கடந்த பத்து வருடங்களாக அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஒன்று சேர்ந்து, ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான வரிவசூலில் ஆரம்பித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம், வருவாய்ப் பிரிவு நகரமைப்புப் பிரிவு, பொறியியல் பிரிவு என அனைத்துப் பிரிவுகளிலும் தங்கள் இஷ்டம்போல் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும், அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி நான்கு வருடங்கள் யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு போலதான். இதுகுறித்து மதுரை மாநகராட்சியில் அதிகாரியாக வேலைபார்த்து ஓய்வுபெற்ற தேசிகாச்சாரி கூறுகையில்...
"மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகள், திட்டங்கள் நிறைவடைந்தவுடன் அதை தணிக்கை செய்வது வழக்கமான ஒன்று. அப்போது ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தால் அதற்கு தணிக்கைத் தடை கொடுத்துவிடு வார்கள். அதாவது அந்தப் பணியின் கோப்பு சம்பந்தப்பட்ட துறைக்கு திருப்பியனுப்பப்பட்டு, ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிக தொகை செலவிடப் பட்டதற்கான காரணம் கேட்பது வழக்கம். உதாரணமாக, 1 கோடி மதிப்புள்ள பணிகள் 3 கோடிக்கு செய்யப் பட்டிருந்தாலும், அந்தப் பணிக்கு செலவிடப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் இருந்தாலும், அதற்கு தணிக்கைத் தடை கொடுக்கப் படும்,
அதன்படி கடந்த பத்து வருடங்களில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பணிகளில் இதுவரை 3,923 கோடி ருபாய் அளவுக்கு 12,690 முறை தணிக்கைத் தடை இருக்கும் தகவலை ஆர்.டி.ஐ. மூலம் பெற் றேன். வருவாய்ப் பிரிவு, நகரமைப்புப் பிரிவு, பொறியாளர் பிரிவு களுக்கும் சேர்த்தே இந்தத்தொகை நிலு வையில் உள்ளது. கடந்த 10 வருடங்களில் மதுரை மாநகராட்சியில் பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்கள். இவை
கடந்த பத்து வருடங்களாக அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஒன்று சேர்ந்து, ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான வரிவசூலில் ஆரம்பித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம், வருவாய்ப் பிரிவு நகரமைப்புப் பிரிவு, பொறியியல் பிரிவு என அனைத்துப் பிரிவுகளிலும் தங்கள் இஷ்டம்போல் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும், அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி நான்கு வருடங்கள் யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு போலதான். இதுகுறித்து மதுரை மாநகராட்சியில் அதிகாரியாக வேலைபார்த்து ஓய்வுபெற்ற தேசிகாச்சாரி கூறுகையில்...
"மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகள், திட்டங்கள் நிறைவடைந்தவுடன் அதை தணிக்கை செய்வது வழக்கமான ஒன்று. அப்போது ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தால் அதற்கு தணிக்கைத் தடை கொடுத்துவிடு வார்கள். அதாவது அந்தப் பணியின் கோப்பு சம்பந்தப்பட்ட துறைக்கு திருப்பியனுப்பப்பட்டு, ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிக தொகை செலவிடப் பட்டதற்கான காரணம் கேட்பது வழக்கம். உதாரணமாக, 1 கோடி மதிப்புள்ள பணிகள் 3 கோடிக்கு செய்யப் பட்டிருந்தாலும், அந்தப் பணிக்கு செலவிடப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் இருந்தாலும், அதற்கு தணிக்கைத் தடை கொடுக்கப் படும்,
அதன்படி கடந்த பத்து வருடங்களில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பணிகளில் இதுவரை 3,923 கோடி ருபாய் அளவுக்கு 12,690 முறை தணிக்கைத் தடை இருக்கும் தகவலை ஆர்.டி.ஐ. மூலம் பெற் றேன். வருவாய்ப் பிரிவு, நகரமைப்புப் பிரிவு, பொறியாளர் பிரிவு களுக்கும் சேர்த்தே இந்தத்தொகை நிலு வையில் உள்ளது. கடந்த 10 வருடங்களில் மதுரை மாநகராட்சியில் பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்கள். இவை அனைத்திலுமே கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் இவ்வளவு பணத்தை எடுத்து செலவுசெய்தது அதிகாரிகள்தான். முறைகேடு களுக்குக் காரணமான அதிகாரிகள், ஆட்சி மாறியும் ஒரே இடத்தில் 10 வருடங்களாகப் பணிபுரிவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
இந்த தணிக்கைத் தடையை கிளியர் செய்யாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலையில் தொடரக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இதனால் ஒன்றிய அரசு மதுரை மாநகராட்சிக்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி விட்டது. இது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிவிதிப்பு போக, ஸ்மார்ட் சிட்டி திட்டம், நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் பற்றி தவறுசெய்த அதிகாரிகள் பற்றி தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளிவரும்''’என்றார்.
மாநகராட்சியின் முக்கிய ஒப்பந்தக்காரர் கே.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் செல்வராஜ் நம்மிடம், “"சார், நாங்கள் மாநகராட்சியில் ஒப்பந்தக் காரர்களாக பல்வேறு பணிகள் செய்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு வேலைக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதி களுக்கு 10 சதவீதம் லஞ்சமாகக் கொடுத்துதான் வேலை எடுப்போம். மதுரை சிட்டி இன்ஜினியர் அரசு என்பவர் வந்ததிலிருந்து எல்லாமே தலைகீழ். திட்டத்திற்கான டெண்டர் விடு வதற்கு முன்பே எங்களைப் போன்ற காண்ட்ராக்டர் களிடம் அட்வான்ஸ் தொகையாக 50 லட்சத்திலிருந்து 1 கோடிவரை வாங் கிக்கொள்வார். கேட்டால் "அதுதான் "’பூஸ்ட் அப்' போட்டு தானே விலை நிர்ணயமே பண்ணு கிறோம். அப்புறம் என்ன, பணத்தை கொடுய்யா' என்று கறாராய் கேட்டு வாங்கிக்கொள்வார். பூஸ்டப் என்றால் 5 கோடி செலவாகும் வேலைக்கு 7 கோடி வரை தொகை நிர்ணயம் செய்து டெண்டர் விடுவது. மீதி 2 கோடியில் அதிகாரிகளுக்கு 60% காண்ராக்டர்களுக்கு 40% முன்கூட்டியே பிரித்துக்கொள்வார்கள். அதுவும் அவர் இஷ்டம் போல்தான் ஒப்பந்தம் கொடுப்பார். நாம் காத்திருந்துதான் வாங்கவேண்டும். இப்ப வரை 65 லட்சம் அட்வான்ஸாக பணம் கொடுத்துள்ளேன். என்னைப்போல் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் அட்வான்ஸ் தொகையை முன்கூட்டியே வாங்கிக்கொண்டார் சிட்டி இன்ஜினியர் அரசு. இன்றுவரை டெண்டருக்கான ஒப்பந்த வேலையும் கொடுக்கவில்லை. பணமும் திருப்பிக்கொடுக்க வில்லை. இந்தப் பணத்தை யாரும் திருப்பிக் கேட்கவில்லை. கேட்கும் நபர்களுக்கு பணமும் வராது… புதிய டெண்டரும் கிடைக்காது. எனவே அவரை எதிர்க்கமுடியாமல் கெஞ்சிக்கொண்டு இருக்கிறோம். என்ன செய்ய''’என்றார் பரிதாபமாக.
மாநகராட்சி குறித்து புகார் கொடுத்துள்ள சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. ஹக்கீம் நம்மிடம் "தற்போது ஏறத்தாழ 4,000 கோடிக்கு தணிக்கைத் தடை உள்ளது என்ற தகவல் கொஞ்சம் அதிர்ச்சி யாகதான் இருக்கிறது. மக்களிடம் வசூலிக்கும் கட்டட வரி, இட வரி, குழாய் வரி போன்ற அனைத்து வரிப் பாக்கியையும் கூட்டினால் வெறும் 350 கோடியைக் கூட தாண்டாது. புதிய அரசு வந்தாலும் ஏற்கனவே ஊழலில் ஊறிப்போன கைதேர்ந்த அதிகாரிகளைத் தான் இந்த அரசு வைத்து அழகுபார்க்கிறது. 2018-ல் லஞ்ச ஒழிப்புப் புகாரில் சோதனை நடைபெற்று மதுரை மாநகராட்சியின் நகரப் பொறியா ளர் அரசு, அவரின் உதவியாளர் மனோகரன், கம்ப்யூட்டர் ஆபரேட் டர் சந்திரமோகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், தனது செல்வாக்கால் தொடர்ந்து பணியில் தொடர்ந்தார் அரசு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இவர் செல்வாக்குடன் மாநகரப் பொறி யாளராக இருந்த காலத்தில்தான் "ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதுமுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து விசாரணை நடந்தது. இந்தச் சூழலில்தான் அரசு, திடீரென்று கோவை மாநகராட் சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகராட்சிப் பொறியாள ராக இருந்த லட்சுமணன், மதுரை மாநகராட்சிப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். குறுகிய காலத்தில் இவரது பணி மதுரை மேயர் இந்திராணி, பொன்வசந்த் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை என்று அதிகாரி அரசுவை மீண்டும் மதுரைக்கு வரவைத்து மேயர் தரப்பினர் ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளனர்.
அவர் வந்ததும் அனைத்துத் திட்டங்களும் அதிகாரி அரசுவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போதுகூட புதிய கட்டட அனுமதி, பிளாட் போடுவதற்கான வரைபட அனுமதி, இவையனைத் தும் ஏற்கனவே மாநகராட்சி ஆணையரிடம் கோப்பு கள் சென்று, அது மதுரை மாநகரப் பொறியாள ரால் சென்னைக்கு திட்டமதிப்பீடுக்கு அனுப்பி ஒப்புதல் பெறும்நிலை இருந்தது. அந்த நடைமுறை யை மாற்றி இவையனைத்தும் நகரமைப்புப் பொறியாளரான அரசுவின் கையொப்பம் போடவேண்டும் என்று மாற்றியுள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் டெண்டர் போன்ற அனைத்து விஷயங்களும் இவரின் அனுமதிக் கையெழுத்து இல்லாமல் நடக்காது. இப்படியே போனால் அடுத்த 3 வருடத்தில் இந்த தணிக்கைத் தடை 10 ஆயிரம் கோடியைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை''’என்றார்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, “"இந்த தணிக்கைத் தடை இருப்பது உண்மை தான். இதை நிவர்த்திசெய்ய மாதா மாதம் மாவட்ட அளவில் கூட்டம் போட்டு விசாரித்து நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் கடந்த வருடங்களில் நடக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசியிருக்கிறேன். அவர், முதலில் மாவட்ட அளவில் ஒரு கூட்டம் போடுவோம். அடுத்து அதை நகராட்சி நிர்வாக நகரமைப்பு ஆணையரகத்திற்கு கொண்டுசென்று அதன்பிறகுதான் இதுகுறித்து எதுவும் சொல்லமுடியும் என்று முடித்துக் கொண்டார்''’என்று விளக்கினார்.
மேயர் இந்திராணியிடம் இது குறித்து கேட்கப் போனபோது அங்கிருந்த உதவியாளர், “"பத்திரிகையாளர்களை அவர் நேரடியாகப் பார்க்கமாட்டார். நீங்கள் மாநகராட்சி பி.ஆர்.ஓ. மகேஷைப் பாருங்கள்''” என்றார். அங்கிருந்த மற் றொரு அதிகாரியோ, “"எந்த விசயமானா லும் பி.ஆர்.ஓ.வை வைத்துக்கொண்டுதான் பேசவேண்டும் என்று மேயரின் கணவர் சொல்லியிருக்கிறார். நகரமைப்புப் பொறியாளரான அரசு, பி.ஆர்.ஓ மகேஷ், மேயரின் கணவர் பொன்வசந்த் மூவருமே உறவினர்கள். இந்த மும்மூர்த்திகள்தான் இங்கே எல்லாம்''” எனச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.
இருந்தும் நமது கேள்விகளை மேயரின் வாட்ஸப் எண்ணுக்கு அனுப்பியுள்ளோம். அவர் பதிலனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம். நகரமைப்புப் பொறியாளரிடம், தணிக்கைத் தடை பற்றிய கேள்விக்கு, "நான் வெளியில் உள்ளேன். தவிரவும் அது ஆடிட்டிங் பிரிவு பதிலளிக்கவேண் டிய கேள்வி''’என்றார். கே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் செல்வராஜ் பணம் கொடுத்ததாகக் கூறும் குற்றச் சாட்டு குறித்து கேட்டபோது... "நானே உங்களை அழைக்கிறேன்''’என்று கூறி தொடர்பைத் துண்டித்தார்.
அடுத்ததாக மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பரபரப்பாகப் பேசப்படும் நிலை யில்... மதுரை மாநகராட்சி கோல்மால் வெளிவந் திருப்பது மக்களை கவலையுறச் செய்துள்ளது.
-அண்ணல்