திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டையடுத்த, அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், திடீர் திருப்பமாக, கொலை முயற்சியாக மாறியுள்ளது.

Advertisment

அரும்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி ஜோதி, ஜெயந்தி தம்பதியின் 17 வயதான மகன் கவுதமன். இவர் கனகம்மா சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி, விவசாய நிலத்தில்  பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையிலிருந் தவனை குடும்பத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை யளிக்கப்பட்ட நிலையில்... மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். 

Advertisment

இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார், தற்கொலை முயற்சி வழக்காகப் பதிவுசெய்தனர். இதற்கிடையில் சுய நினைவு திரும்பியதும் விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன், பிச்சைமுத்து, ராஜா, சரவணன், சாமிதாஸ், ரமேஷ், பத்மநாபன் ஆகியோர் சுற்றிவளைத்து, வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை முயற்சி செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

கவுதமனின் தாயார் ஜெயந்தி, "என் கணவருக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையிலான  நிலத் தகராறால் கொலை முயற்சி நடந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு என் கணவரை இதே நபர்கள் கொலை செய்ய முயன்றனர். சிகிச்சைக்குப் பின் உயிர்தப்பிய கணவரின் மீது ஆந்திராவில் பொய் வழக்கு பதிவுசெய்தனர். ஜாமீன் கிடைக்காமல் தலை மறைவாக இருந்த என் கணவரை கொலை செய்ய அவர்கள் தேடித் திரிந்திருக்கிறார்கள். இந்நிலையில்... ஜனவரி 7ஆம் தேதி, நிலத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கவுதமனை சுற்றி வளைத்து, ரமேஷ், பிச்சமுத்து, சரவணன், ராஜா, மோகன், பத்மநாபன், சாமிதாஸ் ஆகியோர் கட்டாயப்படுத்தி விஷத்தை ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார்கள். "உன்னை பார்க்க உன் அப்பன் வருவான்ல' எனச் சொல்லி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்'' என தெரிவித்தார். இந்த அடிப் படையில் வழக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கவுதமனை, மருத்துவ மனையில் பணியாற்றும் ஓசன்னா என்ற பாதுகாவலர் மூலம்  கண்காணித்து வரு கிறார்கள். 

அவனை கொலை செய்ய முயற்சி செய்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்'' என்று தாயார் ஜெயந்தி, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பி யுள்ளார். தனது மகனை அரசு மருத்துவமனையில் வைத்தே கொலை செய்ய முயற்சிக் கிறார்கள் என்று அவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!