Advertisment

கைவிட்ட பேராசிரியர் கரிக்கட்டையான மாணவி! -கொலையை மறைக்கிறத சாதி ஆணையம்?

ss

திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் வசிக்கும் மணி என்பவரின் மகள் மணிமேகலையை (கல்லூரி மாணவி) தாழ்வேடு கிராமத்தில் வசிக்கும் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த முனிரத்தினம் மகன் ராஜ்குமாரை(கல்லூரி ஆசிரியர்) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக மணிமேகலையிடம் உறுதியளித்து நெருக்கமாக இருந்துள்ளார்.

Advertisment

cc

இதனிடையே ராஜ்குமாருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்துள்ளது. இதை அறிந்த மணிமேகலை 11.07.2020 அன்று

திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் வசிக்கும் மணி என்பவரின் மகள் மணிமேகலையை (கல்லூரி மாணவி) தாழ்வேடு கிராமத்தில் வசிக்கும் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த முனிரத்தினம் மகன் ராஜ்குமாரை(கல்லூரி ஆசிரியர்) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக மணிமேகலையிடம் உறுதியளித்து நெருக்கமாக இருந்துள்ளார்.

Advertisment

cc

இதனிடையே ராஜ்குமாருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்துள்ளது. இதை அறிந்த மணிமேகலை 11.07.2020 அன்று ராஜ்குமார் வீட்டுக்கு சென்று ராஜ்குமாரின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு, மணிமேகலையின் சாதி பெயரை சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர். அங்கே இருந்த ராஜ்குமாரும், ""நீ யாரென்றே தெரியாது. முதலில் இங்கிருந்து கிளம்பு'' என்று சொல்லவே, ""எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும்'' என்று கதறலுடன் சொல்லியபடி அங்கேயே அமர்ந்துள்ளார். தகவலறிந்து பெண்ணின் பெற்றோர் ராஜ்குமார் வீட்டுக்கு சென்று, மகளை அழைத்தும் வரவில்லை.

Advertisment

இந்நிலையில், ராஜ்குமார் வீட்டாரின் புகாரின்படி, திருத்தணி காவல்துறை உதவி ஆய்வாளர் சுதாகர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து பிரச்சனையை என்னவென்று கூட ஆராயாமல், அப்பெண்ணை நள்ளிரவு 12 மணிக்கு தரதரவென்று வீட்டைவிட்டு வெளியில் இழுத்துபோட்டு, ""இதற்கு மேலும் நீ இங்கு இருந்தால் உன் குடும்பத்தில் யாருமே வாழமுடியாது'' என மிரட்டவே, பெற்றோருடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார் மணிமேகலை.

இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. பிறகு 12.07.2020 தேதி அன்று இரவு 2 மணி அளவில் அவர் சாப்பிடுவதைப் பார்த்து, அக்கா நல்லபடியாக உள்ளார் என்று நினைத்து தம்பி உறங்கியுள்ளார்.

மறுநாள் காலை, அக்கா இல்லாததை கண்டு அதிர்ச்சியோடு தேட, நல்லாட்டூர் ஆற்றங்கரை அருகே மணிமேகலை கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். காவல்துறை இதை சந்தேக மரணம் என்று பதிவுசெய்து வழக்கை முடித்துள்ளது.

தற்கொலையாக இது பேசப்பட்டாலும் மணிமேகலை குடும் பத்தார் அதை நம்பவில்லை. மணிமேகலை யின் தம்பி அலெக்ஸ், ""என் அக்கா தற்கொலை செய்யுமளவுக்கு கோழை யல்ல, அப்படி இருந் திருந்தால் அவர்களிடம் சென்று நியாயம் கேட்டிருக்கமாட்டாள்'' என்கிறார்.

காதலனுடன் அடிக்கடி சந்திக்கும் இடத்தில் மணிமேகலை கரிக்கட்டையாக கிடந்ததால், தோழி மூலமாக வரவழைத்து எரித்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது அலெக்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கு.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கார்த்திகாவிடம் கேட்ட போது, ""ராஜ்குமாரின் மீது 306ன் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறோம்''’ என்கிறார். எஸ்.பி. அரவிந்தனிடம் பேசிய போது, அவர் இதுகுறித்து பேச மறுத்து விட்டார்.

-அ.அருண்பாண்டியன்

nkn050820
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe