"தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் நிலையங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் கடந்த ஆட்சியில் மெகா ஊழல் நடந்துள்ளதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் பகீர் குற்றச்சாட்டு வைத்தார். வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த செந்தில்பாலாஜி, 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை என்றும், உடனடியாக விசாரணைக் குழு அமைத்து ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்றும் அப்போது கூறினார். ஆனால் இப்போதுவரை அதுகுறித்து செந்தில் பாலாஜியும், தமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராஜேஷ் லக்கானியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?'' எனக் கேட்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன்

Advertisment

adani

மேலும், "நிலக்கரி காணவில்லை என்றால் அதற்கான காரணம், ஒன்று, இறக்குமதி செய்யும் போது குறைவான அளவு இறக்குமதி செய்துவிட்டு, அதிகப் படியாக கணக்கு காட்டி இருக்க வேண்டும். மற் றொன்று, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய் திருக்க வேண்டும். இங்கே தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததன் மூலமே ஊழல் நடந்துள்ளது.

கடந்த ஆட்சியில், 6000 கிலோ கேலரி நிலக்கரி தரத்திற்கு பதிலாக, 4500 கிலோ கேலரி தரம் குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்ததே இந்த ஊழலுக்கு முக்கிய காரணம். தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மூலமே அதானி போன்றவர்கள் பெரிய அளவு சம்பாதித்துள்ளனர். சி.ஏ.ஜி. தணிக்கைத்துறை அறிக்கையின்படி இதில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கமும் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 6000 கிலோ கேலரி நிலக்கரி என கணக்கு காட்டி 4500 கிலோ கேலரி நிலக்கரியை பயன் படுத்தினால் ஊழல் தெரியும் என்பதால், அனல் மின் நிலையங்களில் தரம் குறைவான 4500 கிலோ கேலரி நிலக்கரியை அதிக அளவு பயன்படுத்தி விட்டு, குறைவான அளவில் கணக்கு காட்டி வந்ததால், தற்போது 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என்ற ஊழல் வெளிவந்துள்ளது.

Advertisment

ddஇதுதொடர்பான விசாரணை அறிக்கையைக் கேட்டு அறப்போர் இயக்கத்தின் சார்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டோம். தகவல் தராமல் இழுத்தடித்ததால் மேல்முறையீடு செய்தோம். அதற்கு மின்சாரத் துறை தரப்பில், தற்போது விசாரணையில் இருப்பதால் இந்த விசாரணை அறிக்கையைக் கொடுத் தால் விசாரணை பாதிக்கப்படும், குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்று தெரிவித்து, கேள்விக்கு பதில் தர முடியாதென்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுவரை விசாரணை நடத் தப்பட்டதில் தவறு செய்தவர்கள்மீது எஃப்.ஐ.ஆர்.கூட போடப்படவில்லை. இந்த ஊழலில் பிரதமருக்கு நெருக்கமான அதானி சம்பந்தப்பட்டிருப்பதால் சி.பி.ஐ.யே வழக்குப்பதிவு செய்ய அஞ்சுகிறது. இந்திய அளவில் இதில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கப்பட்டுள்ளதில், 29 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந் துள்ளதாக டி.ஆர்.ஐ. (உதஒ) கண்டுபிடித்துள்ளது.

2012 முதல் 2016 வரை நத்தம் விஸ்வநாதன் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழ்நாடு காகித நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டும் ஒரே தரத்திலான நிலக்கரியை தான் இறக்குமதி செய்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாடு காகித நிறுவனத்தைவிட தமிழக மின்சார வாரியம் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 20 டாலர் கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இதன்படி பார்த்தால் சுமார் 4000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் 2018ல் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார் அளிக்கப்பட்ட பின்னர், கூடுதல் விலைக்கு வாங்குவதை நிறுத்திவிட்டனர். ஆனால் எங்கள் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையும் சரி, சி.பி.ஐ.யும் சரி, வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. அதானியின் மெகா ஊழல் நிறுவனத்தை இதுவரை கருப்புப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்த ஊழலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது கிரிமினல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மின்சார வாரியமும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யத் தயங்குகிறது.

Advertisment

dd

பொதுமக்கள், நடுத்தர மக்கள், மின் கட்டண உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தவே சாமானியர்கள் சிரமப்படும்போது, அதானி போன்றவர்களின் ஊழலால் சாமானியர்களுக்கு மேலும் சுமை ஏறுகிறது. எனவே ஊழல்வாதிகளை அம்பலப் படுத்த அறப்போர் இயக்கம் தொடர்ந்து பாடுபடும்'' என்றார். இது தொடர்பாக துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யையும், மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி யையும் தொடர்புகொள்ள முயற்சித்தும் இதுவரை முடியவில்லை. இது குறித்து விளக்க மளித்தால் பிரசுரிக் கத் தயாராக இருக்கிறோம்.

-அரவிந்த்