கடந்த 2019-ம் ஆண்டு நடந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் தலைவர் பதவியைக் கைப்பற்றியது அப்போதைய ஆளுங்கட்சி யான அ.தி.மு.க. ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியங்களில் வாய்ப்பு இருந்தும் உள்ளடி வேலைகளால் தலைவர் பதவியைக் கோட்டை விட்டது தி.மு.க.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப்பின் காட்சிகள் மாற, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அ.தி.மு.க.வின் ஜெகநாதன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவர் தலைவர் பதவியை இழந்துள்ளார். இதையடுத்து, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் ஆவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முதல் நாள், பெண் க
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் தலைவர் பதவியைக் கைப்பற்றியது அப்போதைய ஆளுங்கட்சி யான அ.தி.மு.க. ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியங்களில் வாய்ப்பு இருந்தும் உள்ளடி வேலைகளால் தலைவர் பதவியைக் கோட்டை விட்டது தி.மு.க.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப்பின் காட்சிகள் மாற, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அ.தி.மு.க.வின் ஜெகநாதன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவர் தலைவர் பதவியை இழந்துள்ளார். இதையடுத்து, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் ஆவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முதல் நாள், பெண் கவுன்சிலர்கள் கடத்தல், கார் சேசிங்... போலீஸ் விசாரணை... தர்ணா... என சினிமாவை மிஞ்சும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.
இது தொடர்பாக பனமரத்துப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான ஜெகநாதன், ''பனமரத்துப்பட்டி ஒன்றியக் குழுத் தலைவராக நான் பதவி வகித்து வந் தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, எனக்கு எதி ராக நம்பிக் கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது ஜனவரி 21-ம் தேதி வாக்கெடுப்பு நடத்த இருந்தனர். அதனால், எனது ஆதரவுக் கவுன்சிலர்களான பூங்கொடி, சங்கீதா, நிவேதா, மஞ்சுளா, காவேரி சித்தன் ஆகியோரை இரண்டு கார்களில் அழைத்துக்கொண்டு, ஜனவரி 20-ம் தேதி இரவு பவானி கூடுதுறையில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
அன்று இரவு 10.30 மணி யளவில், குமாரபாளையம் கத்தேரி அருகே சென்று கொண்டிருந்த போது, எங்களைப் பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள், சாலையில் தடுப்புகளை வைத்து வழி மறித்தனர். கார்களில் இருந்து இறங்கிய 25க்கும் மேற்பட்ட ரவுடிகள் வந்து, பெண் கவுன்சிலர் கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோ ரைக் கடத்திச் சென்றுவிட்டனர். இந்த கடத்தல் கும்பலில் பாரப்பட்டி சுரேஷ்குமாரின் அண்ணன் உமாசங்கரின் மகன் கரிகாலன், பிரபல ரவுடி வயக்காட்டார் பூபதி ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து குமார பாளையம் போலீசில் புகார் அளித்தேன். எனது புகார் மீது சி.எஸ்.ஆர். ரசீது கூட கொடுக்க மறுக்கின்றனர்'' என்றார்.
இந்த பரபரப்புக்கு இடையே, ஜனவரி 21-ம் தேதி நடந்த ஜெக நாதனுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதை யடுத்து அவர் தலைவர் பதவியை இழந்தார். கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா மட்டுமின்றி அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிவேதா என்ற மற்றொரு கவுன்சிலரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தார். சொந்தக் கட்சியினரே எதிராக வாக்களித்தது அ.தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. கவுன்சிலர்களை வளைக்க, பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. இதுகுறித்து கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரிடம் கேட்டபோது, "எங்களை யாரும் கடத்திச் செல்லவில்லை. நாங்களே சொந்த விருப்பத்தின்பேரில் தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்துப் போட் டோம்'' என ஒன்றுபோல் பதிலளித் தார்கள்
பெண் கவுன்சிலர்கள் கடத்தப் பட்டதை கண்டித்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன், நல்லதம்பி, சுந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கூறுகையில், ''தி.மு.க.வுக்கு தேர்தலில் ஜெயிக்கத் திராணி இல்லை. கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அரசுப்பணியில் உள்ளனர். அதை வைத்து மிரட்டி அவர்களைப் பணிய வைத்துள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறோம்'' என்றார்.
இது ஒருபுறம் இருக்க, பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு எதிராக தி.மு.க.வுக்குள் ளேயே சலசலப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''கடந்த 2006 -2011 கால கட்டத்தில் 6 பேர் கொலை வழக்கு, ஆள் கடத்தல், நில அபகரிப்பு என சுரேஷ்குமார் மீது நிறைய புகார்கள் எழுந்ததால்தான் சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்போது பெண் கவுன்சிலர் கள் கடத்தலால் கட்சிக்கு இவரால் மீண்டும் கெட்ட பெயர்தான்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இதுபற்றி பாரப்பட்டி சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, ''பெண் கவுன் சிலர்கள் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடத்தப்பட்டதாகச் சொல் லப்பட்ட கவுன்சிலர்களே தங்களை யாரும் கடத்த வில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதன்பிறகு இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?,'' என்றார் கூலாக. அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க.வின் கணக்கை முறியடித்து தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்தடுத்து மேலும் சில ஒன்றியங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என இப்போதே கட்டியம் கூறுகிறார்கள் உடன்பிறப்புகள்.