உயரதிகாரிகளின் தில்லுமுல்லுகளால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருளான ஆவின் பால் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்யும் பாலை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையி லுள்ள மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக தனியார் டேங்கர் லாரி உரிமையாளர் களிடம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துகொள்கிறது ஆவின் நிர்வாகம்.
அதன்படி போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2018-ல் முடிவடைந்தும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் காலதாமதம் செய்தே வந்தார் ஆவினின் அப்போதைய நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்.! இதனால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் அவருக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருந்தன. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர்களில் ஒருவரான விஜயகுமாரின் தலையீடுகள் அதிகரித்ததால் அமைச்சரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப்போனது ஆவின் நிர்வாகம்.
இந்தநிலையில், தனியார் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி காண்ட்ராக்ட்டை மொத்தமாக தாரைவார்ப்பதற்காக திட்டமிட்ட உயரதிகாரிகள், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே அதனைப் பொருட்படுத்தாமல் டெண்டரை அறிவித்தனர். இதனை எதிர்த்து, தீபிகா ட்ரான்ஸ்போர்ட், ஆர்.கே.ஆர். ட்ரான்ஸ் போர்ட், அம்மையப்பன் ட்ரான்ஸ்போர்ட் உள்ளிட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ததுடன், புதிய டெண்டரை விரைவில் நடத்த வேண்டும் எனவும், அதில் காண்ட்ராக்டர் கள் அனைவரும் சுதந்திரமாக கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இருப்பினும் புதிய டெண்டரை அறிவிக் காமல் காலதாமதம் செய்தது ஆவின் நிர்வாகம். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலிரு

இருப்பினும் புதிய டெண்டரை அறிவிக் காமல் காலதாமதம் செய்தது ஆவின் நிர்வாகம். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலிருப்பது பெரிய பிரச்சனையாக வெடிக்க, 30-08-2019-ல் இதற்கான புதிய டெண்டரை அறிவித்தார் ஆவினின் இணை நிர்வாக இயக்குநர் மணிமண்ணன். 312 டேங்கர் லாரிகளை வாடகைக்கு எடுக்கும் இந்த டெண்டரின் மதிப்பு 360 கோடி ரூபாய். இந்த டெண்டருக்கு கடைசி நாள் 10.10.2019. அதேசமயம், சவுத் இண்டியன் ட்ரான்ஸ்போர்ட் உள்ளிட்ட சில காண்ட்ராக்டர்களை டெண்டரில் கலந்துகொள் ளாமல் தடுப்பதற்காக பல தில்லுமுல்லுகளை செய்ததுடன், மற்ற காண்ட்ராக்டர்கள் யாரும் விண்ணப்பிக்கக்கூடாது எனவும் ஆவின் அதிகாரிகள் மிரட்டினர். இதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தை சவுத் இண்டியன் ட்ரான்ஸ்போர்ட் அணுக, டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.
அதன்பேரில் 10-10-2019 மதியம் 2 மணிக்கு தங்களது டெண்டர் விண்ணப்பத்தை அதன் பெட்டியில் போட்டது சவுத் இண்டியன் ட்ரான்ஸ்போர்ட். உயரதி காரிகளின் மிரட்டலால் டெண்டரை போடாமல் பயந்துகொண்டிருந்த காண்ட்ராக்டர்களும் அதன்பிறகு டெண்டரை போட்டனர். "டெண்டர் விதிகளின்படி டெண்டர் நேரம் முடிந்ததும் அடுத்த 1 மணி நேரத்தில் டெண்டர் பெட்டிகள் திறந்து எந்தெந்த நிறுவனங்கள் கலந்துகொண் டிருக்கின்றன என்பதை சத்தமாக அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்ய அதிகாரிகள் தவறியதால், ஆவினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்' என மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரியரின் ஜூனியர்கள் எச்சரிக்கை கடிதம் கொடுக்க, அதன்பிறகே, டெண்டர் பெட்டியை திறந்து, தொழில்நுட்ப விண்ணப்பங்களை பரிசீலித்து 312 டேங்கர் லாரிகளில் 303 லாரிகள் தகுதியானவை என அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், விலைப்புள்ளி விண்ணப்பங்களை திறக்க மறுத்தனர்.
இந்தச் சூழலில்தான், கடந்த 4 மாதங்களாக விலைப்புள்ளி திறக்கப்படாமல் ஆவினில் பல வில்லங்கங்கள் அரங்கேற, அதனை அறிந்து இனியும் பொறுமையாக இருந்தால் தங்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுவிடும் என பயந்து ஸ்ட்ரைக் அறிவித்தனர் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள். தற்போது இந்த விவகாரம்தான் பூதாகரமாகி எடப்பாடிவரை பஞ்சாயத்து நடந்து வருகிறது.
தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரப்பன், ‘’ ""அதிகாரிகளே ஆவின் நிறுவனத்தின் முதலாளிகள் போல அதிகாரம் செலுத்துகின்றனர். இதனால் ஊழல்களும் லஞ்சமும் ஆவினில் தலைவிரித்தாடு கிறது. இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட டெண்டர் ஒரு வழியாக அறிவிக்கப்பட்டு, தொழில்நுட்ப புள்ளிகள் திறக்கப்பட்டும் விலைப்புள்ளியை திறந்து தகுதியான நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டியதுதானே. அதைச் செய்யாமல் 30 ஆண்டுகளாக ஆவினில் தொழில் செய்து வரும் காண்ட்ராக்டர்களை மொத்தமாக ஒழிக்கும் நடவடிக்கையில் குதித் திருக்கிறது ஆவின். இதனை எதிர்த் துத்தான் ஸ்ட்ரைக் அறிவிக்கப் பட்டது. தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் போது அதனை எதிர்த்து காண்ட்ராக்டர்கள் போராடுவது எப்படி தவறாகும்?'' ‘’ என்கிறார் ஆவேசமாக.
பாலவிக்னேஷ் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் பாலாஜி, ""விலைப்புள்ளியை திறந்து தகுதியானவர்களுக்கு காண்ட்ராக்ட்டை ஒதுக்குங்கள். இல்லையெனில் ஸ்ட்ரைக் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என முன்கூட்டியே ஆவின் நிர்வாகத்துக்கு நாங்கள் கடிதம் கொடுத்தும் அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படவில்லை அதிகாரிகள். தொடர்ந்து நாங்கள் வலியுறுத்திய நிலையில், கடந்த 6-ந் தேதி விலைப்புள்ளி திறக்கப்பட்டது. அதன்படி, எங்களை அழைத்து டெண்டர் கமிட்டியினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
2016-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு கிலோ மீட்டருக்கு 24 ரூபாய் 80 காசுகள். 2018-ல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால் கிலோ மீட்டருக்கான ரேட் உயர்ந்திருக்கும். ஆனால், இப்போது வரை அதே 24 ரூபாய்க்குத்தான் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். கடந்த 4 வருடத்தில் எரிபொருள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துவிட்டது. ஆனாலும் பழைய ரேட்டி லிருந்து 40 காசுகளை குறைக்க வலியுறுத்தினர்.
இது நியாயமில்லை என நாங்கள் மறுத்தோம். பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது ஆவின். இதனால்தான் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டோம். புதிய டெண்டர்படி, நியாயமான புதிய ரேட்டை ஓ.கே. செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஏனோ சில காரணங்களுக்காக அதை ஏற்க மறுக்கிறார்கள். எங்களுக்கு ஒரு ரெண்டு ரூபாய் உயர்த்தித்தர மறுக்கிற ஆவின் நிர்வாகம், தற்போது 34, 35 ரூபாய்க்கு தனியார் லாரிகளை எடுக்கிறது. இதுதான் ஆவினின் நீதியா?'' என ஆதங்கப்படுகிறார்.
இது குறித்து ஆவினின் நேர்மையான அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ""ஆவினில் நடந்த பல்வேறு முறை கேடுகளால் காமராஜ் ஐ.ஏ.எஸ்.சை மாற்றிவிட்டு புதிய நிர்வாக இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ்.சை கொண்டு வந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஆனால், துறையின் செயலாளர் கோபால், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஆகியோரின் பேச்சுக்கு கட்டுப்படுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் வள்ளலார். குறிப்பாக, ஆவினில் கடந்த 30 ஆண்டுகாலமாக 10-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காண்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களை முழுவதுமாக அழித்துவிட்டு, தமிழக அரசின் முட்டை, பருப்பு காண்ட்ராக்டு களை எடுத்திருக்கும் நாமக்கல்லை சேர்ந்த கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திடம் மொத்த டேங்கர் லாரி காண்ட்ராக்ட்டையும் ஒப்படைக்க உயரதிகாரிகள் முடிவு செய்துவிட்டனர். இந்த நிலையில், முட்டை காண்ட்ராக்ட் விவகாரத்தில் வருமானவரித் துறை ரெய்டை கிறிஸ்டி புட்ஸ் எதிர்கொண்ட தில் ஏற்பட்ட சர்ச்சைகளால் அதற்கு கொடுக்கக் கூடாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். ஆனால், அமைச்சரின் உத்தரவுகளுக்கு வள்ளலார் கட்டுப்படவில்லை.
உயரதிகாரிகளின் மூவர் கூட்டணி, கிறிஸ்டி நிறுவனத்துக்கு சாதகமாக முடிவு எடுத் திருந்ததால்தான் டெண்டரை திறக்காமல் காலதாமதம் செய்தார் வள்ளலார்.
இந்த நிலையில், காண்ட்ராக்டர்கள் ஸ்ட்ரைக் நடத்தப்போகிறார்கள் என அறிந்து ஒரு கண் துடைப்பாக பேச்சுவார்த்தை நடத்த டெண்டர் கமிட்டிக்கு வள்ளலார் உத்தரவிட்டு அதனை தோல்வியடைய செய்திருக்கிறார். ஆவினில் டேங்கர் லாரி காண்ட்ராக்ட் எடுக்க நினைக்கும் நிறுவனத்துக்கு, ஆவின் விதிகள்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேரில் ஆர்.சி.புக் இருக்க வேண்டும். ஆனால், கிறிஸ்டி நிறு வனத்திடம் அது இல்லை. அப்படியிருந்தும் அந்த நிறுவனத்திடம் மொத்த காண்ட்ராக்ட்டையும் ஒப்படைத்து அந்த நிறுவனம் சப்-காண்ட்ராக்ட் கொடுத்து லாரிகளை இயக்கலாம் என தீர்மானித்து அதற்கேற்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில்தான், பேச்சுவார்த்தையை வேண்டுமென்றே முறித்துக்கொண்ட ஆவின் நிர்வாகம், ஸ்ட்ரைக் நடந்து வருவதால் ஆவின் நிர்வாகத்திடமுள்ள சுமார் 100 லாரிகளை வைத்து தட்டுப்பாடுகளை சமாளித்து வருகிறது. மேலும், ஆந்திராவில் பால் தொழிலில் இல்லாத தனியார் டேங்கர் லாரிகளை அதிக ரேட் கொடுத்து இங்கு கொண்டு வரவும் முயற்சித்து வருகிறார் வள்ளலார். காண்ட்ராக்டர்கள் கேட்ட ரெண்டு ரூபாயை உயர்த்தித் தராத ஆவின் உயரதிகாரிகள், 10 ரூபாய் கூடுதலாக தந்து தனியார் லாரிகளை ஒப்பந்தம் செய்கின்றனர்.
இந்த நிலையில்தான், அதிகாரிகளுக்கு எதிராக, முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு இந்த பிரச்சினைகளை கொண்டு போயிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஆனால், முஸ்லிம் களின் போராட்ட பிரச்சனைகளில் அவர் பிஸி யாக இருப்பதால் ஆவின் பிரச்சனை பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆவினின் ஒட்டுமொத்த உயரதிகாரிகளை மாற்றினால் மட்டுமே ஆவின் உருப்படும்'' என்கிறார்கள் அழுத்தமாக.
இது குறித்து வள்ளலாரின் கருத்தறிய அவரை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை. எஸ்.எம்.எஸ்.சில் தகவல் அனுப்பியும் அவரிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்.
இதற்கிடையே டேங்கர் லாரி உரிமையாளர் சங்கங்களில் ஒரு குரூப் மட்டும் ஸ்டிரைக் வாபஸ் என அறிவித்து குழப்பத்தைக் கூட்டியது.
-இரா.இளையசெல்வன்