Advertisment

ஆத்தா...! அறிக்கை நாயகன்! கோமாளி ... ஏமாளி..! -அ.தி.மு.க. - தி.மு.க.வின் குடுமிப்பிடி சண்டை!

rr

தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களத்தில் அனல்பறக்கும் விமர்சனங்களும், ஆபாசத் தாக்குதல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் தனது சேலம் வருகையின்போது அதற்கு பதிலடி கொடுத்தார் முதல்வர். அது சரவெடியைப் போல் நாலாதிசையிலும் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

Advertisment

ts

சேலம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணி, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து டிசம்பர் 3-ஆம் தேதி ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி, "வீட்டிலேயே இருந்துகொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல்... ஊழல் என குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின். மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம்தான் கொடுக்கவேண்டும். தமிழகத்தின் பட்ஜெட் அளவுக்கு "2ஜி'யில் ரூபாய் 1.76 லட்சம் கோடிக்கு தி.மு.க. ஊழல் செய்தது.

ஆன்லைனிலேயே டெண்டர், ஆன் லைனிலேயே பணம் செலுத் தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்? நாங்கள் டெண்டர் கொடுத்ததாகக் கூறப்படும் ம

தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களத்தில் அனல்பறக்கும் விமர்சனங்களும், ஆபாசத் தாக்குதல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் தனது சேலம் வருகையின்போது அதற்கு பதிலடி கொடுத்தார் முதல்வர். அது சரவெடியைப் போல் நாலாதிசையிலும் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

Advertisment

ts

சேலம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணி, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து டிசம்பர் 3-ஆம் தேதி ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி, "வீட்டிலேயே இருந்துகொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல்... ஊழல் என குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின். மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம்தான் கொடுக்கவேண்டும். தமிழகத்தின் பட்ஜெட் அளவுக்கு "2ஜி'யில் ரூபாய் 1.76 லட்சம் கோடிக்கு தி.மு.க. ஊழல் செய்தது.

ஆன்லைனிலேயே டெண்டர், ஆன் லைனிலேயே பணம் செலுத் தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்? நாங்கள் டெண்டர் கொடுத்ததாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களுக்கு தி.மு.க. ஆட்சியிலும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது'' என தி.மு.க.வை ஒரு பிடி பிடித்தார்.

Advertisment

இதற்குப் பதிலளித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, “முதல்வர் மூன்றாம்தர மனிதரைப்போல பேசுகிறார். அ.தி.மு.க. ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட கட்சி. சர்க்காரியா முதல் "2ஜி' வரை தி.மு.க மீது சுமத்தப்பட்ட எந்த ஊழல் நிரூபிக்கப் பட்டிருக்கிறதுன்னு சொல்லட்டும். அம்மா ஆட்சியைத் தரு கிறேன்னு எடப்பாடி சொல்கிறாரே, அந்த அம்மா ஊழல் செய்தார் என்று சுப்ரீம்கோர்ட்டே உறுதி செய்திருக்கிறது. எல்லா அமைச்சர்களையும் கோட்டைக்குக் கூப்பிடுங்கள். எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த நான் தயார்'' என்று சவால் விட்டிருந்தார். அதில் அவர் ஜெ.வை "ஆத்தா' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது.

இதற்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆவேசமான, தரம்தாழ்ந்த பதில் மட்டுமே வந்தது. “""எடப்பாடியாரை ஊழல் நாயகன் என்று சொல்லும் மு.க.ஸ்டாலின் கருவிலேயே ஊழல் நாயகன். எல்லாரையும் கலெக்ஷன்… கரப்ஷன்னு சொல்லுறாரு. தன்னை விளம்பரப்படுத்துவதற்கு 350 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். இது அவருடைய சொந்தப் பணமா? எங்கள் தலைவியை ‘ஆத்தா’ அது, இதுவென்று சொல்லக் கேட்டுவிட்டு சும்மா இருக்க முடியுமா?

தி.மு.க ஆட்சியில் குடும்பத்தை வளர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்ப துறையைக் கேட்டார்கள். அதில் அலைவரிசை ஊழல் பண்ணினார்கள். மு.க.ஸ்டாலினோ, ஆ.ராசாவோ வெளியில் நடமாடமுடியாத அளவுக்கு, மிகப் பெரிய விளைவுகளை அவர்கள் சந்திக்கவேண்டியதிருக் கும்''’என்பது உட்பட அச்சிலேற்ற முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக டாப் கியரில் எகிறினார்.

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் விமர்சனம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் மீடியாக்கள் கேட்டபோது, "எடப்பாடியை ஊழல் நாயகன் என்றும், ராஜேந்திரபாலாஜியை பஃபூன்' என்றும் சொன்னார். அமைச்சரோ, "என்னை கோமாளி என்கிற ஸ்டாலின் வரும் தேர்தலில் ஏமாளி' என்றார்.

ra

ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், நேரடியாக மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில், கே.டி.ராஜேந்திரபாலாஜியின் படத்தை தி.மு.க.வினர் எரிக்க... 160 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பதிலுக்கு ஸ்டாலின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரிக்க முற்பட... காவல்துறை தடுத்தது. இருந்தபோதும், அ.தி.மு.க.வினர் ஸ்டாலின், ராசா உருவப் படத்தை செருப்பால் அடிப்பது என இறங்கினர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, அண்ணாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து, ""முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறார் எனச் சொல்லியுள்ளார்கள். நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 12 வழக்குகளில் 11 வழக்குகளில் ஆஜராகி வெற்றியடைந்தவன். அவரின் உடன்பிறவா சகோதரியாக இருந்தவரின் சதிச்செயலால் வெளியேற்றப்பட்டேன். எந்த இடத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி, அரசியலமைப்புச் சட்டத்தைக் கொலை செய்தவர், அதை மீறியவர், அக்கிரமம் செய்தவர் என, எழுதியிருக்கிறது'' என ஆ.ராசாவை நோக்கி கேள்வியெழுப்பினார்.

ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல்களை அவரது ஆட்சிக் காலத்திலும் அதன்பின்பும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறது நக்கீரன். சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் ஜெ.வின் மரணத்துக்குப் பின்பு தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்வதாகக் கூறியே, தண்டனை விவரங்களை வெளியிட்டது.

அந்த குன்ஹா தீர்ப்பில் வரும் வாசகம்தான் கீழே இடம் பெற்றிருப் பது: பொது ஊழியரான ஜெ (ஆலி1), தன் வீட்டில் ஆலி2, ஆலி3, ஆலி4 (சசிகலா -இளவரசி -சுதா கரன்) ஆகியோரை தங்க வைத்தது சமூக பாதுகாப்புக்காகவோ, மனிதாபி மானத்தினாலோ அல்ல. சதித்திட்டம் தீட்டி, கொள்ளையடித்த சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவே என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி யாகிறது. இறுதித் தீர்ப்பு வரும்போது ஜெ. உயிருடன் இல்லை. காலம் அவருக்கு மரணத் தீர்ப்பு எழுதிவிட்டதால், வழக்கிலிருந்து சட்டப்படி விலக்கப்பட்டுவிட்டார். ஜெயலலிதா வின் அதிகார ஆட்டத்தின் மூலம் சொத்து குவித்த மற்ற மூவரும் சிறைத் தண்டனை பெற்றனர்.

சட்டப்பூர்வமான இந்தத் தீர்ப்பை அரசியல் காரணங்களுக்காக பின் தள்ளிவிட்டு கொச்சையாகவும் பச்சையாகவும் மோதிக்கொண்டிருக்கின்றன கழகங்கள்.

-ராம்கி

nkn121220
இதையும் படியுங்கள்
Subscribe