சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநர் பொறுப்பிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியம், சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளார். ஏன் அவர் நீக்கப்பட்டார்?
அதற்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக் இருக்கிறது.
கடந்த ஆண்டு கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியம் புத்தகம் ஒன்று எழுதினார். India@100: Envisioning Tomorrow's Economic Powerhouse என்ற அந்தப் புத்தகத்தை ரூபா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்னரே யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகம் 2 லட்சம் பிரதிகள் ஆர்டர் போட்டது. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் ஒவ்வொரு மண்டல மும் இந்தப் புத்தகத்தின் பேப்பர் பேக் பிரதிகள் 10,455, ஹார்ட் கவர் பிரதிகள் 10,522 வாங்கவேண்டுமென எழுத்துப்பூர்வமில்லாத உத்தரவு பறந்துள்ளது. இந்தப் புத்தகத்தினை வாங்க யூனியன் பேங்க் ஆப் இந்தியா 7.25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/book_35.jpg)
வாடிக்கையாளர்கள், மேனேஜர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டுள் ளது. ஆனாலும் வங்கி ஊழியர்களில் யாரோ ஒருவர் இந்த தகவல்களை எல்லாம் இந்திய அரசுக்கு புகார் செய்திருக் கிறார்கள். 2 லட்சம் புத்தகங்களை வாங்கி விநியோகிக்கத் துணைபுரிந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா சப்போர்ட் சர்வீஸ் பிரிவின் கிரிஜா மிஸ்ராவையும் பணியிலிருந்து தூக்கியிருக்கிறார்கள்.
சரி, யாரோ ஒரு கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியத்தின் புத்தகத்தை ஏன் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாங்கி விநியோகிக்கவேண்டும்? அது என்ன வங்கியா,.. புத்தகக் கடையா?
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளா தார ஆலோசகர்தான் இந்த கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியம். இப்போது இந்த விஷயத்தின் முழுப் பரிணாமமும் உங்களுக்குப் பிடிபட்டிருக்கும்.
இதே கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியம்தான், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் போன்ற பல உயர் பதவிகளை வகித்தவர். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஐ.எம்.எஃப்.பின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டவர்.
அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்தில் பாகிஸ்தானுக்கு கடனுதவி அளிப்பது தொடர்பான கூட்டம் நடைபெறவிருந்தது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா இந்த நிதியுதவி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தது. அமைப்பின் செயல் இயக்குநராக இருக்கும் சுப்பிரமணியம், இந்தியாவின் கருத்தை பிரதிபலிக்கலாம் என்ற நோக்கில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருதரப்பும், ஐ.எம்.எஃப்.பின் தரவுகளில் வெளிப்படைத்தன்மை, பாரபட்சம் குறைவாக இருப்பதாக விமர்சித்திருந்ததால் நீக்கப்பட்டார் என ஒருதரப்பும் கூறிவருகின்றன.
அதுசரி, தனது புத்தகத்தை வங்கியின் தலைமை அலுவலகத்தின் மூலமே 2 லட்சம் பிரதிகள் வாங்கி விநியோகிக்கும் வெளிப்படைத்தன்மை யாருக்கும் அத்தனை எளிதில் வாய்த்துவிடாதுதான்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/book-t.jpg)