"ஹலோ தலைவரே, இந்த வருட தமிழர் திருநாளை உலகத் தமிழர்கள் உற்சாகமாக, பொங்கல் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.''”
"ஆமாம்பா, ஆளும்கட்சித் தரப்பு முதல் அனைத்து அரசியல் கட்சியினரும் பொங்கல் மகிழ்ச்சியில் ஏகத்துக்கும் திளைத்திருக் கிறார்களே!''”
"உண்மைதாங்க தலைவரே, பொங்கல் அன்று, முதல்வர் ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை இல்லம், தமிழ் மரபுப்படி அலங் கரிக்கப்பட்டிருந்தது. காலையிலிருந்தே நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல்வரை வாழ்த்தி, அவரிடம் வாழ்த்து பெற்றனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரும் வந்த நிலையில், அனைவருக்கும் புத்தம் புதிய 100 ரூபாய் நோட்டை வழங்கி மகிழ்ந்தார் ஸ்டாலின். கட்டுக்கடங்காத கூட்டத்தை காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். மதியம் 2 மணிவரை இங்கே திருவிழாக் கூட்டம் இருந்தது. அதேபோல் தி.மு.க.வினர் துணை முதலமைச்சர் உதயநிதியையும் அவரது குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அனைத்துக் கட்சிகளிலும் இதேபோன்ற பொங்கல் உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் சில அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு மட்டும் இது சங்கடப்பொங்கலாக மாறி இருக்கிறது.'' ”.
"ஆமாம்பா, அமைச்சர் துரைமுருகனின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வருகிறதே?''”
"அண்மையில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவர் மகன் கதிர்ஆனந்த் ஆகியோர் தொடர்பான இடங்களில் அதிரடி ரெய்டு கள் நடத்தப்பட்டன. அப்போது பல ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனராம். இதுபற்றி அறிந்ததால், அமைச்சர் துரைமுருகனுக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது என்கிறார்கள். தற்போது அமலாக்கத் துறையின் அடுத்தகட்ட துரத்தலுக்கு பயந்து போன கதிர்ஆனந்த், இந்த பொங்கல் நேரத்திலேயே, இங்கிருந்து எஸ்கேப் ஆகி, துபாயில் தலை மறைவாக இருக் கிறார் என் கிறார்கள். அவர் சிக்கினால் கைது செய்யக் காத் திருக்கிறார்கள் என்றும் கவலை யோடு சொல்கிறார்கள். ப்படிப்பட்ட நெருக்கடிகளில் அமைச்சர் தரப்பு சிக்கியிருப்பதால், கடும் எரிச்சலில் இருக்கிறாராம் முதல்வர். ஆனாலும் பழைய நன்மதிப்பால் அவர் அமைதிகாத்து வருகிறார் என்கிற பேச்சும் தி.மு.க.விலேயே அடிபடுகிறது.''”
"எடப்பாடி உறவினர் வீட்டில் அண்மையில் நடத்தப்பட்ட ரெய்டு பற்றியும் பல்வேறு தகவல்கள் வந்தபடியே இருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, எடப்பாடியின் உறவினரான ஈரோடு ராமலிங்கம் வீட்டில் ரெய்டு நடப்பதற்கான சதி ஆலோசனைக் கூட்டம் ஜக்கி ஆசிரமத்தில் அவர் முன்னிலையில் நடந்தது பற்றி யும், அதில் மாஜி மந்திரி வேலுமணி கலந்துகொண்டது பற்றியும் ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.வின் பவர்ஃபுல் நபரான பி.எல்.சந்தோஷும் கலந்துகொண்டார் என்கிற செய்தி இப்போது சிறகடிக் கிறது. இதன் பின்னணியில் நடந்த ராமலிங்கம் தொடர்பான ரெய்டில் 750 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். மேலும் 10 கோடி ரூபாய் ரொக் கப் பணமும் அப்போது இருந் திருக்கிறது. தன்னைக் குறி வைத்து நடந்த இந்த ரெய்டு விவகாரத்தில், எட்டப்பனாக இருந்து காட்டிக்கொடுத் ததே வேலுமணிதான் என்பதைத் தெரிந்து கொண்ட எடப்பாடி, கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.''”
"ரெய்டு நட வடிக்கையை ஏவு வதில் ஓ.பி.எஸ். தரப்பையும் டெல்லி விட்டு வைக்கவில் லையே?''
"உண்மைதாங்க தலைவரே, ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்தவரும் சீனியருமான வைத்தி லிங்கத்தைக் குறிவைத்தும் வருமான வரித்துறை ரெய்டை நடத்தியிருக்கிறது டெல்லி. அப்போது, ஏறத்தாழ 100 கோடி ரூபாய் சொத்துக்களைக் கண்டுபிடித்து, அவற்றை வழக்கில் இணைத் திருக்கிறதாம் வருமான வரித்துறை. இதில் கடுமையாக அப்செட் ஆன வைத்திலிங்கம், இந்த விவகாரத்தில் எனக்கு நான் நம்பும் ஓ.பி. எஸ்.சோ, அவர் நம்பும் பா.ஜ.க.வோ உதவ வில்லை. ஓ.பி.எஸ், முறைப்படி பா.ஜ.க.வில் இணைந்திருந்தால், எனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காது’என்று தன் நண்பர் களிடம் ஆதங்கம் பொங்கப் புலம்புகிறாராம்.''”
"பா.ம.க.வில் அதன் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான யுத்தம் சமாதானமாகிவிட்டதே?''”
"பா.ம.க. இளைஞரணி தலைவராக தனது மூத்த மகள் காந்தியின் மகன் முகுந்தனை கட்சியின் பொதுக்குழுவில் அறிவித்தார் ராம தாஸ். இதை அந்த ஸ்பாட்டிலேயே கடுமை யாக எதிர்த்து, கட்சியில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தினார் அன்புமணி. இதன்பின் தைலாபுரத்தில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், ராமதாஸ் தன் முடிவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. அதனால் இழுபறி நிலையே நீடித்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக் காக தைலாபுரத்தில் குடும்பத்தினர் அனைவரும் கூடினர். அப்போது, அன்புமணியும் முகுந்தனும் பரஸ் பரம் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அப்போது முகுந்தன், அன்புமணி யிடம்... "மாமா, உங்களுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் இந்தப் பதவி எனக்குத் தேவையில்லை'’என்று உருக்கமாகப் பேசினாராம். இதைக்கேட்ட அன்புமணி, அவ ரது தோளைத் தட்டிக் கொடுத்து, ’"சந்தோச மாக பொங்கலைக் கொண்டாடு; பாத்துக்க லாம்'’என்றாராம். இதனால் தைலாபுரப் பொங்கல் இந்தமுறை அதிகமாக இனித் திருக்கிறது.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். அண்மையில் நடந்த அ.தி.மு.க. கூட்டம் பற்றி எனக்குக் கிடைத்த செய்தி இது. அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, "கூட்டணி விசயத்தை நான் பார்த்துக்கொள் கிறேன். இனி யாரும், பா.ஜ.க. பற்றியோ, ’நாம் தமிழர்’ சீமான் பற்றியோ விமர்சிக்கவேண் டாம்' என்று கேட்டுக்கொண்டாராம். அதோடு, கட்சி நிர்வாகிகள் சேலம் இளங் கோவனை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். இதைக்கேட்டு டென்ஷனான சீனியர் மேனான கே.பி.முனுசாமி,’"அந்த இளங் கோவன், உங்கள் நிழலாக செயல்படுகிறவர். அவரை எப்படி எல்லோரும் பின்பற்ற முடியும்? இது தனி நபர் கட்சியல்ல. மாபெரும் அரசியல் இயக்கம்'’ என்று எடப் பாடியை அப்போதே பகிரங்கமாக அட்டாக் செய்தாராம். மா.செ.க்கள் அனைவரும் இதை வழிமொழிவது போல் பலமாக சிரிக்க, முகம் இருண்டு போய்விட்டாராம் எடப்பாடி.''
_____________________
ஈரோடு கிழக்கு:
தி.மு.க. Vs நாம் தமிழர்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சி யான தி.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளதால், தி.மு.க. தரப்பில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, "சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற உழைக்க வேண்டும்'' என தி.மு.க. வினரை கேட்டுக்கொண்டார். இத்தேர்தலில் போட்டியிடாத அ.தி.மு.க.வின் ஓட்டுக்கள், தி.மு.க. வுக்கும், நாம் தமிழருக்கும் சரிபாதியாகப் பிரிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் வாக்குகள் மொத்தமும் நாம் தமிழருக்கு செல்லக்கூடும். எனவே டெபாசிட் தேறிவிடுமென்று நாம் தமிழர் தெம்போடு இருக்கிறது. தி.மு.க. வேட் பாளர் சந்திரகுமார் பெரும்பான்மையான செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். நாம் தமிழர் சீதாலட்சுமி, மைனாரிட்டியான கவுண்டர் சமூகத் தை சேர்ந்தவர். "தந்தை பெரியாரை இழிவாகப் பேசிய சீமானுக்கு கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் ஒருபோதும் துணை நிற்காது' என்று கவுண்டர் சமூக அமைப்புகள் அறிவித்திருப்பது சீமானுக்கு பாதகமாகப் பார்க்கப்படுகிறது.
-ஜீவாதங்கவேல்