கஞ்சா போதை! கொல்லப்பட்ட தொழிலாளி! -நெல்லை பதட்டம்!

dd

நெல்லை மாவட் டத்தின் வீரவநல்லூர் பகுதியிலுள்ளது தென் திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவ ரின் மகன் பேச்சித்துரை. கடந்த வியாழனன்று மாலை யில் பேச்சித்துரையும், அவரது நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன், கஞ்சாவையும் சேர்த் தடித்ததில் போதை உச்சந் தலைக்கு ஏறியிருக்கிறது.

dd

அதே போதையோடு பைக்கில் சென்று வீரவ நல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியவர்கள், பின்பு நெல்லை-அம்பை நெடுஞ் சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில் பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடமும் வம்பிழுத்து சலம்பியிருக்கிறார்கள். பின்னர், அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி அதன் கண் ணாடியை உடைத்து விரட்டியிருக்கிறார் கள். பின்பு மறுபடி யும் பாலம் கட்டுமானம் நடக்குமிடத்துக்கு சென்று தொழிலாளர்களிடம் வம்பு வளர்த்தவர்களை, அங்கிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கருப்பசாமி

நெல்லை மாவட் டத்தின் வீரவநல்லூர் பகுதியிலுள்ளது தென் திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவ ரின் மகன் பேச்சித்துரை. கடந்த வியாழனன்று மாலை யில் பேச்சித்துரையும், அவரது நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன், கஞ்சாவையும் சேர்த் தடித்ததில் போதை உச்சந் தலைக்கு ஏறியிருக்கிறது.

dd

அதே போதையோடு பைக்கில் சென்று வீரவ நல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியவர்கள், பின்பு நெல்லை-அம்பை நெடுஞ் சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில் பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடமும் வம்பிழுத்து சலம்பியிருக்கிறார்கள். பின்னர், அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி அதன் கண் ணாடியை உடைத்து விரட்டியிருக்கிறார் கள். பின்பு மறுபடி யும் பாலம் கட்டுமானம் நடக்குமிடத்துக்கு சென்று தொழிலாளர்களிடம் வம்பு வளர்த்தவர்களை, அங்கிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கருப்பசாமி கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும், சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமி யின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ, ரத்தம் பீறிட கதறியபடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொடூரக் கொலையைத் தடுக்கப் பாய்ந்த வெங்கடேஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.

அதன்பின்னும் போதை குறையாமல், எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாளைக்காட்டி தடுத்து நிறுத்தியவர்கள், கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றபோது, பயணிகளில் சிலர் சுதாரித்துக்கொண்டு தடுக்க முயன்றிருக்கிறார்கள். பேருந்திலிருந்து இறங்கி உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரையும் அரிவாளோடு விரட்டியிருக்கிறார்கள். இரண்டு பேரும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாளால் ஓங்கியபடியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். இச்சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, காவலர் செந்தில்குமாரும், மற்றொருவரும் அவர்களைப் பிடிப்பதற்காக பைக்கில் விரைந்தனர்.

bb

ஆற்றாங்கரையோரம் இருவரையும் போலீசார் மடக்க, காவலர் செந்தில்குமாரின் கையை அரிவாளால் வெட்டிவிட் டுத் தப்பியிருக்கிறார்கள். வெட்டுப்பட்ட செந்தில்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். காவலரையே வெட்டிய ரவுடிகள் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. யான சிலம்பரசன், இருவரையும் பிடிக்கத் தனிப்படையை அனுப்பியிருக்கிறார். கொலையாளிகள் இருவரையும் தனிப் படையினர், முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத்தோப்பில் ரவுண்ட்அப் செய்தபோது, அங்கிருந்தும் தப்பியிருக்கின்றனர். விடாமல் துரத்திய தனிப் படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட முயன்றதால், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடி யிருக்கிறான்.

இதன்பின்னர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். "வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள், கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீபத்மநல்லூர் பக்கம் பொதுமக்களிடம் தகராறு செய்திருக் கிறார்கள். தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவையும் கைது செய்திருக் கிறோம்'' என்றார் எஸ்.பி.

"இள வயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கிவிட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி, சைக்கோவாகவே மாறிவிடுவானாம். இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் அனைவரிட மும் தகராறிழுத்து, அடிதடியில் இறங்கி, இப்போது அப்பாவி கட்டடத் தொழிலாளியை கொலை செய்வதுவரை சென்றிருக்கிறான். முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல் லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி எனப் பல்வேறு வழக்குகள் பதிவாகி, காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம்பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி சிறைச் சாலைக்கு அரசு விருந் தாளியாகப் போய் வரும் ரவுடி பேச்சித் துரையின் மீது குண்டா சும் பாய்ந்திருக்கிறது'' என்கிறார் மூத்த காவலர் ஒருவர்.

ரவுடி பேச்சித்துரை யைப் போன்று இள வயதிலேயே போதைக்கு அடிமையாகி விட் டேத்தியாய் முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீர்கெட்டுப் போயிருக் கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள். சைக்கோ ரவுடிகளின் அட்ராசிட்டியால் பீதியிலிருக்கிறது நெல்லை மாவட்டம்.

- செய்தி & படங்கள்: ப.இராம்குமார்

ff

nkn130324
இதையும் படியுங்கள்
Subscribe