ண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர், மாணவர்களின் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்கி யுள்ளது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்கிய அ.தி.மு.க. அரசின் 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு. இன்னொரு பக்கம், தகுதியிருந்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் பலரை அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்காதது, அதிக மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொது ஒதுக்கீட்டில் கிடைக்கக்கூடிய சீட்டுகளையும்கூட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பட்டியலில் சேர்த்து அடுத்து நிலையில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்க விடாமல் செய்தது, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுத்தது என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

reservation

இதுகுறித்து, நாம் விசாரித்தபோது, நீட் தேர்வு- அதற்கான கோச்சிங் இவை ஏழை-கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்தது. +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு தகர்ந்துபோனது. இதனால், தொடர்ந்து மாணவர்களின் தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. நீட் தேர்வே வேண்டாம் எனத் தமிழகத்தின் குரல் வலுப்பெற்ற நிலையில், அதற்குப் பதிலாக, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும்வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு தந்த பரிந்துரையில் 50%, 30%, 10% என படிப்படியாக விவாதிக்கப் பட்ட நிலையில், 7.5% நீட் உள் இடஒதுக்கீட்டை கடந்த 2020 மார்ச்-21 ந்தேதி 110 விதியின்கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அரசுப் பள்ளி மாணவர்கள் ஏறத்தாழ 400 பேர் இந்தக் கல்வியாண்டில் மருத்துவம்- பல்மருத்துவம் படிக்க வாய்ப்பு அமைந்திருந்தாலும், இந்த, உள் இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு அதிமுக அரசு செய்த துரோகத்தை நம்மிடம் பட்டியலிடுகிறார் தமிழ்நாடு மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனர் த.ப. கலாநிதி. ""அரசுப்பள்ளி மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து சிறந்த மருத்துவர்கள் ஆக்குவதுதான் நீட் உள் இட ஒதுக்கீட்டின் நோக்கம். ஆனால், அந்த எண்ணிக் கையைக் குறைத்து, அரசுப்பள்ளி மாணவர்கள் பலரை 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தள்ளிவிட்டது அந்த நோக்கத்திற்கே எதிராக உள்ளது. உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டபிறகும் கூட நீட் மதிப்பெண்ணிற்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. மேலும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில், 25 சதவீதம் இட ஒதுக் கீட்டில் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான நிதி யுதவியை பாதியாக குறைத்துவிட்டது தமிழக அரசு. இதனால், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் செலவு செய்யமுடியாமல் திணறிவருகிறார்கள். மேலும், வருடத்துக்கு 13.5 லட்ச ரூபாய் பணம் கட்டி படிக்கும் மாணவர்கள் மத்தியில் இலவசமாக படிக்கும் போது இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகலாம்.

Advertisment

reservation

நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் தானாகவே (Open Quota)அரசு மருத்துவக்கல்லூரி களில் சேர்ந்துவிடுவார்கள். ஆனால், 650க்குமேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களைக்கூட நேரடி கவுன்சிலிங் மூலம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்காமல் 7.5 உள் இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்த்து, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று இந்த உள் இட ஒதுக்கீட்டின் மூலம் சேர தகுதியான மாணவர்களின் மருத்துவ இடங்களை பறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது அதிமுக அரசு. ஆனால், நீட் தேர்வில் 650 மதிப்பெண் மாணவரால் நேரடியாக சென்னை எம்.எம்.சி மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடியாது என்று சிலர் கூறுகிறார்கள். எம்.எம்.சி மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்கிற முறையில் நான் கேட்கிறேன். எம்.சி.சியைத் தவிர, மற்ற மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் தரமற்றவையா?

நான், சென்னையிலுள்ள மருத்துவக்கல்லூரியில் படித்தபோது என்னுடன் படித்தவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு எம்.டி. படிப்பை கோயம்பத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு சென்னையில் கார்டியாலஜி படித்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சீஃப் கார்டியாலஜிஸ்டாக இருக்கிறார். அப்படியென்றால், அவர்கள் படித்த அரசு மருத்துவக் கல்லூரிகள் தர மானவைதானே? எங்கே போனது எம்.எம்.சியின் நம்பர்-1 என்கிற தரம்? 20 வருடத்துக்குமுன்பே எம்.எம்.சி.யை விட கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நுழைவுத்தேர்வில் அதிகமாக வெற்றிபெற்று முதுநிலைப் படிப்பில் சேர்ந்த வரலாறு உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ள கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம்பெற்றுள்ளாரே அவர் என்ன எம்.எம்.சியில் படித்தாரா? அரசுக் கல்லூரிகள் அனைத்தும் சமம். நமது நோக்கம், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவர்களை உள் இடஒதுக் கீட்டின்மூலம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ப்பதுதானே தவிர, எம்.எம்.சி.யில் சேர்ப்பது என்ற மாயையில் சிக்கி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவருக்கு கிடைக்கும் வாய்ப்பை பறித்துவிடக்கூடாது"" என்று சுட்டிக்காட்டுகிறார்.

reservation

""தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசுப் பள்ளிமாணவர்கள் பலர் அதற்கான கட்டணத்தைக் கட்ட இயலாமல் தவித்த நிலையில், அதனை திமுக ஏற்கும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டதும் சிலமணிநேரத்திலேயே கல்வி மற்றும் விடுதிக்கட்டணத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதை, ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை''’என்கிற டாக்டர் கலாநிதி, ""ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை ஏற்பதாக சொன்னாலும் கூட தனியார்க்கல்லூரிகளில் படிக்கும்போது மேற்கொண்டு செலவுகள் இருக்கின்றன. அதாவது புத்தகங்கள், சீருடைகள், கிராமங்களுக்கு ஃபீல்டு விசிட், போஸ்ட்மார்ட்டம் பயிற்சிகள் என வருடா வருடம் 50,000 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய்வரை 4 வருடங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும். அந்த, செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் அந்த மாணவர்கள் கஷ்டமில்லாமல் படிப்பார்கள். இதற்கு, தீர்வு உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப்பள்ளி மாணவர்களை அரசுக் கல்லூரிகளில் மட்டுமே சேர்ப்பதுதான்'' என்கிறார் கோரிக்கையாக.

“அரசுப்பள்ளி மாண வர்களை அரசுக்கல்லூரிகளில் மட்டுமே சேர்க்காமல் வஞ்சித்ததுபோல, ஏழை எளிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் வஞ்சித்துவிட்டது அதிமுக அரசு’’என்று குற்றஞ்சாட்டும் இளைஞர் இயக்கத்தின் தலைவர் டாக்டர் எழிலன் நம்மிடம், ""அரசுப்பள்ளிகள் எப்படியோ அதேபோல் ஏழை, எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள்தான் அரசு உதவிபெறும் பள்ளிகள். தமிழ்நாட்டின் கிராமங் கள் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பளம் உட்பட அனைத்து நிதியையும் அரசாங்கம்தான் ஒதுக்குகின்றது. அப்படியிருக்க, 7.5 சதவீத ஒட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை சேர்க்காதது மிகப்பெரிய வஞ்சனையை செய்துவிட்டது தமிழக அரசு.

மேலும், 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கு வதாக கலையரசன் குழு பரிந்துரையை 7.5 சதவீத மாக தமிழக அரசு எந்த அடிப்படையில் குறைத் தது? அதனால், உள் இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தவேண்டும். அரசுப்பள்ளியில் படித்திருந் தாலும்கூட கடனெல்லாம் வாங்கி நீட் கோச்சிங் செண்டர்களில் இரண்டு வருடங்களுக்கு மேல் படித்த மாணவர்கள்தான் 7.5 பட்டியலில் அதிக மதிப்பெண் வாங்கியதாக இடம்பெற்றிருக்கிறார் கள். ஆக, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படை யில் மருத்துவச்சேர்க்கை நடத்துவதுதான் தீர்வு. அதில், தற்போது வழங்கப்பட்டது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்’’ என்கிறார் ஆலோசனையாக.

அதிமுக அரசு, உள் இட ஒதுக்கீட்டை சரியாக அமல்படுத்த வேண்டும். இல்லையென் றால், நீட்டை ரத்து செய்யவேண்டும். ஓட்டுக் காக, மக்களை ஏமாற்றி ஏழை எளிய மாணவர் களின் மருத்துவக்கனவை குழி தோண்டி புதைக்கக் கூடாது.

-மனோசௌந்தர்