ஜீ.வி.பிரகாஷின் அடுத்த வேடம்!

திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன், 30 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் செட்டிலாகி, ‘டெல்’ கணேசன் என்ற பெயருடன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் கூட்டு சேர்ந்து ஹாலிவுட் படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

‘கிறிஸ்துமல் கூப்பன்’, டெவில்ஸ் நைட்’ என்ற இரு படங்களை ஹாலிவுட்டில் மட்டும் ரிலீஸ் செய்தார். மேற்படி இரு படங்களிலும் திருச்சியைச் சேர்ந்த கணேசனின் நண்பரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், தி.மு.க. எம்.பி.யாகவும் இருந்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு தாவி, இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நெப்போலியன் நடித்திருந்தார்.

கிறிஸ்துமஸ் கூப்பன், ‘டெவில்ஸ் நைட்’ படங்களின் டீஸரை மட்டும் வெளியிட ஹாலிவுட் நடிகர்-நடிகைகளுடனும் நெப்போலியனுடனும் சென்னை வந்த டெல் கணேசன். முழுப்படத்தையும் கண்ணிலேயே காட்டாமல் அமெரிக்கா பறந்துவிட்டார்.

Advertisment

‘டெல்’ கணேசன்தான் "ட்ராப் சிட்டி' என்ற மூன்றாவது ஹாலிவுட் படத்தை எடுத்திருக்கிறார். வழக்கம்போல் இதிலும் நெப்போலியன் உண்டு. கூடுதலாக ஒரு டாக்டர் கேரக்டர். அதில் நம் ஊரு ஜீ.வி.பிரகாஷ் முதல்முறையாக ஹாலிவுட்டில் என்ட்ரியாகிறார்.

கெரோனா லாக் -டவுன் மட்டும் இல்லேன்னா "ட்ராப் சிட்டி'யின் டீசரையும் காட்ட ஹாலிவுட் படையுடன் சென்னை வந்திருப்பார் ‘டெல்’ கணேசன்.

என்ன பண்றது நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்.

Advertisment

tt

உலக அழகியும் உள்ளூர் பேயும்!

tt

உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்தவர் ஊர்வசி ராட்டிலா. ‘"சிங்சாப் தி கிரேட்' என்ற இந்திப் படத்தில் 2013-இல் ஹீரோ யினாக அறிமுகமானார். அதன்பின்தான், அதாவது 2015-இல்தான் "மிஸ் டிவா யுனிவர்ஸ்' அழகிப் பட்டம் வென்றார். இதுவரை ஊர்வசி நடித்த மொத்த படங்களே 10-தான். அதில் 8 இந்திப் படம், ஒரு பெங்கால் படம், ஒரு கன்னடப்படம். இப் போது முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் தனது பொற்பாதங்களை எடுத்து வைக்கிறார் உலக அழகி ஊர்வசி ராட்டிலா. ஊர்வசிக்கு சில கோடிகளை அட்வான்ஸாக கொடுத்து, பாதம் நோகாமல் அழைத்து வருகிறார் தெலுங்கின் மெகா புரொடியூஸரான ஸ்ரீனிவாசா சித்தூரி. "பிளாக் ரோஸ்' என்ற த்ரில்லர் படமான இதில் ஊர்வசிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஸ்கிரிப்ட் ரைட்டர் சம்பத் நந்தி. மோகன் பரத்வாஜ் டைரக்ட் பண்ணும் "பிளாக் ரோஸ்' ஷூட்டிங் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஸ்டார்ட் ஆகிவிட்டது. இந்தியிலும் இப்படம் ரிலீஸாகிறது.

ஆந்திரா வரைக்கும் வந்தாச்சு, அப்படியே தமிழ்நாட்டுக்கும் வந்திரும்மா உலக அழகியே உனக்கு புண்ணியமாப் போகும்.

சலோனிக்கு ஒரு சல்யூட்!

சலோனி லுத்ரா. மும்பையைச் சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான இவர், நடிப்பில் செம ராட்சசி. 2014-இல் நவீன் சந்திராவுக்கு ஜோடியாக "சரபம்' படம் மூலம் தமிழில் அறிமுகமாமனார். அக்கா-தங்கை இரட்டை வேடத்தில் அசத்தி யிருந்தாலும், படம் பெரிதாக போகவில்லை. அதற்காக சலோனி கவலைப்படவும் இல்லை.

பணம் கிடைக்கிறது என்பதற்காக மசாலா படங்களை ஒத்துக்கொள்ளமாட்டார். டைரக்டர், கேரக்டர் சரியில்லை என்றால் அந்தப் படத்தை தூக்கி எறியவும் தயங்கமாட்டார். "பறந்து செல்ல வா' படத்தில் கமிட்டாகி சிங்கப் பூரில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது, டைரக்டருடன் லடாய் ஆகி வெளியேறிவிட்டார்.

அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் சலோனி லுத்ராவின் குறும்படங்கள் பல விருதுகளை வாரிக்குவித்துள்ளன. சமீபத்தில் (லாக்-டவுனுக்கு முன்பு) ரிலீசான "பானுமதி இராமகிருஷ்ணா' படத்தில் இவரது அசாத்திய நடிப்பைப் பார்த்து பல தமிழ் டைரக்டர்கள் அசந்து போயுள்ளனராம். லாக்-டவுன் முடிந்ததும் சலோனிக்கு சல்யூட் அடிக்க வரிசை கட்டி நிற்பார்கள்போல.

தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் சலோனி. என்னது இது இந்த மேட்டர்ல சலோனி லுத்ராவைப் பத்தி ஓவரா புகழ்ந்துட்டோமா? சரி விடுங்க… திறமையான நடிகைய புகழ்றதுல என்ன தப்பு?

-ஈ.பா.பரமேஷ்வரன்