மிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், "சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகிவரும் "அண்ணாத்த'’படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கொரோனா பரவல், ரஜினி காந்த்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டாலும், வெற்றிகரமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது.

rajini

இப்படம் தீபாவளி தினமான நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. ரஜினியின் பஞ்ச் டயலாக், ஸ்லோமோஷன் வாக், மாஸான பின்னணி இசை என ரசிகர்களின் பல்ஸை எகிறவைத்த இந்த மோஷன் போஸ்டர், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங் களிலும் இன்ஸ்டன்ட் வைரலான தோடு படத்தின் மீதான எதிர்பார்ப் பையும் ஏகத்துக்குக் கூட்டியுள்ளது.

டாக்டர் வருகிறார்!

Advertisment

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "டாக்டர்'. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் மே 14-ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் திரை யரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

siva

இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்த படக்குழு, அதற்காக சில ஓடிடி நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் இறுதி முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து தமிழகம் மெல்ல மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தை நேரடியாகத் திரையரங்கிலேயே வெளியிடலாம் என முடிவெடுத்துள்ள படக்குழு, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் "டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை தினம் வருவதால் அன்றைய தினத்தைக் குறிவைத்துப் பல படங்கள் ரிலீஸிற்குத் தயாராகி வருகின்றன. டாக்டர் திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகுமா அல்லது அக்டோபர் மாதத்தின் வேறொரு தினத்தில் வெளியாகுமா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ஹரியின் "யானை'!

ஹரி இயக்கத்தில் அருண்விஜய், சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் "அருண்விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, வில்லனாக ‘"கே.ஜி.எஃப்'’ புகழ் கருடாராம் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காரைக்குடி, பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திவந்த படக்குழு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திவருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல, இப்படம் நடிகர் அருண் விஜய்யின் 33-ஆவது படம் என்பதால், அதைக் குறிப்பிடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீர்த்தி சுரேஷ், பா.ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட திரையுலகைச் சேர்ந்த 33 பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர். இப்படத்திற்கு தமிழில் "யானை' என்றும் தெலுங்கில் "எனுகு' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

________________________________

விவேக் மரண விசாரணை!

vivek

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாகக் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சென்னை தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், 17-ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இழப்பு திரை உலகைத் தாண்டி பல்வேறு தரப்பினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு விதங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்த நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதோடு, மக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தினார்.

"மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்' என பத்திரிகையாளர் சந்திப்பிலும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலை களை ஏற்படுத்திய நிலையில், "கொரோனா தடுப்பூசிக்கும், விவேக் மரணத்துக்கும் தொடர்பு இல்லை' என மருத்துவமனை நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் விளக்கம் அளித்தன. இந்நிலையில், "விவேக் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என விழுப்புரத்தைச் சேர்ந்த சமூகஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அண்மையில் இந்தப் புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசா ரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில், "நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என மத்திய சுகாதாரத் துறைக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.