Advertisment

வீடுதேடி வரும் கருக்கலைப்புக் கும்பல்!  -தடுக்க தீவிரம் காட்டுமா அரசு?

karukalaipu

 

"தக்காளி...… தக்காளி,… வெங்காயம்...… வெங்காயம்… வாங்கம்மா வாங்க… உங்களைத் தேடி உங்க வீட்டுக்கே நம்ம வண்டி வந்துருக்கு... வந்து வாங்கிக்குங்க, கம்மி விலைம்மா' என காய்கறி விற்பனை செய்பவர்களின் குரலை இன்று நாம் நகரத் தெருக்களிலும், கிராமங்களிலும் சர்வசாதாரணமாக கேட்கலாம். அதேபோல் வீட்டுக்கே வர்றோம் கர்ப்பம் ஸ்கேன் செய்றோம் வயித்துக்குள்ள இருக்கறது ஆணா? பெண்ணா?ன்னு சொல்றோம் என ஒரு கும்பலும், வயித்துல இருக்கற கருவைக் கலைக்க வீட்டுக்கே வருகிறோம் என மற்றொரு கும்பலும் கிளம்பி திருப்பத்தூர் மாவட்டத்தை அதிரச்செய்துள்ளது.

Advertisment

ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 7 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தின் தெருக்களில் ஒரு ஷேர் ஆட்டோ, ஊர்த் தெருவுக்குள் வந்து ரவுண்ட் அடிப்பதும், சற்று தள்ளிப்போய் நிற்பதுமாக இருந்துள்ளது. மூன்று முறை இப்படி நடந்தது தெருவாசிகளுக்கு பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ உள்ளே யார் இருக் காங்க? எதுக்காக

 

"தக்காளி...… தக்காளி,… வெங்காயம்...… வெங்காயம்… வாங்கம்மா வாங்க… உங்களைத் தேடி உங்க வீட்டுக்கே நம்ம வண்டி வந்துருக்கு... வந்து வாங்கிக்குங்க, கம்மி விலைம்மா' என காய்கறி விற்பனை செய்பவர்களின் குரலை இன்று நாம் நகரத் தெருக்களிலும், கிராமங்களிலும் சர்வசாதாரணமாக கேட்கலாம். அதேபோல் வீட்டுக்கே வர்றோம் கர்ப்பம் ஸ்கேன் செய்றோம் வயித்துக்குள்ள இருக்கறது ஆணா? பெண்ணா?ன்னு சொல்றோம் என ஒரு கும்பலும், வயித்துல இருக்கற கருவைக் கலைக்க வீட்டுக்கே வருகிறோம் என மற்றொரு கும்பலும் கிளம்பி திருப்பத்தூர் மாவட்டத்தை அதிரச்செய்துள்ளது.

Advertisment

ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 7 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தின் தெருக்களில் ஒரு ஷேர் ஆட்டோ, ஊர்த் தெருவுக்குள் வந்து ரவுண்ட் அடிப்பதும், சற்று தள்ளிப்போய் நிற்பதுமாக இருந்துள்ளது. மூன்று முறை இப்படி நடந்தது தெருவாசிகளுக்கு பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ உள்ளே யார் இருக் காங்க? எதுக்காக ஊரை ரவுண்ட் அடிக்கறாங்க என இளைஞர்களுடன் சென்று ஆட்டோவை சுற்றிவளைத்தனர். ஆட்டோவுக்குள் 8 கர்ப்பிணிப் பெண்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி. "யார் நீங்க? என்ன வேணும்? எதுக்காக எங்க ஊரை சுத்தி சுத்தி வர்றீங்க?' என கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஆட்டோவிலிருந்த 8 கர்ப்பிணிப் பெண்களும் அருகிலுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தி லுள்ள கிராமங்களின் பெயர்களைச் சொல்லியுள் ளார்கள். இந்த ஊரில் கர்ப்பத்திலிருப்பது ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து சொல்றதா சொன்னாங்க. அவுங்க முன்னாடி ஊருக்கே வந்து, அவுங்க அவுங்க வீட்லயே ஸ்கேன் செய்து பார்ப்பாங்களாம், இப்போ அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லன்னு அங்கயே போய் பார்த்துக் குங்கன்னு அட்ரஸ் தந்தாங்க, அதான் வந்துருக் கோம் எனச் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியாகி போலீஸாருக்கு தகவல்சொன்னதும் கந்திலி காவல் நிலைய போலீஸார் நேரடியாக வந்து ஆட்டோ வோடு அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத் துச்சென்றனர். காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ராட்ணமங்களத்தைச் சேர்ந்த ஜோதி, அவரது கணவர் சிவசக்தி, பா.முத்தம்பட்டியைச் சேர்ந்த அமலா, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த கோவிந்தன், வெப்பலாம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதம் ஆகியோர் புரோக்கர்களாக இருந்து இவர்களை அனுப்பிவைத்தனர் எனச்சொன்னதும் அவர்களை இரவோடு இரவாக போலீஸ் கைதுசெய்தது. 

karukalaipu1

Advertisment

இவர்கள் கடந்த ஆண்டு இதேபோல் கருவிலிருப்பது ஆணா? பெண்ணா என கண்டறிந்ததாக கைதுசெய்யப்பட்டவர்கள். ஜாமீனில் வெளியேவந்து மீண்டும் அதே சட்டவிரோத வேலையைத் தொடங்கியுள்ளனர். இதில் மொபைல் ஸ்கேன் சென்டர் நடத்திய இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

சமூக ஆர்வலர்கள், போலி மருத்துவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தருகிறார்கள் என இப்போது போலிகள் கிளினிக் வைப்பதில்லை. அதற்குப் பதில் கிராமங்கள்தோறும் சிலரிடம் தங்களது மொபைல் எண்களைத் தந்துள்ளார்கள். அவர்கள் போன் செய்தால் அந்த கிராமத்துக்கு இவர்கள் நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட வருக்கு சிகிச்சையளிக்கிறார்கள். அதேபோல் முன்பெல்லாம் சட்டவிரோத ஸ்கேன் மையங்கள் ஏதாவது வீடுகளில் ரகசியமாக நடக்கும். அந்த வீட்டின் உரிமையாளர்மீதும் வழக்குப் பதிவாவதால் யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை. இதனால் வழிமுறையை மாற்றி, ஊர்களுக்கு வெளியே மோட்டார் பம்புசெட், மலையடிவாரத்தில் அமர்ந்து கர்ப்பிணிப் பெண்களை வரவைத்து, ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து சொல்லத் துவங்கினர். 

இப்படி ஓராண்டுக்கு முன்பு ஷேர் ஆட்டோ வில் ஸ்கேன் சென்டர் நடத்தியவர்கள் திருப்பத் தூர், கிருஷ்ணகிரியில் கைதுசெய்யப்பட்டார்கள். இப்போது டெவலப்பாகி, ஸ்கேன் இயந்திரம் சிறியதா இருப்பதால் வீட்டுக்கே சென்று கருவி லிருப்பது ஆணா, பெண்ணா என பார்க்கின்றனர். கருவில் இருப்பது ஆண் குழந்தை என்றால் விநா யகர் அல்லது முருகர் படத்தையும், பெண் குழந்தை யாக இருந்தால் அம்மன் படத்தையும் தருகிறார் கள். இதற்காக ஒரு பெண்ணிடம் 20 ஆயிரம் வரை பணம் வாங்கியுள்ளனர். கருவைக் கலைக்கவேண் டும் என்றால் இவர்களே அதற்கான ஆட்களை அனுப்பியுள்ளார்கள். அவர்களும் நேரடியாக வீட்டுக்கே சென்று கருவைக் கலைத்துள்ளனர். இதற்கு ஆளுக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 15 ஆயிரம் பணம் வாங்கியுள்ளனர் என்கிறார்கள். 

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சியிடம் கேட்டபோது, "அந்த கர்ப்பிணிப் பெண்களிடம் விசாரித்துவிட்டு அதுகுறித்து காவல்துறையிடம் புகார் தந்தோம். காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

வட்டார மருத்துவ நிலைய மருத்துவர்கள், கிராம செவிலியர்கள், வி.ஏ.ஓ.க்களுக்கு சட்ட விரோதமாக கரு கண்டறிவது, கலைப்பது யார்? போலி மருத்துவர்கள் யார் என்கிற தகவல் ஓரளவு தெரியவந்தாலும் கண்டுகொள்வதில்லை. போலிகள்மீது காவல்துறையும் கடமைக்கு வழக்கு பதிவுசெய்கிறது. ஸ்கேன் செய்வது யார்? கருக் கலைப்பு செய்வது யார்? போலி மருத்துவர்களா? மருத்துவர்களா? நர்ஸ்களா? என விசாரணை நடத்தி சட்டவிரோத மருத்துவக் கும்பல்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் இந்நிலை மாறும் என்கிறார்கள்.

 

nkn270825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe