Advertisment

காசாவுக்காக திரண்ட போராட்ட குழு!

ccasaprotest

ஸ்ரேல் படையினருக்கும்-  ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதி மீதான இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். போரில் இதுவரை 65,000 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உணவு, மருந்துகளை அனுமதிக்காத காஸா முற்றுகையால் மட்டும் 150 குழந்தைகள் வரை பலியாகியுள்ளனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப

ஸ்ரேல் படையினருக்கும்-  ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதி மீதான இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். போரில் இதுவரை 65,000 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உணவு, மருந்துகளை அனுமதிக்காத காஸா முற்றுகையால் மட்டும் 150 குழந்தைகள் வரை பலியாகியுள்ளனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்புக் குரல்கொடுத்து வருகின்றன. 

Advertisment

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து, செப்டம்பர் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை புதுப்பேட்டை யிலிருந்து, ‘"கொலைகார இஸ்ரேலே போரை நிறுத்து' என்ற முழக்கத்துடன் காசா  மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

ccasaprotest1

அமெரிக்க -இஸ்ரேலிய இனப்படுகொலை எதிர்ப்பு முழக்கங்களோடும், பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களோடும் பேரெழுச்சியுடன் பேரணி புறப்பட்டுச் சென்றது. இந்த பேரணியை தோழர் திருமுருகன் காந்தி, தோழர் இளமாறன், தோழர்.கோவை ராமகிருட்டிணன், தோழர் திருவள்ளுவன் உள்ளிட்ட கள ஒருங்கிணைப் பாளர்கள் வழிநடத்தினர்.

இஸ்ரேலுடன் அனைத்துவிதமான ராணுவ ஒப்பந்தத்தையும் வர்த்தக ஒப்பந்தத்தையும் உறவுகளையும் இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டுமென்றும். நம் முந்தைய தேசிய தலைவர்கள் கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு பின்பற்றவேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து பேரணி நடைபெற்றது.

Advertisment

பேரணியின் நிறைவாக கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மழைகொட்டிய நிலையிலும் கூட்டம் கலையாமல் உணர்வுபூர்வமாக திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதில் ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன், தாம்பரம் யாகூப், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ட.த. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க தூதரகத்தை இதேபோன்ற பேரணியின்போது போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் முன்னெச்சரிக்கையாக காவல்துறையும் மத்திய உளவுத்துறையும் இந்தப் பேரணியைத் தொடக்கம் முதலே கண்காணித்துவந்தது. இதனால் பலத்த பாதுகாப்புடன் பேரணி நடைபெற்றது. 

nkn240925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe