டந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் கரூரில் த.வெ.க. பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியது.

Advertisment

கரூர் பிரச்சாரத்திற்கு விஜய் தாமதமாக வந்ததும், கூட்டநெரிசலில் ரோடு ஷோ  நடத்தியதுமே, நெரிசல் மரணங்களுக்கு காரணங்களாக பரவலாகப் பேசப்பட்ட நிலையில்... காவல்துறையின் பாதுகாப்புக் குறைபாடும், ஆளுங்கட்சியுமே காரணம் என த.வெ.க. ஆதரவாளர்கள் குரலெழுப்பினர். 

Advertisment

சி.பி.ஐ. விசாரணை கோரி டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஆதவ் அர்ஜுனா. அதனடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 

கரூரிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத் தில் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி நடத்திய விசாரணையில், ‘காவல்துறை யில் அனுமதி வாங்கியது தவிர பிரச்சாரத்திற்கு தேவையான மற்ற அனைத்து ஏற்பாடுகளையுமே ஆதவ் அர்ஜுனாதான் கவனித்துக்கொண் டார்’என மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் கூறியதாகத் தகவல்கள் கசிந்தன. அதேநேரத்தில்,  விஜய்யின் கடைசிப் படமான ‘"ஜனநாய கன்'’ திரைப்பட ஷூட்டிங்கிற்காகவே கரூர் பிரச்சாரத்திற்கு அதிக கூட்டத்தைக் காட்ட விஜய்யை தாமதமாக அழைத்துவந்ததாக ஆதவ் அர்ஜுனா மீது மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்தது. அதை நிரூபிப்பதைப் போலவே, ‘"ஜனநாயகன்'’ படத்தின் டீசரில் சித்தரிக்கப்பட்ட கரூர் கூட்ட நெரிசல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதுகுறித்தும் உன்னிப்பாக கவனித்துவந்த சி.பி.ஐ. அதிகாரிகள், கரூர் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்திய பின், த.வெ.க. தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பி டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கே நேரில் அவரை வரவழைத்து சுமார் 7 மணி நேரம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது, இல்லை என எழுத்துப்பூர்வமாக பதிலளித்த விஜய், சி.பி.ஐ. அதிகாரிகள் காட்டிய சில வீடியோ, வாட்ஸ்அப் உரையா டல் ஆதாரங்களைப் பார்த்தபின் பதில்கூறாமல் அமைதியான தாகவும்,  அதுதொடர்பான சில கேள்விகளுக்கு, ‘ஆதவ் அர்ஜுனாவுக்குத்தான் தெரியும்’ என பதிலளித்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆதவ் அர்ஜுனாவின் கழுத்திற்கும் கத்திவைக்க தயாராகிவிட்டது பா.ஜ.க. அதற்கு, ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினரும் ஒரு முக்கியமான காரணம்’என புதுக்குண்டை தூக்கிப்போட்டனர் ஆதவ் அர்ஜுனாவிற்கு மிக நெருக்கமான சிலர். இதுகுறித்து தங்களது பெயரோ, அடையாளமோ வேண்டாமே’ என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசினர். 

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியை காதல் திருமணம் செய்தபிறகு அவரது ஒட்டுமொத்த வியாபாரத்திலும் பார்ட்னர் போலவே தன்னை நினைத்துக்கொண்டார் ஆதவ். இந்நிலையில், வெளிமாநில கள்ள லாட்டரி, பணமோசடி தொடர்பாக ஆதவ் உட்பட மார்ட்டினுக்கு சொந்தமான பல இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு டெல்லியிலுள்ள மேல்மட்டப் புள்ளிகளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட ஆதவ், அதை தனது அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார். 

ஒருகட்டத்தில், ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டம் அதிகமாகவே ஆதவ்வின் மனைவி டெய்சி உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருமே அதை எதிர்க்கத் துவங்கினர். ஆதவ், அவர்களை மறைமுகமாக  பிளாக்மெயில் செய்யத் தொடங்கவே, இறுதியாக, 350 கோடி ரூபாயை ஆதவ் அர்ஜுனாவிற்கு செட்டில் செய்து, ‘இதைவைத்து பிழைத்துக்கொள்’ எனக் கூறி அனுப்பிவிட்டது மார்ட்டின் குடும்பம். 

ஆதவ்வின் மாமியாரும், மார்ட்டினின் மனைவியுமான லீமாரோஸ் இந்திய ஜனநாயக கட்சியில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை துவக்க, மார்ட்டினின் மகன் ஜோ சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலுக்குள் நுழைந்து, லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கியிருக்கிறார். பா.ஜ.க. மேலிடத்தோடு நல்ல தொடர்பி லிருக்கும் அவர்கள் அனைவருமே அரசியல்ரீதி யாக ஆதவ் அர்ஜுனா எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சுக்களும் தங்களது எதிர்காலத்திற்கு நல்லதல்ல எனக் கருதுகின்றனர்.

தனது போக்கை சிறிதும் மாற்றிக்கொள்ளாத ஆதவ், பைபாஸ் சர்ஜரி செய்துள்ள தனது மாமனார் மார்ட்டினிடம் பெரும்தொகை கேட்டு நச்சரித்து, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். இதற்கு அவர்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த நேரத்தில்தான் கரூர் நெரிசல் மரண வழக்கில் வசமாக சிக்கிக்கொண்டார் ஆதவ். 

அதைப் பயன்படுத்தி ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறது மார்ட்டின் குடும்பம். இதற்காக, சமீபத்தில் டெல்லியிலிருந்து கோவைக்கு வந்திருந்த பா.ஜ.க. முக்கியப்புள்ளியை ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமாரோஸ். அதன் பிறகுதான், கரூர் மரண வழக்கின் விசாரணைக் கோணமே மாறியது. முதலில், எஃப்.ஐ.ஆரில்  விடுபட்டிருந்த ஆதவ் அர்ஜுனாவின் பெயர் ஏ-1 ரேஞ்சுக்கு மாறியது. சி.பி.ஐ. விசாரணைக்காக விஜய் டெல்லி சென்றபோது அவரை சந்தித்த முக்கிய நபர் ஒருவரின் வீடியோகாலில் வந்து, விஜய்யிடம் பேசிய டெல்லி மேலிடப்புள்ளி ஒருவரும் ஆதவ் குறித்து இலைமறை காய்மறைவாகப் பேசிய தாகவும் கூறப்படுகிறது. 

 ஒருகட்டத்தில், "ஆதவ் அர்ஜுனாவை சிறைக்குள் தள்ள அவரது குடும்பத்தினரே லாபிசெய்வது அவருக்குத் தெரிந்ததாலும், அவர் பெரிதும் நம்பிய பா.ஜ.க.வின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதால் தூக்கமில்லாமல் தவித்துவருகிறார் ஆதவ்'” என்றனர் அவர்கள்.