ய்.எம்.சி.ஏ. நிறுவனத்துக்கு சொந்தமான 19.5 ஏக்கர் நிலம், ஓ.எம்.ஆர் சாலையில் கொட்டிவாக்கத்தில் உள்ளது. பள்ளிக்கூடம், பல்நோக்குக்கூடம் என இருப்பது போக 10 ஏக்கர் நிலத்தை இரண் டாகப் பிரித்து, நீதிமன்ற உத்தரவின் படி 5 ஏக்கர் நிலத்தை கிரிஸ்டல் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு 130 கோடி ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தில் இவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து ஒய்.எம்.சி.ஏ. நிறுவனம் வணிக வளாகம் கட்டி, நிறுவனத்தின் வருமானத்தை பெருக்க வேண் டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி செய்யாமல் ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்தின் பெயரில் இடங்கள் வாங்கி யுள்ளதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாக வும் வில்லியம்ஸ் என்பவர் புகார் கொடுத் திருந்தார்.

ee

அந்த புகாரின் அடிப்படையில் நக்கீரனில், "கோடிக்கணக்கில் ஊழல்! விசாரணை அச்சத்தில் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகள்!' என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதுகுறித்து, ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்தின் சார்பில் வின்சன் ஜார்ஜ் கூறுகையில், "நீங்கள் சொல்லியிருக்கும் செய்தி உண்மைதான், ஆனால் ஊழல் மட்டும் நடைபெறவில்லை. கிரிஸ் டல் கிரியேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார், ஒப்பந்தப்படி 130 கோடியை மூன்று வருடத்திற்குள் கொடுக்க வேண்டும். அதன்படி அவர்கள் அந்தத் தொகையை சிறு தொகை யாகப் பிரித்துக் கொடுத்ததில் மொத்தமாக வணிக வாளாகம் கட்ட முடியாது. அந்த தொகையில் இருப்பு வைத்தாலும் கேப்பிட் டல் கெய்ன்ஸ் 30 சதவீதம் சென்றுவிடும். அதனால் அந்த தொகையை வைத்து நிலம் வாங்கியும், அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டியும் வந்தோம்.

கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் நிறுவனம் இதுநாள் வரையிலும் 115 கோடி கொடுத்துள்ளனர். இதில் 35 கோடிக்கு கோடம்பாக்கம், ராயபுரம் போன்ற இடங்களில் நிலமும், அந்த இடங்களில் கட்டிடங்களும் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதிக்காக 22 கோடிவரை செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 109 வீடுகள் + கம்யூனிட்டி சென்டர் கட்டித் தரப்பட்டது. மீதம், நிறுவனத்தின் பெயரில் 4 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இப்படி அனைத்துத் தொகையும் செலவு செய்து, அதன் கணக்கை ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்தின் சார்பாக வருமான வரித்துறைக்கும் கொடுத்துள்ளோம். இன்னும் கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் கொடுக்கவேண்டியது தொகை 15 கோடி. அந்த விவரத்தையும் கொடுத்துள் ளோம்.

மேலும் முத்து வில்லியம்ஸ், ஜனவரி 2015 முதல் அக்.2021 வரை ஒய்.எம்.சி.ஏ.வின் போர்டு மெம்பராக இருந்தார். அப்போது தன் மனைவியின் பெயரில் ராயபுரத்தில் ஒய்.எம்.சி.ஏ. கட்டும் கட்டடத்திற்கு டெண்டர் கோரினார். டெண்டர் கோரும்போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளாகிய ஊ.ங.உ. கட்டாமல் டெண்டர் கோரினார். அதன் காரணமாக டெண்டர் ரிஜெக்ட் ஆனது. இதனால் கோபமடைந்த முத்து வில்லியம்ஸ் இதுநாள் வரை ஒய்.எம்.சி.ஏ.வுக்கு எதிராக செயலாற்றிக்கொண்டு வருகிறார்'' என்றார்.

வின்சென் ஜார்ஜ் தற்போது ஒய்.எம்.சி.ஏ. கூட்டமைப்பின் தேசியத் தலைவராக உள்ளார். தேசியத்தலைவர் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் ஒன்றாக முத்து வில்லியம்சுடன் கைகோர்த்து தனிநபர் தாக்குதலைத் தொடுக்கின்றனர். இது தொடர்பாக சென்னை சி.சி.பி. விசாரணை செய்துவரும் நிலையில், விசாரணை முடிவில் இவையனைத்தும் நிரூபிக்கப்படும்'' என்கின்றனர் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்தினர்.

-அருண்