த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவை தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளராக்கியிருக்கிறார் விஜய். பதவியைக் கைப்பற்றிய கையோடு திருமாவளவனை சந்தித்து ஆதவ் அர்ஜுனா ஆசி பெற்றதும், திருமாவும் ஆதவ்வும் மகிழ்ச்சி யாகப் பேட்டியளித்ததும் தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
முன்னதாக, தி.மு.க. அரசை மன்னராட்சி என்று விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்திருந்தார் திருமாவளவன். ஆறு மாதங்களுக்குப்பிறகு வி.சி.க.வில் ஆதவ் அர்ஜுனா மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார், அ.தி.மு.க.வில் இணைகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்த சூழலில், திடீரென்று விஜய் கட்சியில் இணைந்திருக்கிறார்.
விஜய்யுடன் கைகோர்த்த ஆதவ் அர்ஜுனா, தனது ஆசான் திருமாவிடம் வாழ்த்து வாங்க வேண்டுமென்று விஜய்யிடம் கேட்க, அந்த சந்திப்பு தி.மு.க.வை டென்ச னாக்கும் எனக் கணக்குப்போட்டு அனுமதித்தார் விஜய். அதன்படி திருமாவுடன் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் முடிவில் இருவரும் அளித்த பேட்டியில், "
த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவை தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளராக்கியிருக்கிறார் விஜய். பதவியைக் கைப்பற்றிய கையோடு திருமாவளவனை சந்தித்து ஆதவ் அர்ஜுனா ஆசி பெற்றதும், திருமாவும் ஆதவ்வும் மகிழ்ச்சி யாகப் பேட்டியளித்ததும் தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
முன்னதாக, தி.மு.க. அரசை மன்னராட்சி என்று விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்திருந்தார் திருமாவளவன். ஆறு மாதங்களுக்குப்பிறகு வி.சி.க.வில் ஆதவ் அர்ஜுனா மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார், அ.தி.மு.க.வில் இணைகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்த சூழலில், திடீரென்று விஜய் கட்சியில் இணைந்திருக்கிறார்.
விஜய்யுடன் கைகோர்த்த ஆதவ் அர்ஜுனா, தனது ஆசான் திருமாவிடம் வாழ்த்து வாங்க வேண்டுமென்று விஜய்யிடம் கேட்க, அந்த சந்திப்பு தி.மு.க.வை டென்ச னாக்கும் எனக் கணக்குப்போட்டு அனுமதித்தார் விஜய். அதன்படி திருமாவுடன் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் முடிவில் இருவரும் அளித்த பேட்டியில், "எங்கள் சந்திப்பில் அரசியல் முடிச்சுகள் ஏதும் இல்லை; அரசியலில் சில நாகரீகம் உருவாக வேண்டும் என்பதே இந்த சந்திப்பின் நோக்கம்'' என்றெல்லாம் விளக்கம் தந்தார் திருமா. ஆனால், இதனை தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், மற்ற தி.மு.க. நிர்வாகிகளும் சிறிதும் ரசிக்கவில்லை.
இந்த நிலையில், தி.மு.க. தரப்பில் விசாரித்த போது, "தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் விஜய்யுடன் கைகோர்த்திருக்கும் சூழலில் ஆதவ் அர்ஜுனாவை திருமா வாழ்த்தியிருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு தி.மு.க.வின் எதிரியை ஆதரிப்பது எப்படிப்பட்ட அரசியல்? ஆதவ் தன்னை சந்தித்தது அரசியல் நாகரீகம் என்கிறார் திருமா. இதே ஆதவ், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றால் ஏற்றுக்கொள்வாரா?அப்புறம் எப்படி, ஆதவ்வை வாழ்த்தியது அரசியல் நாகரிகம் என திருமா சொல்கிறார்? தி.மு.க. கூட்டணியிலிருந்து சிறுத்தைகள் வெளியே வரவேண்டுமென எடப்பாடி, விஜய் போன்றவர்கள் திட்டமிடும் நிலையில், தனது வாய்ஸாக திருமாவிடம் பேசுவதற்கு ஆதவ்வை பயன்படுத்துகிறார் விஜய். அதனால், தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் திருமா. அல்லது கூட்டணியில் தொடர்வதற்கு இரட்டை இலக்கத்தில் சீட் கேட்டு சிக்கலை ஏற்படுத்துவார்''’ என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
திருமா -ஆதவ் சந்திப்பு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடந்திருக்கிறது. அந்த சந்திப்பில், ’‘சிறுத்தைகள் கட்சி, மாநிலக் கட்சி அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும், நிரந்தர சின்னம் கிடைக்கவும் சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளை நீங்கள் பெற வேண்டும் அல்லது 6 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். இதற்கு கூடுதல் இடங்களில் சிறுத்தைகள் கட்சி போட்டியிட வேண்டும். தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்க உத்தரவாதம் இருக்கிறதா? இல்லாதபோது, கூட்டிக் கழித்து தேர்தல் கணக்குகளை நீங்கள் போடவேண்டும் என்றெல்லாம் திருமாவுக்கு தூபம் போட்டி ருக்கிறார்” என்கிறார்கள் விபரமறிந்த சிறுத்தைகள்.
ஆதவ் போட்டுக்கொடுத்த தூபம் தான் தி.மு.க. அரசுக்கு எதிராக திருமாவளவனை கொந்தளிக்க வைத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 2-ந் தேதி நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருமா, "ஆளுங்கட்சி கூட்டணி யில் இருக்கிறோம். ஆனால், நெருக்கடிகள் நமக்குக் குறையவில்லை. நாம் 4 எம்.எல்.ஏ.க் களையும், 2 எம்.பி.க்களையும் பெற்றி ருந்தும் நெருக்கடிகள் குறைந்தபாடில்லை. காவல்துறையும், வருவாய்த்துறையும் சாதிய உணர்வோடு நம்மை அடக்கத் துடிக்கிறார் கள். வேங்கைவயல், கண்டமங்கலம் சம்பவங்களெல்லாம் இதற்கு சாட்சி. தி.மு.க. கூட்டணியிலிருந்து நம்மை வெளியேற்ற சதி நடக்கிறது. கூட்டணியில் நாம் இருக்கும் நிலையில், வி.சி.க.வுக்கு எதிராகவும், பட்டியலினத்தவர்களுக்கு எதிராகவும் காவல்துறை இயங்குகிறது. முதல்வரின் கவனத்துக்கு இதனை எடுத்துச் செல்வேன். கோட்டையில் வி.சி.க.வின் கொடி பறப்பது கம்ப சூத்திரமல்ல''’என்று அரசியல்ரீதியாகப் பல விசயங்களை ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
திருமாவின் பேச்சினை அச்சுப்பிசகாமல் முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் செய் திருக்கிறது உளவுத்துறை. திருமாவின் குற்றச்சாட்டுகள் தன்னைத் தாக்குவதாக முதல்வர் கருதுகிறார் என்கிறது கோட்டை வட்டாரம். இதுபற்றி உளவுத்துறையினரிடம் விசாரித்தபோது, ”"முதல்வர் ஸ்டாலின் தான் காவல்துறைக்கும் அமைச்சர். அந்த காவல்துறையை திருமா குற்றம் சாட்டுவது முதல்வரை குற்றம்சாட்டுவதுபோல தான். இதனை முதல்வர் ரசிக்கவில்லை. ஏற்கெனவே ஆதவ்வுடன் இணைந்து திருமா பேட்டியளித்ததையே முதல்வர் ரசிக்காத நிலையில், திருமாவின் விழுப்புரம் பேச்சு மேலும் அவருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. திருமா பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. திருமாவுக்கு விமர்சனங்களோ, கோபமோ இருந்தால் முதல்வரை சந்தித்து சொல்லியிருக்க வேண்டும். பொது வெளியில் பேசக்கூடாது. கூட்டணி அரசியலில் அனுபவம் வாய்ந்த திருமாவுக்கு இது தெரியும்.
அப்படியிருந்தும் அவர் பொதுவெளியில் தி.மு.க. அரசின் அதிகாரிகளைக் குற்றம்சாட்டு வது, கூட்டணி குறித்து ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இதனை மறைக்க, கூட்டணியிலிருந்து வி.சி.க.வை வெளியேற்ற சதி நடக்கிறது எனச் சொல்லிக் கொள்கிறார்''” என்கின்றனர்.