Advertisment

பள்ளிக் கல்வியில் சாதனை! -லண்டனில் அன்பில் மகேஷ்

anbilin-oxfor

தி.மு.க.வின் திராவிட மாடல் அரசில் பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், உலகின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டுவிட்டு தமிழகம் திரும்பியிருக் கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்! 

Advertisment

அந்த கருத்தரங்கத்தில், "திராவிட மாடலும் கல்வியும்: சாதனைகள் மற்றும் சவால்கள்' எனும் தலைப்பில் அன்பில் மகேஷ் ஆற்றிய உரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கள், கல்வியாளர்கள், மாணவ -மாணவிகள் அனைவரையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது. சென்னை திரும்பிய அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, "திராவிட மாடல் அரசில் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச் சிக்காக எடுக்கப்படும் முயற்சிகளை உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கிறாய்'' என்று அன்பில் மகேஷை பாராட்டியிருக்கிறார் ஸ்டாலின். 

Advertisment

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்

தி.மு.க.வின் திராவிட மாடல் அரசில் பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், உலகின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டுவிட்டு தமிழகம் திரும்பியிருக் கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்! 

Advertisment

அந்த கருத்தரங்கத்தில், "திராவிட மாடலும் கல்வியும்: சாதனைகள் மற்றும் சவால்கள்' எனும் தலைப்பில் அன்பில் மகேஷ் ஆற்றிய உரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கள், கல்வியாளர்கள், மாணவ -மாணவிகள் அனைவரையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது. சென்னை திரும்பிய அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, "திராவிட மாடல் அரசில் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச் சிக்காக எடுக்கப்படும் முயற்சிகளை உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கிறாய்'' என்று அன்பில் மகேஷை பாராட்டியிருக்கிறார் ஸ்டாலின். 

Advertisment

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய அன்பில் மகேஷ், மரபான அறிவும் நவீனக் கொள்கையும், திராவிட பரிணாமம், திராவிட மாடலின் மையக் கொள்கைகள், உலகளாவிய அணுகல்-எல்லார்க்கும் எல்லாம், சமுகநீதியின் உள்ளடக்கம், சிறப்பை ஜனநாயகப்படுத்துதல்,  மாற்றத்தை வழங்கும் திட்டங்கள், மொழி மற்றும் கலாச்சாரப் பெருமை, தமிழ்க் கல்விக்கான உலகளாவிய அங்கீகாரம், உலகமயமாக்கலும் தமிழ்நாடும் ஆகிய தலைப்புகளில் பேசிய அன்பில் மகேஷ், நீதிக்கட்சி முதல் பேரறி ஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிவரை,  பள்ளிக்கல்வித் துறையில் திராவிட மாடல் அரசு ஏற்படுத்திய புரட்சிகள், உருவாக்கிய மாற்றங்கள், உருவான வளர்ச்சிகள், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் என அனைத்தையும் விரிவாகச் சுட்டிக்காட்டினார். 

anbilin-oxfor1

தனது பேச்சின் இறுதியில், "அரசுப் பள்ளிகளை பெருமையின் அடையாளமாக மாற்றிய சாதனை களையும் சவால்களையும் நேரில் கண்டவனாகத் தான் இந்த அரங்கில் நான் நிற்கிறேன். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் திராவிட மாடல் எனும் சமூக மாற்றத்துக்கும் இடையேயான ஆழமான தொடர்பை உணர்கிறேன். ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு மற்றும் பொருளாதாரச் சூழலை பொருட் படுத்தாமல் அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் திறன் களைக் கல்வியால் வெளிக்கொண்டு வந்திருக்கிறது திராவிட மாடல். 

இந்தியாவை, உலகமயமாக்கல் மறுவடிவமைக்கத் தொடங்கியபோது, தமிழ்நாடு அதை ஏற்கத்தயாராக இருந்தது. கலைஞரின் தொலைநோக்குத் தலைமையில், இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி தொழில்நுட்ப மாற்றத்திற்கு அடித்தளமிட்டோம். இன்று தமிழர்கள் உலகளாவிய தலைவர்களாக உருவாகியுள்ளனர். வணிக நிறுவனங்களை உருவாக்கி அவைகளை வழிநடத்தி, புதுமையான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து, சாத்தியமற்றவற்றை சாத்தியமாக்கி சாதனை படைத்து வருகின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற சந்திராயன் விண்வெளிப் பயணங்களை வழிநடத்திய 3 இயக்குநர்களும் தமிழ்நாட்டின் கல்வி முறையின் சாதனையாக விளங்குகிறார்கள். 

திராவிட மாடல் கல்வி ஒரு பிரிஸத்தைப் போல, ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட திறன்களை கண்ட றிந்து, அதற்கான பாதைகளை அமைத்துக் கொடுக் கிறது; அவர்களைக் கொண்டாடுகிறது. சாதாரணமானவர்கள் அசாதாரணமானவற்றைச் சாத்தியமாக்கும் விடியலை உருவாக்குபவர்கள். அமைச்சராக, அரசுப் பள்ளிகளின் பிம்பத்தை மாற்றுவதற்கும், அதன் பெருமை மற்றும் உள்ளடக்கத்தின் அடையாளமாக மாற்று வதற்கும் எனது நாட்கள் அர்ப்பணிக்கப் பட்டன''’என்றார் மிகப்பெருமிதமாக. 

இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் மாணவ -மாணவிகளுடன் கலந்துரையாட லில் கலந்துகொண்டார் அன்பில் மகேஷ். அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விரிவான பதிலைத் தந்து, அவர்களை வியக்க வைத்திருக்கிறார். மேலும், "காஃபி வித் அன்பில்' எனும் நிகழ்வில் அவர் பங்கேற்றபோது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ -மாணவியர்களுக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் "அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்ட'த்தின் மூலம் லண்டனில் பயின்று வரும் மாணவர்கள் தங்களின் அனுபவங் களை பகிர்ந்துகொண்டனர். 

anbilin-oxfor2

லண்டன் பொருளியல் பள்ளியில் அம்பேத்கர் படித்தபோது அவர் தங்கியிருந்த இல்லத்தைப் பார்வையிட்டார் அன்பில் மகேஷ். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள மற்றொரு உலகப் புகழ்ப்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அங்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த தந்தை பெரியாரின் புகைப்படம் மற்றும் அரங்கத்தை  பார்வை யிட்டு மகிழ்ந்தார். 

மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தின் யூனியன் விவாத அரங்கம், சர்வதேச அளவில் புகழும் பெருமையும் கொண்டது. அதனை பார்வையிடுவதே பெருமை. அந்த சேம்பருக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், "அங்குதான் சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதிகளும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக தங்களின் கருத்துக்களையும் அறிவுத் திறமைகளையும் சோதித்துப் பார்த் துள்ளனர். அங்கு நடந்துள்ள விவாதங்கள் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஜனநாயகத்தின் உணர்வை வெளிப்படுத்துகின்றன'' என்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். 

பள்ளிக் கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு ஏற்படுத்தியுள்ள மறுமலர்ச்சி களை உலக அரங்கில் உரத்துச் சொல்லி யிருக்கிறது தமிழ்நாடு! 

-இளையர்

nkn181025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe