ஆதீனத்தின் திருமணம்! சூரியனார்கோயில் சர்ச்சை!

ss

சூரியனார்கோயில் ஆதீனம், திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஆன்மீக வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள சூரியனார்கோயில் ஆதீன மடம், தமிழகத்தி லுள்ள பழமையான சைவ மடங்களுள் ஒன்று. இந்த மடத்தின் 28வது மடாதிபதியாக மகா லிங்க தேசிக பண்டார சுவாமிகள் இருக்கிறார். இவருக்கு வயது 54. இவர், கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ என்கிற பெண்ணை பதிவுத் திரு மணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. திருமணத்திற்கான பதிவுச் சான்றிதழும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பானது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியே மடாதிபதி மகாலிங்க சுவாமிக்கும், 47 வயதாகும் ஹேமாஸ்ரீ என்ற கர்நாடக பெண்ணுக்கும், கர்நாடகாவில் முறைப்படி பதிவுத் திருமணம் நடந்திருப்பதை சூரியனார்கோயில் மடத்தின் நிர்வாகமும், ஒப்புக்கொண்டது.

aa

தமிழகத்திலுள்ள 18 சைவ ஆதீனங்களில், முன்பிருந்த ஆதீனங்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் 28வது மடாதிபதி திருமணம் செய்து க

சூரியனார்கோயில் ஆதீனம், திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஆன்மீக வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள சூரியனார்கோயில் ஆதீன மடம், தமிழகத்தி லுள்ள பழமையான சைவ மடங்களுள் ஒன்று. இந்த மடத்தின் 28வது மடாதிபதியாக மகா லிங்க தேசிக பண்டார சுவாமிகள் இருக்கிறார். இவருக்கு வயது 54. இவர், கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ என்கிற பெண்ணை பதிவுத் திரு மணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. திருமணத்திற்கான பதிவுச் சான்றிதழும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பானது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியே மடாதிபதி மகாலிங்க சுவாமிக்கும், 47 வயதாகும் ஹேமாஸ்ரீ என்ற கர்நாடக பெண்ணுக்கும், கர்நாடகாவில் முறைப்படி பதிவுத் திருமணம் நடந்திருப்பதை சூரியனார்கோயில் மடத்தின் நிர்வாகமும், ஒப்புக்கொண்டது.

aa

தமிழகத்திலுள்ள 18 சைவ ஆதீனங்களில், முன்பிருந்த ஆதீனங்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் 28வது மடாதிபதி திருமணம் செய்து கொண்ட தால் மடத்தின் மாண்பு குறைந்து விட்ட தென்று திருவாவடுதுறை ஆதீனம் தரப்பில் கூறுகின்றனர். தமிழகத்திலுள்ள பாரம்பரியமிக்க ஆதீனங்களான தருமபுரம் ஆதீனத்திற்கும், திருவாடுதுறை ஆதீனத்திற்கும் இடையே அரசியல்வாதிகளை மிஞ்சிடும் அளவிற்கு மோதல் போக்கு நிலவிவருகிறது. திருவாவடு துறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் இருந்தாலும், அதன் ஆதீனகர்த்தரான மகாலிங்க தேசிகர் தரும புரம் ஆதீனத்திற்கே ஆதரவாக இருந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு புதிய நாடாளு மன்றத் திறப்பு விழாவிற்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் குறித்து மகாலிங்க சுவாமிகள் பேசியதாகவும், சமூக வலைத்தளத்தில் செங்கோல் குறித்து தவறான தகவல்களைப் பதிவிட்டதாகவும் குறிப்பிட்டு, ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீன கர்த்தர் பதவியிலிருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, திருவாவடுதுறை ஆதினம் சார்பில், சூரியனார் கோயில் ஆதீன கர்த்தருக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். அதன்பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த சூரியனார்கோயில் ஆதீனம், ’"இந்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை, இதற்கு எவ்வித பதிலும் நான் தரப்போவ தில்லை''’என்று பதிலடி கொடுத்ததும் விவகாரம் பெரிதானது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராம்நகர் சிவராமய்யா ஹேமாஸ்ரீயை திருமணம் செய்த விவகாரத்தை கசியவிட்டு, பதவி நீக்கம் செய்யப்போகிறோம் எனப் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர்.

aa

இதுகுறித்து ஆதீனங்களோடு நெருக்க மானவர்களிடம் விசாரித்தோம். "பாரம்பரிய மிக்க ஆதீனங்களான மதுரை, திருவாவடுதுறை, தருமபுரம், சூர்யனார்கோயில் ஆகிய நான்கு ஆதீனங்களும் சமீப காலமாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக்கிவிடுகின்றனர். நான்கு ஆதீனங்களிலும் ஆதீன கர்த்தராக இருக் கும் நான்கு பேருமே இதற்கு முன்பு கட்டளை தம்பிரான்களாக இருந்தவர்கள். நான்கு ஆதீனங்களின் ஆதீன கர்த்தர்கள் அடுத்தடுத்து இறந்ததால் அந்த இடத்திற்கு வந்தவர்கள், அரசியல்வாதிகளை மிஞ்சிடும் அளவிற்கு ஆதீன அரசியல் செய்கின்றனர். தருமபுரம் ஆதீனமான மாசிலாமணி சாமிகளுக்கும், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிகர் சாமிகளுக்கும் இடையே வெளிப்படையாகவே யார் பெரிய ஆள் என்கிற பிரச்சனை நடக்கிறது. சூரியனார்கோயில் ஆதீன கர்த்தரான மகாலிங்க சாமியும், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசி கர் சாமிகளும் தருமபுரம் ஆதீனத்திற்கு நெருக்க மாக இருக்கிறார்கள். தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருப்பனந்தாள் மடாதி பதி, திருவாவடுதுறையோடு மறைமுக நெருக்கத் தில் இருக்கிறார். தருமபுரம் ஆதீனம் அவ்வப் போது சர்ச்சைகளில் சிக்கும்போது சூரியனார் கோயில் ஆதீனமும், மதுரை ஆதீனமும் முட்டுக்கொடுத்து தாங்கி நிற்பார்கள். இந்த சூழலில்தான் 54 வயதுடைய மகாலிங்க சுவாமி, கர்நாடகாவிலுள்ள ஹேமாஸ்ரீயை திருமணம் செய்துகொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. இதனையும் திருவாவடுதுறை ஆதீனத் தரப்பே வெளியிட்டுள்ளது''’என்கிறார்கள்.

aa

இதுகுறித்து சூரியனார் கோயில் ஆதீனத்தின் மடாதிபதி மகாலிங்க சுவாமிகளைத் தொடர்புகொண்டு கேட்டோம். "நான் ஹேமாஸ்ரீயை திருமணம் செய்துகொண்டது உண்மைதான். கர்நாடகாவில் வீர சைவ மடம், வைணவ மடம், பண்டிட் ரவிசங்கர் ஜி மடம், ராஜராஜேஸ்வரி பீடம் எனப் பல மடங்கள் உள்ளன. ஆனால் சைவம் அங்கு இல்லை. அத னால் சைவ மடம் கட்டுவதற்கான ஏற்பாட்டை செய்துவருகிறேன். இதற்கு பிடரி நகரிலுள்ள தனது சொந்த இடத்தை ஹேமாஸ்ரீ கொடுத் தார். அங்கு கட்டப்படும் மடத்தின் டிரஸ்டியாக ஹேமாஸ்ரீயை நியமனம் செய்துள்ளோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அவரை திருமணம் செய்துள்ளேன். நான் மரபுகளை மீறவில்லை. சூரியனார் கோவில் ஆதீனத்தில் மட்டுமின்றி சில மடங்களில் இதற்கு முன்பு மடாதிபதியாக இருந்தவர்கள் திருமணம் செய்துள்ளனர். ஆதீனத்தின் பூஜைகள், நிர்வாகப்பணிகள் எப்போதும்போல் சரியாக நடக்கும். சூரியனார்கோயில் ஆதீனத்தில் ஹேமாஸ்ரீ பக்தராக மட்டுமே வந்து செல்வார்''’என்கிறார் கூலாக. கர்நாடகாவிற்கு போனால் கணவன் மனைவி... தமிழகம் வந்தால் ஆதீனம்... சீடர்! சம்சாரியான மடாதிபதி!

nkn131124
இதையும் படியுங்கள்
Subscribe