சாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட  நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாகர்கோவிலில் தீக்காயம், அதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பிரபல மருத்துவ மனை புன்னை நகரிலிருக்கும் எம்.எல். மருத்துவ மனை. அந்த மருத்துவமனையின் இயக்குனராக இருக்கும் மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், துறைத்தலைவர், டீனாக இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றார். இந்த நிலையில் தனது சொந்த மருத்துவமனை யில் நர்சாக வேலை பார்த்த சிவகாசியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அந்தப் பெண் நேசமணிநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பெண்ணின் பெற்றோர் கூறும்போது, "சிவகாசியிலிருந்து இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர் மூலம், எங்களது மகள் இங்கு நர்ஸ் வேலைக்கு வந்தாள். ஆஸ்பத்திரியின் பின்பக்கம் டாக்டரின் வீடு இருக்குது. டாக்டரின் வயது முதிர்ந்த தாயாரை கவனிப்பதற்கு மருத்துவமனையிலிருந்து நர்ஸ்களை மாறி மாறி அனுப்புவார்.

Advertisment

அந்த நர்ஸ்களிடம் தனக்கும் காபி, சாப்பாடு பரிமாற தனது அறைக்குள் அழைப்பார். அப்போது டாக்டர் அரைகுறை ஆடையுடன்தான் இருப்பா ராம். அந்த பிள்ளைகளிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபடுவார். இதில் அட்ஜஸ்ட் செய்கிற நர்ஸ்களை வேலைக்கு வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிடுவார். எங்களது மகளையும் ஆரம்பத்தில் பாலியல் தொந்தரவு செய்தபோது அவள் கண்டித்திருக்கிறாள். உடனே அவர், உன் சர்டிபிகேட் என்னிடமிருக்கிறது. நீ இதை வெளியே யாரிடமாவது சொன்னால் சர்டிபிகேட்டும் தரமாட்டேன். திருடினு சொல்லி போலீசில் புகாரும் கொடுப்பேன்னு மிரட்டியிருக்கிறார். எங்க மகள் போன் செய்யும்போதெல்லாம் "எனக்கு இங்கு வேலை பார்க்க பிடிக்கல. கஷ்டமா இருக்கு'னு சொல்லுவாள். அதற்கு நாங்க, கஷ்டமான குடும்பச் சூழலைச் சொல்லி, "உனக்கு வேலை பார்த்த அனுபவ சர்டிபிகேட் கிடைச்சதும், வேற ஆஸ்பத்திரிக்குப் போகலாம். அதுவரை எப்படியாவது வேலை பார்'னு சொல்லிவந்தோம். இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி மதியம் எங்களுக்கு போன்செய்து டாக்டர் என்னைக் கட்டாயப்படுத்தி என்னவெல்லாமோ செய்றாரு. எதையும் வெளியில் சொல்ல முடியல. என்னை நீங்க கூட்டிட்டுப் போகலைனா இங்கே நான் தூக்குப் போட்டு செத்துடுவேன்னு கதறியழுதாள். 

dcotor1

பதறியடிச்சி இங்கவந்து போலீசில் புகார் கொடுத்தோம். போலீசாரோ, "டாக்டர் குடும்பம் இந்த ஊர்ல செல்வாக்குமிக்க குடும்பம். ஏதாவது பேசி வாங்கித் தர்றோம். வெளியில் சொல்லாமல் மகளை கூட்டிட்டுப் போயிடுங்க'னு டாக்டருக்கு ஆதரவா பேசுனாங்க. நாங்க டாக்டர் மீது நட வடிக்கை எடுக்கணும்னு உறுதியா இருந்ததால் வழக்குப் பதிவு செய்தார்கள். அவரை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்''’என்றார்கள்.

Advertisment

டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பற்றி மேலும் நாம் விசாரித்தபோது, அந்த மருத்துவமனையில் சிவகாசி பெண் மட்டுமல்ல, இன்னும் சில பெண்களும் டாக்டரின் பாலியல் கொடூரத்தால் வெளியே சொல்லமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வேலை பார்க்கும் சிலர், டாக்டருக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.  

தீக்காய சிகிச்சைக்கு ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும் மற்ற நோய்களுக்கும் சிகிச்சையளிப் பார். அங்கு வயிறு சம்பந்தமாகவோ அல்லது வேறு எந்த நோய்க்காகவோ சிகிச்சைக்கு வரும் அழகான பெண்களிடம் பரிசோதனை என்ற பெயரில் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் தகாத முறையில் கைவைத்துப் பேசுவார். ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத சட்டம் படிக்கிற இளம்பெண் குடலிறக்கம் சம்பந்தமாக வந்தபோது, தன் அந்தரங்கத்தில் டாக்டர் கைவைப்பதை உணர்ந்த அந்தப் பெண், குடலிறக்கத்துக்கு அங்க எதற்கு கை வைக்கிறீர்கள் என கேட்டு டாக்டரின் கன்னத்தில் அறைய, அந்த பெண்ணின் காலைப் பிடித்து அழுது தப்பித்தார். இதையடுத்து அந்தப்பெண் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் அவரை எச்சரித்துச் சென்றார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் நோயாளி ஒருவருக்கு நானே வந்து ஸ்கேன் எடுக்கிறேன்னு சொல்லி லிப்டில் வைத்து அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்த போது... அவள் சத்தம் போட்டதால், உடனே அந்தப் பெண்ணின் காலில் விழுந்துள்ளார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உச்ச அதிகாரத்தோடு இருந்துவந்ததால், இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் நர்ஸ்களும் புகார் கொடுக்க முன்வராததும், அப்படி யாராவது புகார் கொடுத்தாலும் அது பொய் என்று கூற, இவருக்கு உடந்தையாக மருத்துவக் கல்லூரியில் சில மருத்துவர்கள் இருந்ததும் இவருக்கு வசதியாகியுள்ளது.

இவரைப்போல் சிலர் செய்யும் பாலியல் சீண்டல்களால் ஒட்டுமொத்த மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது.

இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் கூறும்போது, “"தலைமறைவாக இருக்கும் டாக் டர் ராதாகிருஷ்ணனைப் பிடித்துவிடுவோம். அதன்பிறகு அவரைப் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகலாம்''’என்றனர்.