"விடாது கருப்பு' என்பது போல், இந்திய ஏற்றுமதிகளின் மீது விரட்டி விரட்டி வரி போடுவதை விடுவதாக இல்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப். லேட்டஸ்டாக, இந்தியாவி லிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசி மீது கூடுதல் வரி விதிக்கப்படுமென்று மிரட்டி யிருக்கிறார்.
விவசாயம் மற்றும் விவசா யத் துறையின் பிரதிநிதிகளோடு வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில், இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் பாஸ்மதி அரிசி இறக்குமதியாவதால், உள்நாட்டு உற்பத்தி அரிசி விற் பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, "இந்தியா தனது பாஸ்மதி அரிசியை அமெரிக்கா வில் கொட்டுகிறது. இதனால் பாஸ்மதி அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கும் நிலை வரலாம்'' என்று ட்ரம்ப் தெரிவித்தது, இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர் கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024-2025 நிதியாண்டில், இந்தியா ரூ.3510 கோடி மதிப் புள்ள, 2,74,213.14 மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசியை அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில், நான்காவது பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. 1960களி லிருந்து, அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யத் தொடங்கிய இந்தியா, அதற்கு மாற்றாக அமெரிக்காவுக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்து நம் நாட்டில் கோதுமை உற்பத்தி அதி கரிக்கத் தொடங்கியதும், கோதுமை இறக்குமதியை குறைத்துக்கொண் டோம். ஆனால் இந்திய பாஸ்மதி அரிசியின் விலை குறைவாக இருப்பதால், பாஸ்மதி ஏற்றுமதி குறைவில்லாமல் நடந்துவந்தது.
அமெரிக்காவுக்கு பாஸ் மதி அரிசியை சீனா, தாய் லாந்து போன்ற நாடுகள் ஏற்று மதி செய்தபோதிலும், இந்தியாதான் முதன்மை நாடாக உள்ளது. இந்தியா வின் பாஸ்மதி அரிசிக்கு மாற்றாக, டெக்ஸாஸ் மாகாணத்தின் ரைஸ்டெக் நிறுவனம், பாஸ்மதி அரிசியின் கலப் பினமாக, டெக்ஸ்மதி அரிசியை உரு வாக்கியது. எனினும், இந்த அரிசியில், இந்திய பாஸ்மதி அரிசியின் சுவையும், மணமும், மிருதுவான தன்மையும் இல்லையெனக்கூறி, அமெரிக்கர்கள் டெஸ்மதி அரிசியை பெரிதும் விரும்ப வில்லை. அடுத்ததாக, தாய்லாந்து ஏற் றுமதி அரிசியான ஜாஸ்மின் அரிசியைக் கொண்டு, கலப்பினமாக ஜாஸ்மதி அரிசியை அமெரிக்கா உருவாக்கியது. இந்த அரிசியாலும், இந்திய பாஸ்மதி அரிசியின் சுவையை அடித்துக்கொள்ள முடியவில்லை. எனவே வேறு வழியில் லாமல் பாஸ்மதி இறக்குமதியை அமெ ரிக்கா இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
பாஸ்மதி அரிசி மீதான அமெரிக்க கோபத்துக்கு, புதின் - மோடி இடையி லான சந்திப்பும் ஒரு காரணமாகப் பார்க் கப்படுகிறது. கடந்த வாரத்தில், இந்திய - ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதின், "எரிபொருள் வர்த்தகத் தில் இந்தியாவிற்கு தடை யற்ற ஏற்றுமதியை தொ டர்ந்து அளிப்பதற்கு ரஷ்யா தயாராக இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார். உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மீது விதித்த பொருளா தாரத் தடையை மீறி இந்தியா செயல்படுவதும் ட்ரம்ப் மிரட்டலுக்கு கார ணமாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/rice-2025-12-15-17-27-21.jpg)