எந்தவொரு துயரச் சம்பவங்கள் நடந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, உண்மையில் என்ன நடந்தது என்பதை அரசுக்கு ஆய்வறிக்கையாக கொடுக்கும் அமைப்புதான் "உண்மை கண்டறியும் குழு'. இந்திய வழக் குரைஞர்(I.A.L.) சங்கத்தின் சார்பாக உண்மை கண்டறி யும் குழு, கரூரில் நடந்த துயர சம்பவத்தை ஆய்வு செய்ய நேரில் சென்றது.
இந்திய வழக்கறிஞர் கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை வழக்கறிஞர் மு.அ.பாரதி, மாநில துணைத்தலைவர் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.வி.அழகிரி சாமி, மாநில செயலாளர் ஈரோடு வழக்கறிஞர் ப.மா.பாலமுருகன், மாநில புரவலர் திருப்பூர் வழக்கறி ஞர் வி.கே.சுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் நாமக்கல் வழக்கறிஞர் என்.கார்த்திகேயன், வடக்கு மண்டல பொறுப்பாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக் கறிஞர் பவானி மோ.சுபாஷ், மாநில நிர் வாகக்குழு உறுப்பினர் ஈரோடு வழக்கறிஞர் எல்.சிவராமன், மாநில துணைச் செயலாளர் திருப்பூர் வழக்கறிஞர் எஸ்.பி.கோபிநாத், வழக்கறிஞர்கள் தூத்துக்குடி பி.முத்துலட்சுமி, கரூர் வி.தங்கவேல், தஞ்சை ஏ.முகமது பைசல், பவானி வி.ஜி.அருள், விருதுநகர் ஐ.விநாயக மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் கே.சகுந்தலா ஆகிய வழக்கறிஞர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 2ஆம் தேதி கரூர் சென்ற இந்த குழுவினர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைப் பதிவு செய்தார்கள். நேரில் களஆய்வு செய்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாரதி கூறும்போது, "த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நடந்த சம்பவம் குறித்து விசாரித்தோம். பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன், சிகிச்சையளித்த மருத்துவர்கள் குழுவினரிடமும், காவல்துறை துணை கண்காணிப்பாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தோம்.
நடிகர் விஜய் பரப்புரைக்காக மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கேட்ட நிலையில், விஜய் மதியம் 12.30 மணியளவில் வரப்போவதாக செய்திகள் பரவியதால் காலை 11 மணியிலிருந்து கூட்டம்கூட ஆரம்பித்துள்ளது. விஜய் இரவு 7 மணியளவில் வந்ததும் கூட்டம் அலைமோதியுள்ளது. அவர் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கூட்டமும் அதில்சேர, நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களிடம் விசாரித்த வகையில், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு, இறந்த நிலையிலேயே 29 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறினார்கள். காயமடைந்தவர்களுக்கு, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட காயங்கள் தவிர வேறெதுவும் இல்லையெனத் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் முன்பாக அவ்விடத்தில் எடப்பாடி பழனிசாமியின் கூட்டம் நடந்ததால், த.வெ.க. நிர்வாகிகள் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உண்மை கண்டறியும் குழு வழங்கும் பரிந்துரைகள்
காவல்துறை வழங்கிய 11 நிபந்தனைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பின்பற்றவில்லை என் பது அப்பட்டமாகத் தெரிகிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேற்கண்ட இடம் பொருத்தமான இடமல்ல. சினிமா நடிகரை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டுமென்று அப்பகுதியிலுள்ள சிறு வர்கள், பள்ளி மாணவிகள், அவர்களது பெற்றோர்களை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றுள்ளார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய்யின் கட்சித்துண்டு போட்ட இளை ஞர்கள் பலர் போதையில், காட்டுத்தனமான கூச்சல் போட்டபடி அங்குமிங்கும் அலைந்துள்ள னர். அங்கிருந்து வெளியேறுவதற்கான அவசர காலப் பாதைகள், இருசக்கர வாகனங்களால் அடைக்கப்பட்டிருந்தன. இந்த பேரிடருக்கு விஜய் தான் பொறுப்பாக்கப்பட வேண்டும். வழக்கில், விஜய் பெயர் சேர்க்கப்பட வேண்டும். குற்றவாளி களை கைது செய்வதை விரைவுபடுத்த வேண்டும்.
ஆந்திராவில் நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படம் திரையிட்டபோது அங்கு ஒரு பெண் உயிரிழந்தார். அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மீது
நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 105வது பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு. 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் வகையில் எஃப்.ஐ.ஆரில் ஆ1 குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு உயிரிழப்பு ஒருவர் மட்டும். ஆனால் கரூர் உயிரிழப்பு 41 பேர்.
கரூரில் பி.என்.எஸ் 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), பி.என்.எஸ் 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), இசந 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), இசந 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படி யாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொதுச்சொத்திற்கு சேதம் விளை வித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக கரூர் சம்பவத்திற்கு கூடுதலான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப்பதி வில் ஏ1 அக்யூஸ்ட்டாக நடிகர் விஜய்யைத்தான் சேர்க்கவேண்டும். அரசின் சார்பில் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. நிவாரணத்தொகையை சட்டப்படி தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து வசூலிக்கவேண்டும்'' என்றார். இக்குழுவினர் பரிந்துரை செய்கிற அறிக்கைப்படியே மதுரை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.