"நடிகை லட்சுமிமேனன், நடிகர் மிதுன் மற்றும் அடையாளம் தெரிந்த மூவர் என்னை காரில் கடத்தி அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ள னர்'' என 25-ஆம் தேதி திங்கட்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தை அணுகியிருக்கின்றார் ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான அலியார்ஷா சலீம். சினிமாவில் பக்கத்து வீட்டுப்பெண்ணாக காட்சியளிக்கும் லெட்சுமிமேனன் கடத்தல்காரியா? என புருவம் உயர்த்தி அமைதிகாத்தனர் போலீஸார்.
"முந்தின நாள் இரவில் ஞாயிற்றுக் கிழமையன்று சரியாக 11.45 மணியளவில் நான் என்னுடைய நண்பர்கள் உட்பட எர்ணா குளம் பானர்ஜி சாலையில் மரைன் டிரைவ் அருகேயுள்ள வெலாசிட்டி பப்பில் மது பார்ட்டியில் இருந்தோம். அங்கு நடிகர் மிதுன், நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 7 நண்பர்கள் பார்ட்டியில் இருந்தனர். இதில் என்னுடைய நண்பன் லட்சுமிமேனனிடம் பேசமுற்பட்டான். அதிக போதையில் இருந்ததால் அவர்கள் எங்களைச் சட்டை செய்யவில்லை.
இருப்பினும் என்னுடைய நண்பன் முயற்சி செய்துகொண்டிருந் தான். இதில் மிதுன் மற்றும் அவரது நண்பர்கள் என்னுடைய நண்பனை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்த நிலையில் மேலும் ஏதேனும் பிரச்சனை கூடாது என அங்கிர
"நடிகை லட்சுமிமேனன், நடிகர் மிதுன் மற்றும் அடையாளம் தெரிந்த மூவர் என்னை காரில் கடத்தி அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ள னர்'' என 25-ஆம் தேதி திங்கட்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தை அணுகியிருக்கின்றார் ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான அலியார்ஷா சலீம். சினிமாவில் பக்கத்து வீட்டுப்பெண்ணாக காட்சியளிக்கும் லெட்சுமிமேனன் கடத்தல்காரியா? என புருவம் உயர்த்தி அமைதிகாத்தனர் போலீஸார்.
"முந்தின நாள் இரவில் ஞாயிற்றுக் கிழமையன்று சரியாக 11.45 மணியளவில் நான் என்னுடைய நண்பர்கள் உட்பட எர்ணா குளம் பானர்ஜி சாலையில் மரைன் டிரைவ் அருகேயுள்ள வெலாசிட்டி பப்பில் மது பார்ட்டியில் இருந்தோம். அங்கு நடிகர் மிதுன், நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 7 நண்பர்கள் பார்ட்டியில் இருந்தனர். இதில் என்னுடைய நண்பன் லட்சுமிமேனனிடம் பேசமுற்பட்டான். அதிக போதையில் இருந்ததால் அவர்கள் எங்களைச் சட்டை செய்யவில்லை.
இருப்பினும் என்னுடைய நண்பன் முயற்சி செய்துகொண்டிருந் தான். இதில் மிதுன் மற்றும் அவரது நண்பர்கள் என்னுடைய நண்பனை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்த நிலையில் மேலும் ஏதேனும் பிரச்சனை கூடாது என அங்கிருந்து நாங்கள் எங்களுடைய காரில் ஏறிப் புறப்பட்டோம். எங்கிருந்துதான் வந்தார்கள் எனத் தெரியவில்லை, எங்களது காரை வழிமறித்து காரின் முன்பக்க பேனட்டைத் தட்டி, காரின் கண்ணாடியில் தட்டி அராஜகம் செய்தனர். இருப்பினும், அவர்கள் என் நண்பனைக் கடத்துமளவுக்கு போவார்கள் என நினைக்க தெரியவில்லை''” என்றார் கடத்தப்பட்ட அலியார்ஷா சலீமின் நண்பர். நடிகை லட்சுமிமேனன் உள்ளிட் டோர் மதுபோதையில் காரை மறித்து, காரின் முன்பக்க பேனட்டை தட்டி அராஜகம் செய்த வீடியோ மலையாளத் தொலைக் காட்சிகள் அனைத்திலும் ஒளிபரப்பாக, சுதாரித்துக்கொண்ட போலீஸார் விசாரணை யை மளமளவென்று துவக்கினர். "இருதரப்பி லும் வாக்குவாதம் நடந்தது உண்மை. லட்சுமிமேனன் உள்ளிட்டோர் அதிக போதையில் இருந்ததால் அவர்கள் என்ன செய்கிறார்கள்..? என அவர்களுக்கே தெரிய வில்லை. என்னுடைய நண்பன் அந்த நடிகை யிடம் அறிமுகமாகிக் கொள்ளவே கையை நீட்டி "ஹாய்' என்றான். இது பெரிய தவறாகி விட்டது. காது கூசும் அளவிற்கு வார்்தை களால் பேசுகிறார்கள். அங்குள்ள பப் நிர்வாகிகள், பவுன்சர்கள் வந்து மன்னிப்புக் கேட்டும் அவர்கள் அடங்கவில்லை. வேறு வழியில்லாமல் நாங்களும் மன்னிப்பு கேட்டோம். இருப்பினும் எங்களை விடவில்லை. மாறாக தாக்கமுற்பட்டார்கள். ஒருகட்டத்தில் பப் நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நாங்கள் வெளியேறி விட்டோம்.
அதன்பின்னரும், நாங்கள் புறப்படுகை யில் காரை மறித்து கலாட்டா செய்தார்கள். எதுக்கு பிரச்சினை என காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்... விடவில்லை அவர்கள். எங்கள் பின்னாலேயே தொடர்ந்து எர்ணாகுளம் வடக்கு மேம்பாலம் அருகே எங்களது காரை வழிமறித்து என்னை இழுத்துக்கொண்டு அவர்களது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றார்கள். காருக்குள் வைத்து அடிப்பதும், உதைப்பது மாக லட்சுமிமேனனும் மற்றவர்களும் இருந்தார்கள். ஒருகட்டத்தில் என்னை ஆலுவா -பராவூர் சந்திப்பு சாலையில் இறக்கிவிட்டுவிட்டு, ‘வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம்’ என்றார்கள். அங்கிருந்து தப்பித்து காவல்நிலையம் வந்துள்ளேன்'' என்கின்றது அலியார் சலீமின் புகாரின் பேரிலான முதல் தகவலறிக்கை.
முதல் தகவலறிக்கை அடிப்படையில் மிதுன், அனீஷ், சோனமோல் ஆகிய மூன்று நபர்களைக் கைதுசெய்து பாரதீய நியாய சன்ஹிதா 2023இன் பிரிவுகள் 140(2) (கொலை செய்வதற்காக கடத்தல் அல்லது கடத்தல்), 126 (தவறான கட்டுப்பாடு), 296 (ஆபாசமான செயல்கள்), 127 (2) (தவறாக அடைத்து வைத்தல்), 115 (2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), மற்றும் 351 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் முதன்மைக் குற்றவாளியான லட்சுமிமேனன் தலைமறைவாக, காவல்துறையும் தேடுதல் வேட்டையை முடுக்கியது.
இந்நிலையில் அலியார்ஷா சலீம், அவரது குழுவினர்தான் தன்னை அவமதித்தனர் என முன்ஜாமீன் கோரி லட்சுமிமேனன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், நடிகை லட்சுமிமேனனை செப்டம்பர் 17 வரை கைதுசெய்ய தடை விதித்தார். இது இப்படியிருக்க, புகார்தாரரும் அவரது நண்பர்களும் தங்கள் குழுவிலுள்ள பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பீர் பாட்டில்களை அவர்கள் மீது வீசியதாகவும், அவர்களை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும் புதிய புகாரை எர்ணாகுளம் போலீஸாரிடம் முன்வைக்க, அதன் பெயரில் புதிதாக வழக்கு பதிவுசெய்யப் பட்டது.
"பக்கத்து வீட்டுப்பெண் தோற்றம் கொண்டவர் லட்சுமிமேனன். அவர் வில்லத்தனமாக நடந்துகொண்டதை சேனல்கள் தோலுரித்துக் காட்டின. மார்க்கெட் இழந்த நடிகைகளே பெரும்பாலும் பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பப்பிற்கு வருவார்கள். இந்த வழக்கில் லட்சுமிமேனன் முதன்மைக் குற்றவாளி அல்ல. அவரை அழைத்து வந்த 'அரசியல்வாதி' யார்..? துப்பாக்கியுடன் வந்தார் களா.? என விசாரணையை துவக்கியுள்ளது மத்திய விசாரணை அமைப்பு. இதில் இன்னும் பல மர்ம முடிச்சுக்கள் அவிழும்'' என்கின்றனர் அங்குள்ள போலீஸார்.
____________
இறுதிச் சுற்று!
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என்று ஏற்றுமதி யாளர்கள் சங்கத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்த தகவல் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக் குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக வியாழக்கிழமை (28-08-2025) தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், "அமெரிக்க வரியால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழி லாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
-இளையர்