கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த ஜாஃபியா ஜாஸ்மின் என்ற லிப்டி (20) கடந்த 19-ஆம் தேதி இரவு தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட குளச்சல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு வந்த குளச்சல் போலீசாரிடம் லிப்டி, "பிறந்தநாள் பார்ட்டியில் காதலன் புகுந்து மண்டையை உடைத்துவிட்டான்' என்றிருக்கிறார்.
மேலும் துருவியபோது, “"நான் கருங்கல் பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரிக்குச் சென்று வருவதற்கு வசதியாக பர்ணாட்டி விளையில் உறவினருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் தங்கியிருக்கிறேன். சுங்கான்கடையைச் சேர்ந்த அஜினும் நானும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வருகிறோம். அவனுக்கு என்மீது சந்தேகம் இருப்பதால் பிறந்த நாள் பார்ட்டிக்கு அவனை அழைக்கவில்லை. அந்த ஆத்திரத் தில் வீடு புகுந்து என்னைத் தாக்கிவிட்டான்''’என்றார்.
இதையடுத்து போலீசார் அஜின்மீது வழக்குப் பதிவு செய்தனா?. இதற் கிடையில் லிப்டி மருத்துவமனையிலிருந்து திடீரென்று தலைமறைவானது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து போலீசாரைத் தொடர்புகொண்ட அஜின், "லிப்டி தங்கியிருந்த பங்களாவில் வீக் என்ட் பார்ட்டி நடத்தி வந்ததாகவும் அப்போது கல்லூரி மாணவிகளும் இளைஞர்களும் அங்கு "ஜாயிண்ட் அடித்தல்' என்ற போர்வையில் மாறி மாறி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறினார்.
மேலும் அஜின் கூறும்போது, “"சுமார் 5 ஆண்டுகளாக காதலர்களாக வலம்வந்த லிப்டியும் நானும் கடந்த சில மாதங்களாக பிரிந்திருக்கிறோம். லிப்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. லைப்லயும் எல்லாம் பாஸ்ட்டா இருக்கணும் எல்லாத்தையும் அனுபவிக்கணும்னு அவள் சொல்லுவா. நீ நினைக்கிறது நம்ம ஊருக்கு ஒத்துவராதுனு சொன்னேன்.
இந்நிலையில் என்னை கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்க ஆரம்பிச்சா. ஒரு நாள் அவளுடைய செல்போனைப் பார்த்தபோது அதில் "ஜாயிண்ட் அடித்தல்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒண்ணு இருந்தது. அதில் 500-க்கு மேற்பட்டோர் இருந்தனர். இது காலேஜ் குரூப்னு சொன்னா. வெள்ளிக்கிழமை என்றால் இரவு முழுவதும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவாள். ஒருமுறை நான் கேட்கும்போது "நைட் குரூப் ஸ்டடி இருக்கும்... அப்படியே தூங்கிடுவேன்'னு சொன்னா.
இதல்லாம் உண்மையானு கண்டுபிடிக்க 19-ஆம் தேதி இரவு அவ இருக்கிற வீட்டுக்குப் போனேன். வீட்டில் லைட் எரிஞ்சது. வீடு அமைதியா இருந்திச்சி. மரம் வழியா ஏறி வீட்டுக்குள்ளே பார்த்தபோது 10 பெண்களும் 8 ஆண்களும் போதையில் அரைகுறை ஆடையுடன் உல்லாசத்தில் மிதந்துகொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் ஆத்திரம் தாங்க முடியாம, வீட்டுக்குள் புகுந்து லிப்டியை தலையில் கட்டையால் தாக்கினேன். மற்றவங்க எல்லாம் ஓடிட்டாங்க.
அந்த பங்களாவுக்குள்ள மது பாட்டிலி லிருந்து சிகரெட் காண்டம், கண்ட அசிங்கமும் கிடந்தது. சுமார் 7 மாதமா இந்த பார்ட்டி அங்கு நடக்கிறது என தெரியவந்தது''’என்றிருக்கிறார் அஜின்.
குளச்சல் காவல் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலிருக்கும் அந்த பங்களாவுக்குள் இப்படி ஒரு பார்ட்டி நடப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அதை விசாரிக்க எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த வீக் என்ட் பார்ட்டியில் கலந்துகொண்ட மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அழுதுகொண்டே, அஜினின் அம்மாவிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் "அல்ஃபியாவும் ஜாஸ்மினும் ஜாலியா இருக்கும்... பார்ட்டியில் கலந்துக்கன்னு என்னை அடிக்கடி கூப்பிடுவாங்க. ஒருமுறை அவங்க தொந்தரவுனால போனேன். பெண்கள் மட்டும்தான் இருப்பாங்கனு நெனச்சேன். போகும்போது எங்ககூட ஒரு பையன் வந்தான். ப்ரண்ட்ஸ்னும் அவன்தான் இன்னைக்கு பார்ட்டிக்கு ஏற்பாடுன்னும் சொன்னாங்க. அங்க போன பிறகுதான் தெரியும் ஜாயிண்ட் இருக்குதுன்னு. ஜாயிண்ட் இருக்கிற விசயம் தெரிஞ்சா நான் போயிருக்கமாட்டேன். அன்னைக்கு 10 பேரு கிட்ட இருந்தாங்க. ஒவ்வொருவரும் ஜாயிண்ட் அடிக்கிறதப் பார்த்து எனக்கும் ஆசை வந்தது. பிறகு நானும் ஜாயிண்ட் அடிச்சேன்.
அடுத்த வாரமும் இதேபோல் கூப்பிட்டாங்க. நான் போகல. "ஒரு தடவைதான் ஜாயிண்ட் பண்ணி யாச்சே... இனி வேண்டாம்'னு இருந்திட்டேன். 19-ஆம் தேதியும் கூப்பிட்டாங்க. நான் போகல. அன்னைக்குதான் இந்த சம்பவம் நடந்து, அஜின் என்கிட்ட போன்செய்து கேட்டபோது அங்கு நடந்தது எல்லாம் சொன்னான். லிப்டியின் மண்டையை உடைத்ததும் சொன்னான். இப்ப அந்த சம்பவத்தில் நான் இருந்தேன்னும் அன்னைக்கு நான் காண்டம் பயன்படுத்தினேன் னும் சொல்லுறாங்க. சத்தியமா நான் அன்னைக்கு இல்லை. வீட்டுக்குத் தெரிஞ்சுடுமோன்னு பயமா இருக்குது''’என்றபடி அழுகிறாள்.
தனிப்படை அமைத்து இதைத் தீவிரமாக விசாரித்துவரும் குளச்சல் போலீசாரிடம் நாம் கேட்ட போது, “"இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 17 மாணவிகள், 6 இளைஞர்களை இதுவரை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அந்தக் கல்லூரியிலும் விசாரித்து வருகிறோம். அந்த 17 மாணவிகளில் 8 பேர்தான் திரும்பத் திரும்ப அந்த பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் ஒரு முறையோடு முடித்துவிட்டார்கள்.
வெளியிலிருந்து மற்ற எந்த பெண்களும் இந்த பார்ட்டியில் அழைக்கப்படவில்லை. எல்லாரும் கல்லூரி மாணவிகள்தான். அதேபோல் படித்த வசதியான இளைஞர்கள்தான் கலந்துகொண்டி ருக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள் கிடையாது. ஒன்றிரண்டு கல்லூரிக் காதலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் விசாரித்து வருகிறோம்.
வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் பார்ட்டியில் ஒரு நாள் செலவை லிப்டி ஒருவனிடம் ஒப்படைத்துவிடு வாள். அதில் கலந்துகொள்ளும் மாணவிகள் எந்த செலவும் செய்ய வேண்டாம். அவர் களுக்கு விருப்பப் பட்டவர்களுடன் ஜாலியாக இருக்க லாம். ஆனால் இளை ஞர்களிடம் லிப்டி ஒரு அமௌண்டை வசூலித்து விடுவாள். மாணவிகள் வீட்டில் ஒன்றாக சேர்ந்து படிக்கப்போறோம்னு சொல்லி இங்கே வருகிறார்கள்.
பார்ட்டிக்கு கேரளாவில் இருந்து தான் ஒயின், பீர் வாங்கு கிறார்கள். அதே போல் மைல்டு போதை தரக்கூடிய ஙஉஙஆ போதைப் பவுடரை இளை ஞர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது கேரளாவில் தொடுபுழையிலிருந்து இங்கு சப்ளை ஆகிறது. பொதுவாக வீக் என்ட் பார்ட்டின்னா போதை, ஆட்டம், குத்தாட்டம்னு இருக்கும். ஆணும் பெண்ணும் ஜாயிண்ட் அடிக்கிற பார்ட்டி இது. லிப்டியும் பெரியளவில் ஏதே ஒரு தொடர்பை வைத்திருந்திருக்கிறாள். லிப்டியோடு மேலும் இரண்டு மாணவிகள் சேர்ந்துதான் பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும்''’என்றனர்.
விஷயமறிந்த குமரி மாவட்டத்து பெற்றோர், அதிர்ச்சியில் கலங்கிப்போயிருக்கிறார்கள். "இதுபோன்ற சமூகத்துக்கு ஒவ்வாத கலாச்சாரங் களை ஆரம்பத்திலேயே வேரறுக்கவேண்டும்' என்கிறார்கள் ஆவேசமாக.