ஆம் ஆத்மியா...… பா.ஜ.க.வா?… -சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல் ரேஸ்!

44

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 62.82% வாக்கு பதிவாகியிருந்த நிலையில், மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியலமர்ந்தது ஆம் ஆத்மி.

ss

மத்தியில் ஆட்சி, டெல்லியோ வசப்பட மறுக்கிறது. டெல்லியைக் கைப்பற்ற பா.ஜ.க. கடந்த பத்தாண்டுகளாக துடித்துக்கொண்டிருக் கிறது. ஆனால் ஆம் ஆத்மி அதற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கிறது.

2020 தேர்தல் தோல்வியை அடுத்து மதுபானக் கொள்முதல் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மியை பா.ஜ.க. நெருக்கத் தொடங் கியது. டெல்லியின் முதல்வர், துணை முதல்வர் முதல் பலரையும் சிறைக்கு அனுப்பத் தொடங்கியது. தற்போதைய முதல்வராக இருக்கும் அதிஷிக்கும் பல்வேறு நெருக்கடி களைத் தந்துவருகிறது.

"இந்தத் தேர்தலில் மட்டுமில்லை. 2050 சட்டமன்றத் தேர்தலில்கூட பா.ஜ.க. டெல்லியில் ஜெயிக்கப்போவதில்லை''’என சவால்விட்டிருக் கிறார் கெஜ்ரிவால். பதிலுக்கு, "ஆம் ஆத்மி தனித் துப் போட்டியிட்டாலும், காங்கிரஸுடன் கூட் டணி வைத்துப் போட்டியிட்டாலும், 55 தொகுதி களில் பா.ஜ.க. வெல்லும்'' என்றி

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 62.82% வாக்கு பதிவாகியிருந்த நிலையில், மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியலமர்ந்தது ஆம் ஆத்மி.

ss

மத்தியில் ஆட்சி, டெல்லியோ வசப்பட மறுக்கிறது. டெல்லியைக் கைப்பற்ற பா.ஜ.க. கடந்த பத்தாண்டுகளாக துடித்துக்கொண்டிருக் கிறது. ஆனால் ஆம் ஆத்மி அதற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கிறது.

2020 தேர்தல் தோல்வியை அடுத்து மதுபானக் கொள்முதல் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மியை பா.ஜ.க. நெருக்கத் தொடங் கியது. டெல்லியின் முதல்வர், துணை முதல்வர் முதல் பலரையும் சிறைக்கு அனுப்பத் தொடங்கியது. தற்போதைய முதல்வராக இருக்கும் அதிஷிக்கும் பல்வேறு நெருக்கடி களைத் தந்துவருகிறது.

"இந்தத் தேர்தலில் மட்டுமில்லை. 2050 சட்டமன்றத் தேர்தலில்கூட பா.ஜ.க. டெல்லியில் ஜெயிக்கப்போவதில்லை''’என சவால்விட்டிருக் கிறார் கெஜ்ரிவால். பதிலுக்கு, "ஆம் ஆத்மி தனித் துப் போட்டியிட்டாலும், காங்கிரஸுடன் கூட் டணி வைத்துப் போட்டியிட்டாலும், 55 தொகுதி களில் பா.ஜ.க. வெல்லும்'' என்றிருக்கிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான ராம்வீர்சிங் பிதூரி

யதார்த்தம் எப்படியிருக்கிறது?

கடந்த பத்தாண்டுகளாக ஆம் ஆத்மிதான் ஆட்சியிலிருக்கிறது. இதனால் மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியிருக்க லாம். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வசப்படாவிட்டாலும், கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளையும் வென்றிருக்கிறது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றாலும் கடும் குடைச்சலைக் கொடுத்துவருகிறது.

டெல்லி தலைநகர் என்பதால், காவல்துறை முதல் பல்வேறு அதிகாரங்களை மத்திய அரசு கையிலெடுத்துக்கொண்டு துணைநிலை ஆளுநர் மூலம் ஆம் ஆத்மிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துவருகிறது.

மகாராஷ்டிராவைப் போலவே டெல்லியிலும் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கில்லாத தொகுதி களில் பெருமளவு ஆம் ஆத்மி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

கெஜ்ரிவாலின் புதிய மாளிகை யையும் ஆம் ஆத்மிக்கெதிரான பிரச்சாரத்தில் இணைத்திருக்கிறது பா.ஜ.க. பதிலுக்கு ஆம் ஆத்மி, பிரதமர் தங்குவதற்காக 2,700 கோடியில் ஒரு மாளிகை கட்டப்பட்டிருப்பதாகவும், அதில் கார்ப்பெட் விரிப்புகளுக்கு மட்டுமே 300 கோடி செலவிடப்பட்டி ருப்பதாகவும், 200 கோடியில் சாண்ட்லியர் விளக்கு அலங்காரங்கள் மேற்கொள் ளப்பட்டிருப்பதாகவும் விமர்சித்து வருகிறது.

ss

ஆம் ஆத்மிக்கு சாதகமான அம்சங் கள், மூன்றாவது போட்டியாளராக இருக்கும் முன்னாள் சாம்பியன் காங் கிரஸ் நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை. அதன் வாக்கு சதவிகிதம் 4 ஆகக் குறைந்திருக்கிறது.

டெல்லியின் இஸ்லாமிய, பஞ்சாபி மக்களின் வாக்குகள் பெருமளவு ஆம் ஆத்மிக்கே கிடைக்கும்.

காங்கிரஸ் தனித்துப் போட்டி யிட்டாலும், இந்தியா கூட்டணியி லுள்ள மம்தா, அகிலேஷ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அதன் சாதகம் கெஜ்ரிவாலுக்கு இருக்கவே செய்யும்.

தங்களது ஆதரவாளர்களான ஆட்டோ ஓட்டுநர்களைக் குறிவைத்து அவர்களுக்கு விபத்து நடந்தால் 15 லட் சம் காப்பீடு, ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு 1 லட்சம் நிதியுதவி, வருடத்துக்கு இருமுறை காக்கிச் சீருடை அலவன்ஸ் ரூ.2,500 அறிவித்திருக்கிறார் கெஜ்ரிவால்.

பா.ஜ.க.வுக்கும் ஆம் ஆத்மிக்கு மான வாக்கு இடைவெளி கிட்டத்தட்ட 13%. இந்த வாக்குகளில் பெரிய சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே மூன்றாவது முறை வெற்றி நிச்சயம்.

இரண்டாவது இடத்திலிருக்கும் பா.ஜ.க., 32லிருந்து 38 ஆக, தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்தா லும், இன்னும் அதன் டெல்லி முதல்வர் கனவு நனவாகாமலே இருந்துவருகிறது. தவிரவும், பா.ஜ.க. டெல்லியில் ஆட்சியில் அமர்ந்து கிட்டத்தட்ட கால்நூற்றாண்டாகிறது. அதனால் அதிதீவிரத்துடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது.

ஹரியானா, மகாராஷ்டிராவை வென்ற உத்வேகம் பா.ஜ.க. தொண்டர்களையும், தலைவர்களையும் உற்சாக மாக வைத்திருக்கிறது. இந்தியாவின் அதிக நன்கொடை பெற்ற கட்சியென்பதால் பொருளாதாரரீதியிலும் மற்ற எந்தக் கட்சிகளுக்கும் இணையில்லாத உயரத்தில் இருக்கிறது.

ஆம் ஆத்மி பாணியில் பா.ஜ.க. சார்பிலும், கோவில்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம், வீடு களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர், பெண்களுக்கு நிதியுதவித் திட்டங்களை தேர்தல் வாக் குறுதிகளாக அறிவிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப் படுகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கூடவே பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் இருக்கும் முதல்வர்கள், பேச்சாளர்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையெல்லாம் அழைத்து பிரச்சாரங்களி லும், தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தும். சமூக ஊடகப் பிரச்சார பலமும் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது.

காங்கிரஸை எடுத்துக்கொண்டால், 2013-ல் ஷீலாதீட்ஷித் ஆட்சி முடிவுக்கு வந்தபின் காங்கிரஸ் டெல்லியில் வெற்றியைச் சுவைக்கவேயில்லை. டெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா... “"ஆம் ஆத்மி அரசும், ஒன்றிய அரசும் டெல்லிக்கு என்ன செய்ததென மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் இந்த முறை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கப் போகிறார்கள்''’என்கிறார். ஆனால் வெற்றிக்கு வெறும் வார்த்தை சாதுர்யம் மட்டும் போதாது!

nkn150125
இதையும் படியுங்கள்
Subscribe