Advertisment

திருச்சி மின்வாரிய அதிகாரியின் அடாவடி வசூல்!

dss

திருச்சி மின்பகிர்மானக் கழகத்திலுள்ள டி.இ. சண்முகசுந்தரம், மூத்த அமைச்சரின் உதவியாளரின் பெயரைப் பயன்படுத்தி பல லட்சங் களில் லஞ்சம் வாங்கிக்கொண்டிருக் கிறார் என்ற குற்றச்சாட்டு வந்தது. இதுகுறித்து ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சண்முகசுந்தரம் தொடர்ந்து தன்னு டைய வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்.

Advertisment

திருச்சியில் பிரபல ஜீவல்லரி நிறுவனத்துக்கு மின்னிணைப்பு வழங்கப்பட்ட 3 நாட்களில் சில லட்சங்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அடி ஷனல் லோடு இணைப்பு வழங்கியிருக்கிற

திருச்சி மின்பகிர்மானக் கழகத்திலுள்ள டி.இ. சண்முகசுந்தரம், மூத்த அமைச்சரின் உதவியாளரின் பெயரைப் பயன்படுத்தி பல லட்சங் களில் லஞ்சம் வாங்கிக்கொண்டிருக் கிறார் என்ற குற்றச்சாட்டு வந்தது. இதுகுறித்து ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சண்முகசுந்தரம் தொடர்ந்து தன்னு டைய வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்.

Advertisment

திருச்சியில் பிரபல ஜீவல்லரி நிறுவனத்துக்கு மின்னிணைப்பு வழங்கப்பட்ட 3 நாட்களில் சில லட்சங்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அடி ஷனல் லோடு இணைப்பு வழங்கியிருக்கிறாராம். அதோடு, நான்கு ஷோரூம்களிடமும் இதே போன்று லட்சங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு இணைப்பு வழங்கியிருக்கிறார்.

Advertisment

ee

இவருடைய கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பணியாற்றும் ஏ.இ.க்கள் விடுமுறையில் இருந்தால் அவர்களுக்குப் பதிலாக தன்னுடைய உறவினரான ராஜேந்திரன் என்ற ஏ.இ.யை அந்த இடத்திற்கு தற்காலிகமாக பணியமர்த்தி பெரிய இணைப்பு களை எல்லாம் இவர் நேரடியாக டீல் பண்ணுகிறா ராம். அந்த டீலிங்கில் மின் இணைப்பிற்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி வாங்கியிருந்தால் 15 லட்சமும், அனுமதியில்லாமல் இருந்தால் 25 லட்சமும் நிர்ணயம் செய்துள்ளார்.

தென்னூர் மின் வாரியத்திற்கு எதிரே மின் கட்டணம் செலுத்துவதற் கான கவுண்டர், ஜெராக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடை யில்தான் அனைத்துவிதமான மாநகராட்சி சான்றிதழ்களிலும் போலியாக தயாரிக்கப்பட்டு, மின்னிணைப்பு வழங்கப் படுகிறதாம். சண்முகசுந்தரத்தின் கட்டுப் பாட்டிலுள்ள மூன்று இடைத் தரகர் கள் இந்த ஆவணங்களை தயார்செய்து கொடுத்து லட்சங்களில் லஞ்சம்பெற்று மின்னிணைப்பு கொடுத்துவருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சிந்தாமணி பகுதியில் பணியாற்றிய ராஜேஷ் என்ற ஏ.இ. லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அந்த இடத்திற்கு இந்த ராஜேந்திரனை பொறுப்பு அதிகாரியாக சண்முகசுந்த ரம் நியமித்துள்ளார். அதேபோல் மலைக்கோட்டை பகுதியில் பணியாற்றிவரும் சுப்புலட்சுமி ஏ.இ. விடுறையில் சென்ற நிலையில், அந்த இடத்திற்கும் இவர் சொல்வதைக் கேட்கும் மற்றொரு பெண் ஏ.இ. அதிகாரியான கலைவாணி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பொதுவாக புறநகர் பகுதிகளிலுள்ள மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றுபவர்களைத்தான் இந்த இடங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கவேண்டும். ஆனால் இங்கு அப்படியே தலைகீழாக நடைபெற்றுவருகிறது.

கடந்த 2019-க்கு பிறகு ஆயிரங்கள் தாண்டி லட்சங்களில் கொடுத்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும் என்ற எழுதப்படாத சட்டதிட்டங் களை அதிகாரிகள் ஏற்படுத்திவிட்டனர்.

ஏ.இ. ராஜேந்திரனை தொடர்புகொண்டு பேசியபோது, "நான் கொடுத்த 8 மின் இணைப்பு களுக்கும் ஒரு ரூபாய்கூட பணம் வாங்கவில்லை. அது முழுமையாக டி.இ.யின் நேரடி மேற்பார்வை யில் நடைபெற்றதால் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை''’என்று மறுத்தார்.

மூத்த அமைச்சரின் சம்பந்தப்பட்ட உதவி யாளரிடம் தொடர்புகொண்டு பேசியபோது, “"எனக்கு அவர் யாரென்றே தெரியாது. நான் இது போன்ற விஷயங்களில் ஒருபோதும் தலையிட மாட்டேன்'' என்று கூறினார்.

nkn071023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe