திருச்சி பாலக் கரை தி.மு.க. பகுதிச் செயலாளராக இருக்கும் மண்டி சேகர் மீது ஏகப்பட்ட புகார்கள், அப்பகுதியினரால் தெற்கு மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. சேகர் ஒரு மூத்த அமைச்சரின் ஆதரவானவர். அந்த தைரியத்தால் பல அட்டூழியங்கள் செய்து வருவதாக பக்கம் பக்கமாக புகார்களை நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர்.

திருச்சியில் வேறெந்த பகுதி கழகச் செயலாளர் மீதும் சொல்லப்படாத குற்றச்சாட்டு இவர் மீது மட்டும் ஏன் சொல்லப்படு கிறது? என்று விசாரித்ததில், மண்டி சேகர் சென்னையில் படித்துவரும் தன்னுடைய மகனுக்கு, வட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்குவதற்காக, கட்சிக்கு பாரபட்சமில்லாமல் உழைத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல், கட்சித் தொண்டர்களை நிராகரிப்பதாகவும், எந்த வட்டக் கழக நிர்வாகி களையும் ஆதரிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

dd

பணம் வாங்கிக் கொண்டு தொண்டர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்குகிறார். கட்சிக்குப் பாடுபட்டு பதவி கிடைக் காதவர்கள் யாரேனும் கேட் டால், அமைச்சர்தான் பொறுப்பு கொடுக்கவேண்டாமென கூறியதாக சொல்லி சமாளித்துவிடுகிறார். பகுதி கழகத்திலுள்ள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினால் அவருக்கு ஆதரவானவர்களை வைத்து கூட்டம் போட்டுக்கொள்கிறார். எந்த நிர்வாகிகளையும் அவர் மதிப்பது இல்லை என்று பல புகார்க் குரல்கள் எழுகின்றன.

Advertisment

மாநகராட்சி ஒப்பந்தங் களிலும் தன்னுடைய பகுதியில் செயல்படுத்தும் மாநகராட்சி தொடர்பான சாலை போடுதல், கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட எந்த பணியாக இருந்தாலும், அந்த ஒப்பந்ததாரரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டுதான் பணி செய்ய அனுமதிக்கிறார். கமிஷன் தரவில்லை என்றால் அந்த பகுதிகளில் பணி செய்யவிடாமல் ஏதாவது ஒரு காரணம் காட்டி முட்டுக்கட்டை போடுகிறார் என சில நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர்.

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க நாம் களம் இறங்கியபோது, திருச்சி தி.மு.க .பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் மண்டி சேகர் மீது முதல்வர் தனிப் பிரிவிற்கு ஒரு பெண் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ள தாக தகவல் தெரியவந்தது.

திருச்சி முதலியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 08-09-2021 அன்று முதல்வருக்கு தன்னுடைய கைப்பட ஒரு மனுவை எழுதி அனுப்பியுள்ளார். மண்டி சேகர் என்னும் ராஜசேகர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிவிட்ட தாக அதில் கூறியுள்ளார்.

Advertisment

இந்த கடிதம் குறித்து அந்த பெண் ணைத் தொடர்பு கொண்டபோது, இந்த தகவல் உண்மை இல்லை என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். இருப்பினும் அவர் அனுப்பிய புகார் மனுவின் நகலைக் கொண்டு விசாரித்தோம்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக மண்டி சேகரை தொடர்பு கொண்டபோது... "நான் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து பகுதி கழகச் செயலாளராக இருக்கிறேன். கவுன்சிலராகவும் இந்த பகுதியில் இருந்திருக்கிறேன். என்மீது பொறாமைகொண்ட உறவுக்காரர்தான், இப்படி ஒரு புகார் மனுவை அனுப்பியுள் ளார். வட்டக் கழக நிர்வாகி கள் இல்லாமல் எந்தக் கூட்ட மும் நடத்தியது இல்லை. பணம் வாங்கிக்கொண்டு எந்த பதவியும் போட்டுக் கொடுக்கவில்லை''’என்று மறுப்புத் தெரிவித்தார்.

முதல்வரின் தனிப் பிரிவுக்கு பெண் அனுப்பிய புகார் மனு குறித்துக் கேட்ட போது, "ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. அந்தப் பெண்ணுக்கு 2 கணவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றொருவர் விவாகரத்து வாங்கிக்கொண்டு சென்று விட்டார். தனியாக பரிதாப மாக வாழ்க்கை நடத்திய அவர் கேட்டுக்கொண்டதால் உதவி செய்தேன். அது எனக்கு உபத்திரவமாக மாறிவிட்டது. இந்த குற்றச் சாட்டுகள் அனைத்தும் என் பெயரைக் கெடுக்கத் திட்ட மிட்டுச் சொல்லப்பட்டவை. என்மீது எந்த தவறும் இல்லை'' என்று அழுத்தமாகச் சொன்னார்.