கோவையிலுள்ள தனியார் அறக் கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், ‘"பகவத்கீதையை வெறும் மத நூலாகப் பார்க்கக் கூடாது. அது ஒரு தார்மீக அறிவியல். தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்கீதை, இந்த மண்ணின் நாகரிகத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது''”என்று சொல்லியிருக்கிறார். 

Advertisment

அதாவது, இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகவத்கீதை, இந்துக் களுக்கு மட்டுமல்ல; அது அனைவருக்கும் பொது வான நூல் என்கிற பொருளில் மேற்கண்ட கருத்தி னைச் சொல்லியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். 

Advertisment

பகவத்கீதையை மையப்படுத்தி அவர் கூறியுள்ள இந்த கருத்துக்கள் தமிழறிஞர்கள் மத்தியில் பேசுபொருளானதுடன் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவரு மான இலக்குவனார் திருவள்ளுவன், "பகவத்கீதை மத நூலே அல்ல' என்று விவாதித்து வருகிறார். 

இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, "மதம் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். மதம் என்பதன் ஆங்கிலச் சொல் ரிலீஜியன் (ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்). இந்தச் சொல், ழ்ங்ப்ங்ஞ்ஹழ்ங் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானது. இதன் பொருள், இணை -பிணை என்பதாகும். அந்த வகையில் மதம் என்பது, ஒருவரை ஒருவர் இணைக்க வேண்டும்; மக்களைப் பிணைக்க வேண்டும். அதனால், இந்த இலக்கணத்திற்கிணங்க பகவத்கீதை இருக்கிறதா? என பார்ப்போம். 

Advertisment

மத நூல் என்பது மக்களை இணைக்க வேண்டும்; அவர்களிடையே பிணைப்பை உருவாக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி, ஒருவரை தாழ்த்தி இருக்கக்கூடாது. யாரையும் இழித்தும் பழித்தும் கற்பித்தல் கூடாது. அப்படியிருந்தால்தான் அது மத நூல். அந்த அடிப்படையில் பகவத்கீதையை ஆராய்ந்தால், பெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் பாவப் பிறப்புறுப்பிலிருந்து (யோனி) பிறந்தவர்கள் என்று அத்தியம் 9, சுலோகம் 32-ல் கீதை கூறுகிறது. பெண்களையும் பிராமணர் அல்லாதவர்களையும் இழிவாகக் கூறுகிற கீதை அனைத்து மக்களையும் எப்படி இணைக்க முடியும்? அதனால், கீதை எங்ஙனம் மத நூலாக இருக்க முடியும்? 

எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப்போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும்போது, வருணக் குழப்பம் உண்டாகிறது (1.41) என்கிறது பகவத் கீதை.  ஆண்கள் கெட்டுப் போகலாம்; ஆனால், அப்போது அதருமம் சூழாதாம். பெண்கள் கெட்டுப் போனால் மட்டுமே அதருமம் சூழ்கிறதாம். இப்படி கூறும் பகவத் கீதை, எப்படி மத நூலாகும் ? 

மேலும், பெண்கள் கெட்டுப் போகும் போது வருண குழப்பம் உண்டாகிறது என்கிறது கீதை. அப்படியென்றால் என்ன பொருள்? பெண்கள் பிற வருணத்தாருடன் (சாதியினருடன்) உறவு கொள்வதால் குழப்பம் உருவாகிறது என்பதே இதன் பொருள். அதாவது, கலப்புத் திருமணத்திற்கு எதிராக கற்பிக்கப்படுகிறது. இதற்காகவே, வருண வகைகளை வலியுறுத்துகிறது கீதை. இப்படி, பெண்களை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளை விதைக்கும் பகவத்கீதையை எப்படி மத நூலாக ஏற்க முடியும்? 

நான்கு வருணத்தைக் கூறி மக்களைடையே உயர்வு தாழ்வை வலியுறுத்துவதே பகவத்கீதை யின் அடிப்படை. கீதையின் விளக்க நூல்களைப் பார்த்தாலே இது நன்றாகப் புரியும். மக்களிடையே வேறுபாடுகளை உண்டாக்கி அதற்கேற்ப குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு சாதகமாக எழுதப்பட்ட நூல், எங்ஙனம் மத நூலாகும்?  

இன்னும் சொல்லப்போனால், ஒரு மத நூலானது, மக்களிடையே ஆணவத்தை, அகம் பாவத்தை கற்பித்தல் கூடாது. அடக்கத்தை உணர்த்தவேண்டும்; அன்பை வலியுறுத்த வேண்டும். ஆனால், பகவத்கீதை அப்படி இல்லை.  தானே எல்லாம் என்பதாக கிருட்டிணன் கூறுவது கீதையில் உள்ளது.  குறிப்பாக, நான் சடங்கு; நான் வேள்வி; நான் முன்னோர்களுக்கான உணவு;  நான் மருந்து; நான் மந்திரம்; நான் நிச்சயமாக நெய்; நான் நெருப்பு; நான் அவி (பலி உணவு); நானே நான் என்று கீதையில் கூறுகிறான் கிருட்டிணன். 

தெய்வப்புலவர் திருவள்ளுவர், நான் (உடம்பு), எனது (பொருள், சொத்து, உடமை) என்று கரு தும் ஆணவத்தையும், அகங்காரத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பவனே இறைவனை அடைந்து உயர்ந்த உலகை அடைவான் (குறள்: 346) என்று கூறுகிறார். இத்தகைய தமிழ் நெறியே தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தப் படுகிறது. ஆனால், நானே எல்லாம் எனக் கூறுகிற கீதை எப்படி மத நூல்? 

உலக மாந்தர்களின் நல்வாழ்விற்காக எந்நாளும் ஏற்ற வழி கூறவேண்டிய கீதை, சில குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட வகுப்பினரின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுகிறது. ஒரு வகுப்பாரை போற்றியும், ஒரு வகுப்பாரை தாழ்த்தியும் பேசுகிறது கீதை. பிற மத மக்களை நேசிக்க கீதை கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை... ஆனால், சொந்த மக்களையே நேசிக் கக் கற்றுத் தரவில்லையே? அவ்வாறிருக்க, இந்து மத நூல் என்று கீதையை எப்படி கூறமுடியும்? 

மத நூல் என்பதையும் கடந்து அது பொதுவான நூல் என்றும் சிலர் பரப்பிவருகின்றனர். மதம் என்கிற ஒன்று இருக்கிறதா? என்பது ஆராய்ந்து பார்க்கவேண் டிய ஒன்று. மதம் இருப்பதாக வைத்துக் கொண்டால், மதத்தின் இலக்கணத்தின்படி இல்லாத பகவத்கீதை மத நூல் அல்ல; அனைவருக்கும் பொதுவான நூலும் அல்ல'' என்கிறார் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்.

-இளையர்