ழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது என முடிவு செய்த சசிகலா, அதற்கான ஏற்பாடுகளை கவ னிக்குமாறு அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலர் வைத்தியநாத னிடம் வலியுறுத்தினார். சென் னையின் 10 பாயிண்ட்டுகளில் மக்களை சசிகலா சந்திக்க திட்டமிடப் பட்டது. வெள்ளி காலை 10.30-12.00 மணி வரை ராகுகாலம் என்றபோதும், ஆன்மிக நம்பிக்கையுள்ள சசிகலா, நிவாரண உதவி வழங்க நேரம், காலம் கிடையாது என தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

sasi

நிவாரண உதவிகளை அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் என்கிற அடையாளத்துடனேயே வழங்கினார் சசிகலா. நிவாரணப் பொருட்களில் பால் பாக்கெட்டுகளும் இருந்தன. இதற்காக அவர் சென்ற இடங்களை பால் பதப்படுத்தும் குளிரூட்டப்பட்ட வேன் பின்தொடர்ந்தது. மக்களிடம் ரெஸ்பான்ஸ் இருந்தது.

சசிகலா ஃபீல்டில் இறங்குகிறார் எனத் தெரிந்ததும், சேலத்தில் இருந்த எடப்பாடி, தனது ப்ரோகிராம்களை கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு விரைந்து வந்தார். எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் சசிகலாவுக்கு போட்டியாக தனித்தனியாக epsநிவாரண உதவிகளை வழங்க களத்தில் இறங்கினார்கள். அ.ம.மு.க. சார்பிலான நிவாரண உதவிகளை சசிகலா வழங்கும் வகையில் ப்ளான் பண்ணியிருந்த தினகரனின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அதனால், அ.ம.மு.க. நிர்வாகிகளை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் எனத் தடுத்துவிட்டார் தினகரன்.

சசிகலாவின் விசிட் பற்றி உளவுத்துறையும் மேலிடத்திற்கு நோட் அனுப்பியுள் ளது. "சட்டமன்றத் தேர்தலில் அ.தி. மு.க. வாக்குகள் பிரிந்துவிடக்கூடாது என்பதால்தான் டெல்லி உத்தரவுப்படி, அரசியல் ரீ-என்ட்ரியை அப்போது தவிர்த்தேன். தேர்தல் முடிந்ததும், அ.தி.மு.க.வில் இணைத்து முக்கிய பொறுப்பு கிடைக் கும்படி செய்வதாக டெல்லி அளித்த வாக்குறுதியை நம்பி னேன்'' என தனது ஆதங்கத்தை சமீபத் தில் வெளிப்படுத்தி யிருக்கிறார் சசிகலா. அவருக்காக டெல்லி யுடன் பேசும் ஆடிட்ட ரும் இணைப்பு முயற்சியை மேற்கொண்டு வரு கிறாராம். டெல்லியும் சசிகலா மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் சாஃப்ட் கார்னருடன் உள்ளது. சசியை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து அவைத் தலைவர் பதவி வழங்குவது பற்றி டெல்லியில் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். எடப்பாடி, தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம் இதுபற்றி டெல்லி அழுத்தம் தந்து வருகிறது.

கூடாரத்திற்குள் தலையை நுழைக்கும் ஒட்டகம், அதன்பிறகு அதனை மொத்தமாக ஆக் கிரமிப்பு செய்வதுபோல, சசிகலாவை சேர்த்தால், தினகரனின் கை ஓங்கிவிடும் என எடப்பாடி பதற, தங்கமணியும் வேலுமணியும் தினகரனைக் கட்டுப்படுத்துவோம், ஆனால் சசிகலாவுக்கு கட்சி யினரிடம் ஆதரவு இருப்பதை களத்தில் காணமுடி கிறது என தெரிவித்துள்ளனர். கட்சியின் சீனியர் களான அன்வர்ராஜா, செல்லூர்ராஜு, ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு, உதயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் மறைமுகமாக சசிகலாவை ஆதரிக்கிறார்கள்.

Advertisment