Advertisment

கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்! நக்கீரன் செய்தி கமிஷனர் அக் ஷன்!

ss

செல்போனால் விளைந்த தீமையால் தன் வாழ்க்கையை இழந்த பெண், உயிருக்கு போராடிய நிலையில், காவல் நிலையங்களில் அலையவிடப் பட்ட செய்தியை நக்கீரன் வெளிக்கொண்டு வந்ததால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்.

Advertisment

ss

நம்மிடம் பேசிய 23 வயதான இளம் பெண் சாந்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), "எங்க அம்மா, அப்பா இருவருமே 2018, 2019ல இறந் துட்டாங்க. நானும் என் தங்கையும் தண்டையார் பேட்டையிலுள்ள எங்க பாட்டி வீட்டில் தங்கி யிருந்தோம். கடந்த 2

செல்போனால் விளைந்த தீமையால் தன் வாழ்க்கையை இழந்த பெண், உயிருக்கு போராடிய நிலையில், காவல் நிலையங்களில் அலையவிடப் பட்ட செய்தியை நக்கீரன் வெளிக்கொண்டு வந்ததால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்.

Advertisment

ss

நம்மிடம் பேசிய 23 வயதான இளம் பெண் சாந்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), "எங்க அம்மா, அப்பா இருவருமே 2018, 2019ல இறந் துட்டாங்க. நானும் என் தங்கையும் தண்டையார் பேட்டையிலுள்ள எங்க பாட்டி வீட்டில் தங்கி யிருந்தோம். கடந்த 2001ஆம் வருடம் இன்ஸ்டா கிராம் மூலம் பழகிய அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவன் என்னை காதலிப்பதாக சொன்னான். அதோடு, என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் நம்பிக்கை கொடுத் தான். அதனை நம்பி காதலர்களாக சுற்றித் திரிந்தோம். ஒரு கட் டத்தில், எனது மாமா வுக்கு இந்த விஷயம் தெரியவந்து அவர் கண்டித்த தால், இருவரும் பிரிந்திருந்தோம். பின்னர், என் தங்கையின் படிப்புக்காக பாட்டியுடன் தாம்பரம் பகுதிக்கு குடிபோனோம். மீண்டும் 2025, ஜனவரியில் இன்ஸ்டாகிராமில் என்னை தொடர்புகொண்ட தினேஷ், மீண்டும் நம்முடைய காதலை தொடரலாமென்று கூறியவன், என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தான்.

இதையடுத்து மீண்டும் காதலைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி என்றெல்லாம் சுற்றித்திரிந்த நிலையில்... நான் கர்ப்பமானது தெரியவந்தது. இந்நிலையில், கர்ப்பத்துக்கு தான் பொறுப்பில்லை யென்று தினேஷ் என்னை ஒதுக்க நினைத்ததால், வேறுவழியில்லாமல், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றேன். அவர்களோ, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலை யத்துக்கு போகச்சொல்ல, அவர்களோ, திரு வொற்றியூர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு விரட்டினர். இந்த அலைச்சலிலேயே என் கர்ப்பம் கலைந்த நிலையில்... அதற்கான சிகிச்சையெடுக்க, காவல்நிலைய எஃப்.ஐ.ஆர். தேவையென்று தனியார் மருத்துவமனையில் தெரிவித்துவிட்டனர்.

மீண்டும் திருவொற்றியூர் காவல் நிலையம் செல்ல, காவல் ஆய்வாளர் மஞ்சுளா வரலட்சுமி வழக்கு பதிவு செய்யாமல் நான்கைந்து நாட்களாக என்னை அலைய விட்டார். என் உடல்நிலை பெரி தும் பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவுக்கே வந் தேன். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்த நிலையில் நக்கீரனை அணுகினேன். நக்கீரன் இணையதளத்தில் எனது விவகாரத்தை செய்தியாக்கியபின், இதுகுறித்து தெரிந்துகொண்ட சென்னை மாநகர காவல் ஆணை யர் அருண் உத்தரவால், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது புகார்மீது எஃப் ஐ.ஆர். போடப்பட்டதால் நான் உடனடியாக சிகிச்சை எடுத்தேன். அதனால் என்னால் உயிர் பிழைக்க முடிந்தது. எனக்கு உதவிக் கரம் நீட்டிய நக்கீரனுக்கும், மாநகர காவல் ஆணையர் அருணுக் கும் நன்றி!" என்று தெரிவித்தார்.

nkn050325
இதையும் படியுங்கள்
Subscribe