைத்தார். ஆனால் மோடியோ, நிர்மலா சீதாராமனோ வாயே திறக்கவில்லை. இவர்களின் கள்ள மவுனமே அதானி குழுமத்தின் மோசடியை உறுதிப்படுத்து கிறது. மோடியின் ஒன்றிய அரசு, அதானிக்கு பக்கபலமாக இருந்து, அந்நிறுவனத்தின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தது. ஆனால் கண்கொத்திப்பாம்பான பங்குச்சந்தை முதலீட்டாளர்களோ, இவர்களை நம்பத் தயாரில்லை. அதானி குழுமத்தின் மதிப்பு, மரியாதை, நம்பகத்தன்மை முழுக்க சரிந்ததால், அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை முதலீட்டு மதிப்பும் சீட்டுக்கட்டு போல் நாளுக்குநாள் சரிந்தது. உலக பணக்காரர்கள் வரிசையில் இரண் டாமிடத்திலிருந்து அதானி, 38வது இடத்துக்குத் தள்ளப் பட்டார்.

dd

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், அதானி குழுமத் தின்மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இதற்காக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளி யேயும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கு மோடி உடன்படாத நிலையில், "அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பாரதிய ஜனதாவிடம் எதுவும் இல்லை' என்று பொத்தாம்பொதுவாக அமித்ஷா கூறினார். இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசைப்போலவே பாசாங்குத்தனம் செய்துவந்த ஒழுங்கு முறை அமைப்பான செபிக்கும், ரிசர்வ் வங்கிக்கும், இவ்விவகாரம் தொடர்பாக அதானி குழுமத்தை விசாரிக்க வேண்டுமென்று காங். கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், "அதானி குழுமத்தின் அதிகப்படியான கடன் நிலை, இந்திய வங்கி அமைப்புகளை தற்போதும், எதிர்காலத்திலும் பாதிக்காது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், செபிக்கு எழுதிய கடிதத்தில், அதானி குழுமம் முறைகேடாக பங்குகளைக் கையாண்டுள்ள விதம், இந்தியச் சட்டங்களுக்கும், செபியின் விதிமுறைகளுக்கும் முரணாக உள்ளது. எனவே இந்நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படாமல் நேர்மையாகவும், முழுமையாகவும் விசாரணையை நடத்தவேண்டும்' என்று கண்டிப்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஒன்றிய அரசின்மீது நம்பிக்கையிழந்த சமூக ஆர்வலர்கள் பலரும், அதானி குழுமத்தின்மீது விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைப் பதிவுசெய்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கத் தொடங்கியது. விசாரணையின் தொடக்கத்தில், முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாக்க உரிய ddவழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டுமென்றும், அதற்கென வல்லுநர் குழு அமைக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதனை, அதானி ஆதரவு ஒன்றிய அரசு வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொண்டது.

Advertisment

அதற்கடுத்ததாக, அதானி மீதான விசாரணைக்கான வல்லுநர் குழுவை, தங்களுக்கு ஆதரவானவர்களைக்கொண்டு உருவாக்கி, அதனை மிகவும் ரகசியமாக ஒரு சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்திடம் வழங்கியது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான செயல் நீதிபதிகளைக் கடுப்பேற்றவே அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதானி குழுமத்தின் மீதான வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், இந்த விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டு, இதுதொடர்பாக 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை கடந்த வியாழனன்று அறிவித்தது. அக்குழுவில், முன்னாள் நீதிபதி தேவதர், வங்கித்துறையைச் சேர்ந்த வல்லுநர் கே.வி.காமத், முன்னாள் எஸ்.பி.ஐ. சேர்மன் ஓ.பி.பட், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி, மூத்த வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு இவ்விவ காரம் தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாத காலத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், செபி அமைப்பானது, இரண்டு மாத காலத்துக்குள் தனது விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஒருபுறம் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், இன்னொருபுறம், வல்லுநர் குழுவின் விசாரணையும், செபியின் விசாரணையும் முறையாக நடக்குமா என்ற கேள்வியும் எழு கிறது. இதற்கிடையே தங்கள் நிறு வனத்துக்கு சர்வதேச அளவில் முத லீட்டைக் குவிப்பதற்கு சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்கா, இங்கி லாந்து, ஐக்கிய அரபு நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி யுள்ளது. இத்தனை களேபரங் களுக்கு இடையே, அதானி குழுமத் தைச் சேர்ந்த 4 நிறுவனங்களில், சுமார் 21 கோடி பங்குகளை, அமெ ரிக்காவிலுள்ள முதலீட்டு ஆலோ சனை நிறுவனமான ஏணஏ டஹழ்ற்ய்ங்ழ்ள் ஒய்ஸ்ரீ நிறுவனம், 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இதன் விளை வாக அதானி குழும பங்குகளில் சிறிதளவு ஏற்றம் ஏற்பட்டபோதும், அந்த ஏணஏ குழுமத்தின் பங்குகளின் மதிப்பு 3.5 சதவீதம் சரிவைச் சந்தித் தது! இப்படியாக, அதானி குழுமத் தின் மீதான விசாரணை ஒருபுறம், அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் மறுபுறமென்று பங்குச்சந்தையே பரபரப்பாக உள்ளது!