லைநகர் சென்னையின் வீக் எண்ட் பார்ட்டி என்றாலே கிழக்கு கடற்கரைச் சாலையான ஈ.சி.ஆர். கோலாகலமாகிவிடும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் "லாங் டிரைவ் போலாம்' என்று ஆரம்பித்த இந்த கலாச்சாரம்... தற்போது விபச்சாரம், பாலியல் வல்லுறவு, ஹை-டெக் போதை கலாச்சாரம் என மாறியுள்ளது. பார்ட்டி முடித்ததும் போதையின் உச்சத்தில் அதிவேக பைக், கார் ரைடு என உயிர்ப்பலிகளும் ஈ.சி.ஆரில் பெருகிவிட்டன.

yashika

"இருட்டு அறையில் முரட்டுக் குத்து' என்கிற டபுள் ஏ படத்தின் மூலமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த ஜூலை 24-ஆம் தேதி தனது தோழி யுடன் படுஸ்பீடாக கார் ஓட்டி விபத்துக்குள்ளானதில், தோழி மரணமடைய யாஷிகா உயிர்ப் போராட்ட சிகிச்சைக்குள்ளானார்.

இந்த பரபரப்பான விபத்தை நேரில் பார்த்த பீட்டர் என்பவரை நேரில் தொடர்பு கொண்டோம். "நான் ஈ.சி.ஆர். ரோடு, சூளேரிக்காடுல ரோட்டுக்கடை வைச்சிருக்கேன் சம்பவத்தனைக்கு சரக்கடிச்சிட்டு, என்னோட கடைக்கிட்ட நடந்து போயிட்டிருந்தேன். இரவு சுமார் 11:20 மணியிருக்கும், அப்போ ஒரு கருப்பு கலர் கார் சென்டர் மீடியேட்டர்ல மோதி மூணு பல்டியடிச்சு நூறு மீட்டர் இழுத்துட்டே போச்சு. நெருப்புப் பொறி பறந்துச்சு. ஓடிப்போயி பார்த்தா... டிரைவர் சீட்டுல ஒரு பொண்ணு ரத்தம் சொட்ட... சொட்ட வெளியே வர முடியாம இருந்துச்சு.

Advertisment

என்னைப் போலவே ஓடிவந்த என் மகன் ரீகனோட சேர்ந்து, டிரைவர் சீட்டுல இருந்த பெண்ணை இழுத்து ரோட்டுல படுக்க வைச்சோம். கால்ல அப்போவே எலும்பு முறிவு தெரிஞ்சது, பின்னாடி சீட்டுல ரெண்டு பசங்க இருந்தாங்க. அவனுங்களுக்கும் கால்ல அடி பட்டிருந்தது. கொஞ்ச நேரத்துல, பின்னாடியே 5 கார்ல வந்த இவர்களோட நண்பர்கள் அந்த பொண்ண தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிட் டாங்க. மற்ற ரெண்டு பசங்களும் ஆக்ஸி டெண்ட் ஆன கார்ல இருந்த விலை மதிப்பான பொருட்கள், பேக் எல்லாத்தையும் எடுத்துக்கிட் அடுத்தடுத்த கார்ல போயிட்டாங்க.

அப்ப பள்ளத்துல ஓர் முணுமுணுப்புச் சத்தம் கேட்டுச்சி. லைட் அடிச்சிப் பார்த்தா பொம்ம மாதிரி தெரிஞ்சிச்சி. அது ஒரு பொண்ணு. அப்போதான் என் மகன் ரீகன் சொல்றான், "அப்பா ஒரு பொண்ணு கார் மேல ஓப்பன்ல கத்திகிட்டே வந்தாங்கப்பா'ன் னான். உடனே போலீஸுக்கு, 108 ஆம்புலன்ஸ்க்குச் சொன்னோம். பள்ளத்துல இருந்த பொண்ண மேல தூக்கிட்டு வந்து தண்ணீர் கொடுத்தோம். ரத்தம் வந்துட்டே இருந்துச்சு. ஆம்புலன்ஸ் வந்து அந்தப்பொண்ண ஏத்திக்கிட்டுப் போனாங்க. ஆனா அந்தப்பொண்ணு போற வழியில் இறந்து போயிட்டதா சொன்னாங்க.

yashika

Advertisment

ஆக்ஸிடெண்ட் ஆன கார்ல இருந்தவங் களும் பின்னால வந்தவங்களும் ஃபுல் போதை யில இருந்ததால, கூட வந்தவங்களைப் பற்றிக் கூடத் தெரியாம கிளம்பிப் போனதாலதான் அந்தப் பொண்ணு உசுரு போயிடிச்சி. ஆக்ஸி டெண்ட் இடத்தில் கிடந்த ஐ.டி. கார்டு மூலமாத் தான் காரில் வந்தது நடிகை யாஷிகா ஆனந்துனு தெரிஞ்சுது''’என்றார் வருத்தத்துடன். யாஷிகா தான் கார் ஓட்டி வந்தார் என்பதை சி.சி.டி.வி. மூலம் போலீஸ் உறுதி செய்த பிறகே, நடிகை யின் கார் ஆக்ஸிடெண்ட் என பிரேக்கிங் நியூஸ் வந்தது.

ஜூலை 24-ஆம் தேதி மகாபலிபுரம் பகுதி யில பார்ட்டி முடிச்சிட்டு வந்தபோது 129 கிலோமீட்டர் வேகத்துல TN01-BK -8632 டாடா ஹாரியர் காரை ஓட்டி வந்துள்ளார். இந்த கார் சோனல்ஆனந்த் என்ற பெயரில் எட்டு மாதத்திற்கு முன் வாங்கப்பட்டுள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த்துடன் அவரது தோழி யான ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள் வள்ளிசெட்டி பவானி, மேல் திறக்கும் வசதி கொண்ட அந்த காரில் நின்றபடி பயணித்துள்ளார், இவர் அமெரிக் காவில் மென் பொறியாளராக பணியாற்றிய வர். கணவரு டன் விவாக ரத்து பெற்று ஹைதராபாத் வந்து, அங்கி ருந்து சமீ பத்தில்தான் சென்னை வந்துள்ளார். விபத்தில் இவர்தான் தூக்கிவீசப்பட்டு, பள்ளத்தில் விழுந்து பீட்டர் மற்றும் அவரது மகனால் அடையாளம் கண்ட பிறகே, தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.

காரில் இருந்த மற்ற இரு ஆண் நண்பர் கள், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையது மற்றும் அமீர் ஆகியோரும் அடிபட்ட பெண் ணைப் பற்றி யோசிக்காமல் அலட்சியமாக தப்பிச் சென்றது சந்தேகத்தை எழுப்புகிறது. அதேபோல "முதலில் போதையில் அதிவேக மாக கார் ஓட்டியதால் இந்த விபத்து நடந்தது என்று தெரிவித்த போலீஸார், பின்னர் யாஷிகா ஆனந்த் போதையில் இல்லை என்றும் அவர் மருத்துவ சிக்கிச்சையில் உள்ளதால் விசாரணைக் குப் பின் தான் தெரியவரும்' என்றும் மழுப்பி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனையில் யாஷிகாவின் வலதுகால் எலும்பு, முதுகுத்தண்டு எலும்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மது அருந்தியிருந்தாரா என்பதும் மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியிருக்கும். யாஷிகா போதையில் வேகமாக கார் ஓட்டியது உறுதி யானால், ட்ரங்க் அண்ட் ரேஷ் டிரைவிங் என்ற வகையில் வள்ளிசெட்டி பவானியின் உயிரிழப்புக்கு யாஷிகா மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். கடுமையான தண்டனை கிடைக்கும். அதை மறைக்கத்தான், அதிவேக டிரைவிங், கவனக்குறைவு என்று மட்டும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது என் கிறார்கள். ஆக்ஸிடெண்ட் ஆனபிறகு வேகமாக அங்குவந்த ஐந்து கார்களில் வந்த வி.ஐ.பி.கள் யார்? மாமல்லபுரத்தில் எந்த ரிசார்ட்டில் பார்ட்டி நடந்தது என்பதை பற்றியும் போலீஸார் தெரிவிக்கவில்லை.

tt

கடந்த 2019-ஆம் ஆண்டு சீன அதிபர் ஜின் பிங் வருகையையொட்டி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருபது அடிக்கு ஓர் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டது. தற் போது அதை ஆய்வு செய்தாலே அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியும். இதேபோல கடந்த ஆண்டு ஒரு விலையுயர்ந்த சிவப்புநிற கார் அதிவேகமாக வந்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விபத்துக்குள் ளானது. அதில் எதிரே பைக்கில் வந்த உணவு எடுத்துச் செல்லும் டெலிவரி பாய் தூக்கி வீசப் பட்டு உயிர் இழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த வகை விபத்துகள் எல்லாமே உயர்வகை போதை பழக்கத்தால் ஏற்படுகிறது. அதிலும் ஈ.சி.ஆரில் சகஜம்.

டாஸ்மாக் சரக்கு அடித்து வண்டி ஓட்டு பவர்களை நிறுத்தி ஃபைன் போட்டு தண்டிக் கும் போலீசார், ஹைடெக் போதை எனப்படும் எல்.எஸ்.டு, எம்.டி.எம்.ஏ.எம், கொஹைன் போன்ற ஹைடெக் போதையில் அதிவேகமாக கார் ஓட்டிவரும் பெரியஇடத்து ஆட்களை கண்டுகொள்வதில்லை. காரை நிறுத்தி, உள்ளே இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளானால் தங்கள் பணியில் பாதிப்பு ஏற்படும் எனத் தயங்குகின்றனர். இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றிய சம்பவங்களும் நடந்திருப்பதால் உயிர் பயமும் உள்ளது.

பண்ணை வீடு பார்ட்டி என்ற பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் இதே ஈ.சி.ஆர். சாலையில் கானத்தூரை அடுத்த ராதாகிருஷ் ணன் நகரில் சுகுணா கார்டனில் நடந்த போதை பார்ட்டியை நடத்திய நடிகை கவிதாஸ்ரீ, புரோக்கர் ஸ்ரீஜித்குமார் மற்றும் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட 16 பெண்கள் மற் றும் ஆண்களும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல சென்னை வியாசர்பாடி சத்யா நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற கல்லூரி மாணவன், நண்பனின் பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் கோவளத்தில் பண் ணை வீட்டில் உடன் வந்த மாணவியை பலாத் காரம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட் டார். இதுபோல கலாச்சார சீரழிவான, சட்டவிரோத செயல்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது கிழக்கு கடற்கரைச் சாலை.