Advertisment

டப்பா என்ஜின் ஆட்சி! -மோடிக்கு முதல்வர் பதிலடி!

stalin-modi

பா.ஜ.க. மேலிடம் கொடுத்த தமிழக தேர்தல் கூட்டணி அசைன்மெண்ட்டை பியூஷ் கோயல் குழு கச்சித மாக முடித்த நிலையில், கூட்டணியில் யார், யார் உள்ளார்கள் என்பதை அறிவிக்க, தே.ஜ.கூட்டணி யின் பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராணுவ நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானப்படை விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் மாலை 3:25 மணிக்கு மதுராந்தகத்தில் வந்திறங்கினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, ஏலக்காய் மாலை போட்டு திருப்பரங்குன்றம் முருகர் படத்தை பரிசளித்தார் எடப்பாடி பழனிசாமி. 

Advertisment

stalin-modi1

பிரம்மாண்ட கூட்டத்தில் பேசிய மோடி, "தமிழ்நாடு ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாய

பா.ஜ.க. மேலிடம் கொடுத்த தமிழக தேர்தல் கூட்டணி அசைன்மெண்ட்டை பியூஷ் கோயல் குழு கச்சித மாக முடித்த நிலையில், கூட்டணியில் யார், யார் உள்ளார்கள் என்பதை அறிவிக்க, தே.ஜ.கூட்டணி யின் பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராணுவ நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானப்படை விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் மாலை 3:25 மணிக்கு மதுராந்தகத்தில் வந்திறங்கினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, ஏலக்காய் மாலை போட்டு திருப்பரங்குன்றம் முருகர் படத்தை பரிசளித்தார் எடப்பாடி பழனிசாமி. 

Advertisment

stalin-modi1

பிரம்மாண்ட கூட்டத்தில் பேசிய மோடி, "தமிழ்நாடு ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள், தி.மு.க.விடமிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் ஒன்றாக இணைந்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்த வேண்டும். பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். தி.மு.க.வை முடிவுகட்ட கவுண்டவுன் துவங்கிவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட் டணியின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது'' என்றார். இதன்மூலம் கூட்டணி ஆட்சியை அமைப்போமென சூசகமாகக் குறிப்பிட்டார். மேலும், "பெண்களுக்கு பாதுகாப் பில்லாத நிலை நிலவுகிறது. குடும்ப அரசியல் செய்கிறார்கள். இந்துக்களுக்கு எதிரான அரசான தி.மு.க.வை அகற்ற வேண்டும். கடந்த 11 வருடங்களாக நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. -காங் கிரஸ் கட்சிகளின் மத்திய கூட்டணி ஆட்சியில் வழங்கியதைவிட இது மூன்று மடங்கு அதிகம். திருப்பரங்குன்றம் விவகாரத்திலும், ஜல்லிக்கட்டி லும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது தி.மு.க. கூட்டணி. தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரி தி.மு.க.'' என்றெல்லாம் விமர்சித்து பேசி விட்டு, பின்னர் கூட்டணிக்கட்சித் தலைவர்களு டன் கையை உயர்த்தி போஸ் கொடுத்துமுடித்த பின் டெல்லி திரும்பினார்.

இந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், "தி.மு.க. அரசுக்கு முடிவுகட்ட வேண்டுமென்று மோடி விரும்பினார். இதற்காக அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்டோம்'' என்று, தான் எடுத்த முடிவுக்கு விளக்கமளித்தார். அதே நேரத்தில், டி.டி.வி.தினகரனின் தீவிர விசுவாசியான அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஏ ஸ்டெல்லஸ், கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்கின்ற வினோத் ஆகியோர் அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். 

அன்புமணி ராமதாஸ் பேசியபோது, "தி.மு.க.வுக்கு முடிவுகட்ட இன்று தொடக்க நாள்'' என்று கூறியவர், குடும்ப அரசியல், கஞ்சாசாராயம், போதையில் முதலிடம் என்றும், கொடுத்த 505 வாக்குகளில் 66 வாக்குகளை மட்டுமே தி.மு.க. நிறைவேற்றியுள்ளது என்றும் தி.மு.க.வை விமர்சனம் செய்தார். குடும்ப அரசியலென்று குற்றம்சாட்டிப் பேசிய அன்புமணி, அந்த கூட்டத்தில் மாம்பழ சின்னத்தை பயன்படுத்தியது சட்டவிரோதமென்று அவரது தந்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

stalin-modi2

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, "பிரதமர் மோடி இந்த மண்ணில் காலை வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். மக்கள் கூட்டத்தால் கடல் போல காட்சியளிக்கிறது. இந்த மதுராந்தகம் பூமியே குலுங்குகின்ற அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டுள்ளது. இதுவே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு சான்று. தி.மு.க.வுக்கு இது இறுதித் தேர்தல்'' எனக்கூறி தி.மு.க.வை அடுக்கடுக்காக விமர்சனம் செய்தார். 

தி.மு.க. மீதான விமர்சனங்களுக்கு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். மு.க.ஸ்டாலின் பேசியபோது, "தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதாகப் பிரதமர் பேசியுள்ளார். நாடு முழுக்க கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக ரூ.11,311 கோடி அளவிலான போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் பிடிபட்டுள் ளது. அங்கெல்லாம்  உங்களுடைய டபுள் இஞ்சின் எனும் டப்பா இஞ்சின் ஆட்சி தானே ஓடுது! 

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் கூறியுள்ளார். ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களை விடுதலை செய்தது குஜராத் அரசு. இவர்கள் பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசலாமா? மதுராந்தகத்தில் மோடி மண்ணில் காலை வைத்ததும் உதயசூரியன் மறைந்து, மழை வந்துவிட்டதென்று எடப்பாடி கூறினார். வாழ்க்கை முழுவதும் காலையே பார்த்துக்கொண்டிருந்தால் சூரியன் எப்படி தெரியும்? நிமிர்ந்து நின்று பார்த்தால்தான் சூரியன் தெரியும்!" என்று அதிரடி காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

nkn280126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe