டலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதாவுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக வயிற்றில் கரு உருவாகி இருக்கிறது. மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், அசக்களத்தூரில் உள்ள வடிவேல் என்பவ ரின் மருந்து கடைக்குச் சென்றிருக்கிறார் அமுதா.

Advertisment

kk

மேற்கொண்டு நடந்ததை அமுதாவின் உறவுக்காரப் பெண்கள் விவரிக்கத் தொடங்கினார்கள். "கள்ளக்குறிச்சி மாவட்டம் விளாந்தாங்கல் ஏரியாவைச் சேர்ந்தவர்தான் மருந்துக்கடை வடிவேல். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் ஸ்கேன் கருவியையும் இவர் வைத் திருக்கிறாராம். இவரிடம் கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட் டங்களைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில், ரகசியமாக வந்து கருக்கலைப்பு செய்துகொள்வார்களாம். அதனால்தான் அங்கு சென்றிருக்கிறாள் அமுதா. வடிவேலு, அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்துவிட்டு, வயிற்றில் வளர்வது பெண் குழந்தைதான் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கலைத்துவிடும்படி அமுதா கேட்க, முதலில், அவளுக் குக் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்துள்ளார் வடிவேல். மாத்திரை சாப்பிட்ட அமுதா, தன் தாய் வீடான நிராமணி கிராமத்திற்கு சென் றாள். மறுநாள் அவளுக்கு ரத்தப்போக்கு அதி கரித்துள்ளது. பதறிப்போன அவள் பெற்றோர், அவளை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். அங்கு அமுதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அமுதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவர்கள் தலையில் இடியைத் தூக்கிப் போட்டுவிட்டார்கள். பாவம் அமுதா. நல்லா வாழவேண்டிய அவளுக்கு இப்படி ஒரு நிலை”-அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.

இந்தத் தகவல் வேப்பூர் போலீஸுக்குப் போக, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு வழக்கைப் பதிவு செய்து, கருக்கலைப்பு மூலம் உயிரிழப்பிற்குக் காரணமான மருந்துக்கடை வடிவேலுவைக் கைது செய்தனர். வடிவேலுவிடம் நடத்திய விசாரணையில், ஐ.டி.ஐ. மட்டுமே படித்த வடிவேல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல இடங்களில் மருந்துக் கடை கிளைகளைத் திறந்து நடத்தி வருவது தெரியவந்தது. இதன் மூலம் கருக்கலைப்பையும் ஒரு தொழிலாகவே செய்துவந்ததும் அம்பலமானது.

Advertisment

சமீபத்தில் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வடிவேலு கருக்கலைப்பு செய்தபோது, சுகாதாரத் துறையினர் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறைக்கு சென்ற வடிவேலு சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் தனது கருக்கலைப்பு தொழிலை அசகளத்தூர் மருந்துக்கடையில் வைத்து செய்து வந்துள்ளார். கருக்கலைப்புத் தொழிலைப் பலரும் இந்தப் பகுதிகளில் குடிசைத் தொழிலாகவே நடத்திவருகின்றனராம்.

kk

அண்மையில் ராமநத்தம் பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்த சேகர் என்பவர், வேப்பந்தட்டைப் பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, அதில் அவர் உயிரிழந்தார்.

Advertisment

அதே போல் சங்கரா புரம் அருகே உள்ள கீழ்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது செல்வி என்பவருக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, அவரை கொலை செய்த குற்றத்திற்காக ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி, கவிதா ஆகிய இரு பெண்களையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கூவாடு கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மனைவி பெரியநாயகம். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக பெரிய நாயகம் கருத்தரித்துள்ளார். இவர் தியாக துருகத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்துள்ளார். அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். போலீசார் அந்த சம்பவம் குறித்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார் கள்.

அதேபோல், சின்னசேலம் அருகே உள்ள இந்தி- கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், டிஃபார்ம் படித்துவிட்டு அவரது ஊரிலேயே ரகசியமான இடத்தில், கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர், சின்னசேலம் போலீசாருக்குத் தகவல் அளித்து முருகேச னையும் அவ ருடன் இருந்த நர்ஸ் சந்தியாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்படி சட்டவிரோத கருக் கலைப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்தபடியே இருக்கின்றன.

ff

சட்ட விரோத கருக்கலைப்பு அதிகரிக்கக் காரணம் என்ன என்று விசாரித்தபோது...

"பெரும்பாலும் கருவுறும் பெண்களின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று கண்டறிந்து, குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாகக் கருக்கலைப்புக்கு செல்கின்றனர். அதேபோல், தவறான பாலியல் உறவுகளின் காரணமாக கருவுறும் பெண்கள் அதை ரகசியமான முறையில் அழிப்பதற்காக இப்படிப்பட்ட டுபாக்கூர் மருத்துவர்களை அணுகுகிறார்கள். இப்படிப் பட்ட பெண்களிடம் கருக்கலைப்புக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்வரை பணம் பறித்துக் கொண்டு கருக்கலைப்பு என்ற பெயரில் அந்த பெண்களையும் அவர்கள் வயிற்றில் வளரும் சிசுக்களையும் சேர்த்து படுபாவிகள் படுகொலை செய்துவருகிறார்கள். எனவே இப்படிப்பட்ட வர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதன்மூலம் பெண்கள் காப்பாற்றப்பட வேண் டும். இதற்கு அரசு சட்டத் திருத்தம் செய்து இப்படிப்பட்டவர்கள் மீது கொலை வழக்கினைப் பதிவு செய்யவேண்டும். ஏற்கனவே 1979-ஆம் ஆண்டு மருத்துவ சட்டப்படி "வயிற்றில் வளரும் 20 வார கருவைக் கலைக்கலாம்' என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. பிறகு 2021ல் "24 வார கருவை கலைக்கலாம்' என்று திருத்தம் செய்யப் பட்டது. இதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கருக்கலைப்பு கொலைகளில் ஈவு இரக்கமற்ற முறையில் இறங்குகின்றனர். இப்படி கருக்கலைப்பு செய்துதான் ஆகவேண்டும் என்கிற நெருக்கடிக்கு ஆளாகும் பெண்கள், பதிவுபெற்ற மருத்துவமனைகளிலும் கிளினிக்கு களிலும் செய்து கொள்ளலாம். அங்கே ஏதேனும் தவறு நடந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அத னால் அக்கறையாக செயல்படு வார்கள்''’என்கிறார்கள் விபரமறிந்த வர்கள்.

சமூக ஆர்வலரான சங்கரனோ, "சட்டவிரோதக் கருக்கலைப்பால் அமுதா உயிரிழந்த தகவல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மருந்துக்கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு உள்ளிட்ட மாத்திரைகள் வழங்கக்கூடாது' என்று எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட் டுள்ளார். எனினும், இது தொடர்பான சட்டத்தை இன்னும் கடுமையாக ஆக்க வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள் கிராமப்புறங்களில் பணி செய்யும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள், மருந்துக்கடைகளிலும் ரகசியமான இடங்களிலும் செயல்படும் கருத்தரிப்பு மையங்களைக் கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். காலம் தாழ்த்தினால் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை குறைந்துவிடும். இத னால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். இதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.

சட்டவிரோதக் கருக்கலைப்புக் கொலையாளிகளிடமிருந்து பெண் சிசுக்களைக் காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.