Advertisment

ராங்கால் அதிரடித் தீர்ப்பு! ஹேப்பி எடப்பாடி! அயோத்தி மண்டபம்! பா.ஜ.க. அடாவடி!

eps

""ஹலோ தலைவரே, சென்னை அயோத்தியா மண்டபப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க. அரசியல் பண்ணப் பார்க்குதே?''’’

Advertisment

""இப்படிப்பட்ட அரசியல் தமிழ்நாட்டில் ஒரு போதும் எடுபடாதுன்னு சட்டமன்றத்தில் முதல்வர் சொல்லியிருக்காரே?''’’

Advertisment

aa

""ஆமாங்க தலைவரே, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்ட பத்தை ஸ்ரீராம சமாஜ் என்ற ஒரு இந்து அமைப்புதான் நிர்வகித்து வந்துச்சு. 2014-ல் ஜெ.வின் உத்தரவுப்படி இந்த மண்டபத்தை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை அண்மையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அந்த மண்டபத்துக்கு அரசு அதி காரிகள் சென்றனர். அப்போது அப்பகுதியின் பா.ஜ.க. கவுன்சிலர் உமாஆனந்தன் தலைமை யில் அந்தக் கட்சியினர் அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் அவர்களைக் கைது செய்த போலீஸ், அன்று மாலையே அத்தனை பேரையும் பத்திரமா வீட்டுக்கு அனுப்பிடுச்சி.''’’

""அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அயோத்தியா மண்டபத்துக்கு அரசு அதிகாரிகள் போறது தப்பா?''’’

""இதே கேள்வியைத் தான் அரசுத் தரப்பும் கேட்குது. இந்தப் பிரச்சினையில் என்ன நடந்துச்சுன்னா, அயோத்தியா மண்டபம் ஜெ.’அரசால் கைப்பற்றப்பட்ட பிறகு, அதை கவனிக்க தக்கார் ஒருவரும் நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அதை அறநிலையத்துறைதான் நிர்வாகம் செய் யுது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தை அதிகாரிகள் பார்வையிடுவதும், கணக்கு வழக்குகளைச் சரிபார்க்க வருவதும் வழக்கமா நடக்குறதுதான். இப்ப உள்ளாட்சித் தேர்தலில் இந்த பகுதியில் பா.ஜ.க.வைச் சேர்ந

""ஹலோ தலைவரே, சென்னை அயோத்தியா மண்டபப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க. அரசியல் பண்ணப் பார்க்குதே?''’’

Advertisment

""இப்படிப்பட்ட அரசியல் தமிழ்நாட்டில் ஒரு போதும் எடுபடாதுன்னு சட்டமன்றத்தில் முதல்வர் சொல்லியிருக்காரே?''’’

Advertisment

aa

""ஆமாங்க தலைவரே, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்ட பத்தை ஸ்ரீராம சமாஜ் என்ற ஒரு இந்து அமைப்புதான் நிர்வகித்து வந்துச்சு. 2014-ல் ஜெ.வின் உத்தரவுப்படி இந்த மண்டபத்தை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை அண்மையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அந்த மண்டபத்துக்கு அரசு அதி காரிகள் சென்றனர். அப்போது அப்பகுதியின் பா.ஜ.க. கவுன்சிலர் உமாஆனந்தன் தலைமை யில் அந்தக் கட்சியினர் அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் அவர்களைக் கைது செய்த போலீஸ், அன்று மாலையே அத்தனை பேரையும் பத்திரமா வீட்டுக்கு அனுப்பிடுச்சி.''’’

""அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அயோத்தியா மண்டபத்துக்கு அரசு அதிகாரிகள் போறது தப்பா?''’’

""இதே கேள்வியைத் தான் அரசுத் தரப்பும் கேட்குது. இந்தப் பிரச்சினையில் என்ன நடந்துச்சுன்னா, அயோத்தியா மண்டபம் ஜெ.’அரசால் கைப்பற்றப்பட்ட பிறகு, அதை கவனிக்க தக்கார் ஒருவரும் நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அதை அறநிலையத்துறைதான் நிர்வாகம் செய் யுது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தை அதிகாரிகள் பார்வையிடுவதும், கணக்கு வழக்குகளைச் சரிபார்க்க வருவதும் வழக்கமா நடக்குறதுதான். இப்ப உள்ளாட்சித் தேர்தலில் இந்த பகுதியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த உமா ஆனந்த், கவுன்சிலரா வெற்றி பெற்றதால், அவர் தன் இருப்பை வெளிப்படுத்த இப்படியொரு போராட்டத்தை நடத்தி இருக்கார். ஜெயலலிதாதான் இந்த விவகாரத்தின் மையப்புள்ளி. அதனால், இந்த விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. வாயைத் திறக்கலை. அதனால் பா.ஜ.க.வுக்கு அவர்கள் மீதும் கடும்கோபமாம். அதேபோல் ஜெ. அரசுவையும் அவர்கள் இப்ப சபிக்கிறார்களாம்.''’’

""அயோத்தியா மண்டபத்தை ஜெயலலிதா ஏன் கையகப்படுத்துச்சு?''’’

jaya

""காஞ்சிமட ஜெயேந்திரர் தலைமையில் இந்துமத ஆன்மீக நிகழ்ச்சிகள் அங்கே அடிக்கடி நடந்தது. பல நேரங்களில் அந்த மண்டபத்திலேயே ஜெயேந்திரர் தங்கி இருப்பாராம். அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் முரண்பாடு வந்தபோதுதான், காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக் கில் ஜெயேந்திரர் வசமா சிக்கினாரு. இனி எந்தக் காலத்திலும் அயோத்தியா மண்டபத்தில் ஜெயேந்திர ரின் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாதுன்னு திட்டமிட்ட ஜெயலலிதா, ஸ்ரீராம் சமாஜ் அமைப்பினரை வைத்தே வழக்குப் போட வைத்து, அந்த மண்டபத்தை அறநிலையத் துறை மூலம் கையகப்படுத்தினாராம். இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஜெ.’ மீதான கோபம் அந்த ஏரியா பா.ஜ.க.வினரிடம் இருந்து இன்னும் தணியலையாம்.''’’

""பால்வளத்துறையில் உள்ள அதிகாரிகள், பொங்கி வழிகிறார்களே?''’’

’""பால்வளத்துறை மானியக் கோரிக்கையைத் தொடர்ந்து, துறை யின் செயலாளரான ஜவஹர் ஐ.ஏ.எஸ்., ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். முதல் நாள் முற்பகல் கூட்டத்தை, ஆவின் தலைமை யகத்தில் நடத்தியவர், பிற்பகல் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தி, அங்கே அனைவரையும் ஓடிவர வைத்திருக்கிறார். இரவு வரை அன்றைய கூட்டம் நடந்த நிலையில், மறுநாளும் இதேபோல காலையில் தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதோடு விடாமல் மூன்றாம் நாளும் காலையில் அவர் கூட்டத்தை நடத்தி, அனைவரையும் நெளிய வைத்திருக்கிறார். கூட்டத்தில் பெண் அதிகாரி களும் இருந்த நிலையிலும் நேரம்காலம் இன்றி அவர் நள்ளிரவு வரை, அவர்களை அலைக்கழித்ததுதான் புலம்ப வைத்திருக்கிறது. இது தொடர்பான புகார் முதல்வர் வரை போயிருக்கிறதாம்.''’’

""காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்துதே?''’’

""ஆமாங்க தலைவரே, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட நினைக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாத யாத்திரை நடத் தும்படி தங்கள் மாநில கமிட்டி களுக்கு அறிவுறுத்தி இருந்தார். சுதந்திர இந்தியாவுக்காக ராஜாஜி தலைமையில் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தி யாக்கிரகப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், ஏப் ரல் 13-ந் தேதி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதயாத் திரையை ஆரம்பித்தனர். தமிழக காங்கிரஸ் கமிட் டித் தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்பாட்டில், மாஜி மாநிலத் தலைவர் தங்க பாலு தலைமையில் இதை ப.சி. தொடங்கி வைத்தார். திருச்சியில் பாதயாத்திரை என்றதும், தொகுதி எம்.பி.யான தனக்கு அதில் முக்கியத்துவம் தரவில்லை என திருநாவுக் கரசர் பஞ்சாயத்து வைக்க, அதன் பிறகே வாழ்த்துரைப் பட்டியலில் அவருக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டதாம்.''’’

""காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் நிலைப் பாட்டுக்கு எதிரா, மற்றொரு பாத யாத்திரையையும் நடத்துதே?''’’

""ஆமாங்க தலைவரே, பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி. எல்லைக்குள் கொண்டுவர வேண்டாம் என்கிறது தி.மு.க. அரசு. காரணம், அப்படிக் கொண்டு வந்தால் மாநில அரசுக்கு நேரடியாகக் கிடைக்கும் வரி வருவாயில் சிக்கல் ஏற்படும் என்பது தி.மு.க. அரசின் வாதம். அதே நேரம் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருளை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறது. போதாக்குறைக்கு ஜி.எஸ்.டி.க்குள் அதைக் கொண்டு வரவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில், கோவையில் இருந்து சென்னை நோக்கிப் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளது அக்கட்சியின் மனித உரிமைப் பிரிவு. பாதயாத்திரை சென்னைக்கு வரும்போது தேவையில்லாத டென்ஷன் உருவாகலாம்னு உஷாரா கவனிக்கப்படுது.''’’

""டி.டி.வி.தினகரனை அமலாக்கத்துறையின் விசாரணை மிரள வச்சிருக்கே?''’’

""அது பற்றி தனி மேட்டர் நம்ம நக்கீரனில் வந்திருக்குங்க தலைவரே. நானும் சில செய்திகளை சொல்றேன். இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அமலாக்கப் பிரிவின் 11 மணி நேர விசாரணையில் சிக்கிக்கொண்டு ரொம்பவே திணறி இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் மூலம் நடந்த இந்தப் பணப்பரிவர்த்தனை முயற்சியின் போது, 2 கோடி ரூபாய் ஹவாலாப் பணம், வழக்கறிஞர் கோபிநாத் வழியாக டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை மடக்கிய அமலாக்கத்துறை, அதில் இருந்த எண் வரிசையும், மல்லிகார்ஜுனா கொடுத்தனுப்பிய பணத்தின் எண் வரிசையும் ஒத்துப்போவதை உறுதிசெய்தது. விசாரணை தீவிரமானதைக் கண்ட, வழக்கின் சாட்சியான வழக்கறிஞர் கோபி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் தான் கைதுசெய்யப் படலாம் என்ற அச்சத்தில் தூக்கத்தை இழந்திருக்கிறார் தினகரன்.''’’

""அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப் பட்டது செல்லும்னு நீதிமன்றம் தீர்ப்பளிச்சிருக்கே?''’’

sasi

""ஆமாங்க தலைவரே, தான் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு சிறை சென்ற நேரத்தில், தன்னை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது தவறுன்னு சசிகலா தொடர்ந்த வழக்கை, இப்போது உரிமை யியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட் டது. இது சசிகலாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரை விடவும் அதிகமாக ஓ.பி.எஸ்.தான் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம். இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், இப்படி சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்திருக்கக் கூடாது என்று ஓப்பனாவே சொல்லி இருக்கார். காரணம், சசிகலாவின் பவரைக் காட்டித் தான், எடப்பாடியின் அதிகாரத்தைக் குறைக்கத் திட்டமிட்டிருந்தார் அவர். ஆனால், இந்த தீர்ப்பினால் எடப்பாடி தெம்பாகிவிட்டதால், தன் எண்ணம் பாழாகி விட்டதேன்னு அவர் வருத்தப்படறாராம்.''’’

eps

""நானும் இது தொடர்பாக ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். இந்த கட்சிப் பதவி நீக்க வழக்கில் தோல்வியைத் தழுவினாலும், கொஞ்சமும் அசராத சசிகலா, மேல்முறையீடு செய்வதன் மூலம் காலத்தை இழுத்தடிக்க லாம்ன்னு நினைக்கிறாராம். இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுக்குழு, வரும் மே மாதம் 10 ஆம் தேதி வாக்கில் கூட இருப்பதால், அதில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தென்மாவட்டப் பிரமுகர் களை வைத்து, அ.தி.மு.க.வை உடைத்து விடலாம் என்றும் அவர் கணக்குப் போடுகிறாராம். அதனால்தான் என்னை அவ்வளவு சீக்கிரம் விரட்ட முடியாது என்று எடப்பாடிக்கு சவால் விட்டு அவர் பேசிக் கொண்டு இருக்கிறார் என்கிறார்கள்.''’’

nkn160422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe