அரசு மாதிரிப் பள்ளி மீது அதிரடி நடவடிக்கை! நக்கீரன் செய்தி எதிரொலி!

ss

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், மாவட்ட கல்வி அலுவலர் அலுவக வளா கத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து படித்த ஆயிரக்கணக்கானோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்த பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றி தரம் உயர்த்திய தமிழ்நாடு அரசு, அனைத்து வசதிகளை யும் செய்து கொடுத்துள்ளது. தேவை யான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் இந்த வருடம் +2 பொதுத்தேர்வில் 58% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று மாவட்டத்தி லேயே கடைசி இடத்திலிருந்தது இந்த பள்ளி. இதில் 107 மாணவர்கள் பெயிலாகி இருந்தனர். இதேபோல, 10ஆம் வகுப்பில் 107 மாணவர்களில் 36 மாணவர்கள் பெயிலாகி 66% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், +1 பொதுத் தேர்வில் 59% மாண வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் பள்ளி நிர்வாகத்தை மாற்றி யமைக்க வேண்டுமென்றும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், மாவட்ட கல்வி அலுவலர் அலுவக வளா கத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து படித்த ஆயிரக்கணக்கானோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்த பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றி தரம் உயர்த்திய தமிழ்நாடு அரசு, அனைத்து வசதிகளை யும் செய்து கொடுத்துள்ளது. தேவை யான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் இந்த வருடம் +2 பொதுத்தேர்வில் 58% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று மாவட்டத்தி லேயே கடைசி இடத்திலிருந்தது இந்த பள்ளி. இதில் 107 மாணவர்கள் பெயிலாகி இருந்தனர். இதேபோல, 10ஆம் வகுப்பில் 107 மாணவர்களில் 36 மாணவர்கள் பெயிலாகி 66% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், +1 பொதுத் தேர்வில் 59% மாண வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் பள்ளி நிர்வாகத்தை மாற்றி யமைக்க வேண்டுமென்றும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறந்தாங்கி வர்த்தக கழகத்தினர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

scc

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோ டன், அறந்தாங்கி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார்.

பொதுத்தேர்வில் அரசு மாதிரிப் பள்ளியின் மோசமான தேர்ச்சி குறித்து நக்கீரன் இணையத் தில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில், அறந்தாங்கியை சேர்ந்த தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரி யர்களுடன் கலந்தாலோசனை செய்தனர். அப் போது தலைமையாசிரியரோ பாட ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களோ, மாணவர்கள் சரியில்லை, பள்ளிக்கு வருவதில்லையென்றும் குற்றம்சாட்டினர். மேலும், ஜூன் மாதத் துணைத்தேர்வில் அனை வரையும் தேர்ச்சிபெற வைப்பதாக உறுதி கூறினார் கள். ஆனால், ஆசிரியர்கள் சொன்ன காரணங்களை ஏற்க முடியவில்லை. ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதை ஏன் எஸ்.எம்.சி., பி.டி.ஏ., கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டுசென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர முயற்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், ஆசிரியர்கள் மத்தியில் ஜாதிப்பிரச்சனையும் அதிகமிருப்பதாக மாணவர்கள் சொல்வதாக தன்னார்வலர்களும், பெற்றோர்களும் கூறினர். இனிவரும் காலங்களில் இப்பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டுமென்றனர்.

இந்நிலையில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பள்ளிக்குச் சென்று, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயந்தி, தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்களிடம் தேர்வு முடிவுகள் குறித்து கேள்வியெழுப்பினார். அப்போது, பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், "அறந்தாங்கி மாடல் ஸ்கூல் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கடைசி இடத்திற்கு வருதுன்னா எப்படி ஏற்க முடியும்? மாணவர்களை குறை சொல்றதை நிறுத்திட்டு, அதை சரிசெய்வதுதான் மாதிரிப்பள்ளி. சென்னையிலுள்ள அரசுப் பள்ளிகளில் குறைந்தது 90% தேர்ச்சியை கொடுக்கிறார்கள். இனிவரும் காலங்களில் குறைகளை சரிசெய்ய ஆசிரியர்களும் தயாராக வேண்டும்'' என்றார் வேதனையோடு.

இதுகுறித்து பெற்றோர்கள் நம்மிடம், "கடந்த ஆண்டு பள்ளிக்குவந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, குப்பை குவியல்களாகக் கிடந்த பள்ளியின் நிலையைப் பார்த்து, பயங்கர கோபமாகி தலைமை ஆசிரியரை கடிந்துகொண்டார். உள்கட்டமைப்பு மட்டுமல்ல, மாணவர்களின் வாசிப்புத்திறனும் மோசமாக இருப்பதைப் பார்த்து எல்லாத்தையும் மாற்றுங்கள் என்று எச்சரித்துச் சென்றார். ஆனால் அதை யாருமே கண்டுக்கல. அதன் பலன்தான் இன்று இப்பள்ளி தலைகுனிந்து நிற்கிறது'' என்றனர்.

இந்நிலையில், மாவட்ட கல்வி நிர்வாகம் நடத்திய ஆய்வில், பள்ளியில் மாணவர் நலனுக்கு எதிராக செயல்பட்ட சில ஆசிரியர்கள் அடை யாளம் காணப்பட்டு கல்வித்துறை செயலாளர் வரை அறிக்கை கொடுத்திருந்த நிலையில் முதற் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதில், தொழிற்கல்வி ஆசிரியர் (விவசாயம்) ஸ்ரீரஞ்சித் குமார் மது போதையில் பள்ளிக்கு வராமலும், பாடம் நடத்தாமல் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டதாக முதுநிலை ஆசிரியர் கள் மு.சி.பாஸ்கர் -கட்டுமாவடி, அந்தோணிராஜ் -வெண்ணாவல்குடி, பாலச்சந்தர் -அத்தாணி, பட்டதாரி ஆசிரியர்கள் இளையராஜா -கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மூர்த்தி, நெடுவாசல், ரவி, கிருஷ்ணாசிப்பட்டினம், ஜெரோம், சுப்பிரமணியபுரம் -ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என 7 ஆசிரியர்களை வெவ்வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் ஆசிரியர்களுக்கு பாடமாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

nkn140625
இதையும் படியுங்கள்
Subscribe