அ..மலைக்கும், அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கும் இடையே பெரிய சண்டை நடந்து வருகிறது. பா.ஜ.க.வில் ஆல் இன் ஆலாக இருந்தவர் பி.எல்.சந்தோஷ். அவரிடம் அமித்ஷா மிக முக்கியமான அசைன்மெண்ட்டை சமீபத்தில் கொடுத்தார்.அ..மலை தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போடும் வாக்காளர்களை ஓரளவு வைத்திருக்கிறார். அத்துடன் டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., சசிகலா என எடப்பாடிக்கு எதிரான தலைவர்களையும் அணிதிரட்டி வைத்திருக்கிறார். பி.எல்.சந்தோஷின் தயவில் அனைத்து மத்திய மந்திரிகளையும் ஆட்டி வைக்கிறார். ஆனால், அவருக்கு அ.தி.மு.க.வில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஒரு பக்கம் எதிரிகள், இன்னொரு பக்கம் ஆதரவு தலைவர்கள் என விசித்திரமான கலவையாக இருக்கிறார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏராளம்.
‘நான் ஒரு பிசினெஸ்மேன்’ எனக் கூறிக் கொண்டு ஊழலில் சம்பாதித்த சொத்துக்களை வெளிப்படையாகவே முதலீடு செய்து வருகிறார். தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் பிம்பத்தையே நிர்மூலமாக்கி வருகிறார். இவரது மச்சான் நடத்தும் அண்ணாமலையார் செங்கல் குவாரியை வருமான வரித்துறை ரெய்டு செய்தது. அதில் 400 கோடி ரூபாய் அளவில் அ..மலை முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அ..மலையின் மச்சான் இன்று கோவை பகுதியில் மிகப்பெரிய பைனான்சியராக உருவெடுத்துள்ளார். நூற்றுக்கணக்கான கோடி கள் அவர் கையில் புரள்கிறது. அவரிடம் கடன் வாங்குபவர்களுக்கு இன்கம் டாக்ஸ், அமலாக்கத்துறை தொந்த ரவுகள் எதுவும் இல்லையென அ..மலை கியாரண்டி அளித்து வருகிறார். இதுதவிர கோவையில் அவரது நண்பர் சேரலாதன் மூலம் ஒரு கம்பெனியைத் தொடங்கி கோவையிலிருந்து நீலாம்பூர் செல் லும் வழியில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அவரது ரியல் எஸ்டேட் வியாபாரம் ஈஷா மையத்தை ஒட்டிய இக்கரை போளுவாம்பட்டி கிராமத் திலும் தொடர்கிறது. சமீபத்தில் பெங்களூரு வில் 2500 கோடி ரூபாய்க்கு வீடுகளை கட்டி விற்கும் நிறுவனத்தை அவரது மனைவியின் தம்பி மூலம் தொடங்கியிருக்கிறார். இதுதவிர மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, லண்டன், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவரது நெருங்கிய நண்பரான லண்டன் ஹோட்டல் ஊழல் புகழ் டி.டி.வி.தினகரன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்து வருகிறார்.
சுமார் 3000 கோடிக்கு மேல் இவர் செய்திருக்கும் முதலீடுகளை வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் பட்டியலிட்டு இருக்கின்றன. சமீபத்தில் அமலாக்கத்துறை இவர் தொடர்புடைய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக ரெய்டுகள் நடத்தியது. அதில் கோவையில் நடந்த ரெய்டில் இவரும், இவரது நண்பர் சேரலாதனும் ஆருத்ராவில் மோசடி செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் பணமான 4000 கோடியில் கணிசமான பணத்தை தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு விட்டிருப்பதை கண்டுபிடித்தது. ஆருத்ரா மோசடி பணம், மணல் மாபியா கரிகால னிடம் பெற்ற பணம், தொழிலதிபர்களை அமலாக்கத்துறை ரெய்டு வரும் என சொல்லி மிரட்டி வாங்கிய பணம், தி.மு.க. அமைச்சர் களிடமிருந்து பெற்ற பணம் என பல்வேறு வகைகளில் வாங்கிய மோசடித் தொகைகள் அனைத்தையும் பைனான்ஸ் தொழி லில் அ..மலை முதலீடு செய்துள் ளார் என அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. எனவே, ‘அ..மலையை நயினார் நாகேந் திரனின் தலைமையை ஏற்று ஒழுங்காக செயல்படச் சொல்லுங் கள்’ என பி.எல்.சந்தோஷிடம் அட்வைஸ் செய்தது பா.ஜ.க. தேசியத் தலைமை. ஆனால், அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அ..மலை இல்லை. ‘என்மீது கை வைத்தால் பல பூகம்பங்கள் வெடிக்கும்’ என தன்னிடம் பேசிய பி.எல்.சந்தோஷிடம் பேசியிருக்கிறார் அ..மலை. அத்துடன் கும்பகோணத்தில் பி.எல்.சந்தோஷ் மற்றும் அமித்ஷாவின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட இருவர் தலைமையில் கூடிய பா.ஜ.க.வின் தமிழ் மாநில மத்தியக்குழு கூட்டத்திற்கும் செல்ல மறுத்துவிட்டார். ‘எனக்கு உடல்நிலை சரியில்லை’ என அ..மலை சொன்னதை யாரும் நம்பவில்லை. கே.டி.ராகவன் தலைமையில் பத்தாயிரம் பேர் அழைத்து வரப்பட்டு நடைபெற்ற அந்த மாநாட்டை தொடர்ந்து ஒரு லட்சம் பேரைத் திரட்டி அடுத்த மாநாட்டை நடத்தப்போவதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். அ..மலை வந்தால்தான் கூட்டம் வரும் என்கிற நிலைமையை மாற்றிக் காட்டியுள்ளார் கே.டி.ராகவன்.
“அ..மலை தனிக்கட்சி ஆரம்பிப்பார் அல்லது செங்கோட்டையன் பாணியில் த.வெ.க.வில் சேருவார் என எதிர்பார்க்கப் படுகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ..மலை ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகி யோருடன் இணைந்து அரசியல் நகர்வுகளை நடத்தத் திட்டமிட்டு பேசி வருகிறார். விஜய் விசயத்தில் என்ன செய்வது என இன்னும் பா.ஜ.க. முடிவெடுக்கவில்லை. விஜய் தி.மு.க. விற்குப் போகும் வாக்குகளை பிரிக்கிறார் என்ற பார்வை பா.ஜ.க.விற்கு இருக்கிறது. அதே நேரத்தில் அ..மலை பா.ஜ.க.வை பலவீனப் படுத்துகிறார் என்பதையும் பா.ஜ.க. புரிந்து வைத்திருக்கிறது. விரைவில் அ..மலையின் மச்சான் சிவக் குமாரை கைது செய்து அ..மலைக்கு பயத்தை ஏற்படுத்தவும் பா.ஜ.க. வின் தேசியத் தலைமை திட்ட மிட்டு வருகிறது” என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/amalai-2025-12-02-10-37-46.jpg)