Advertisment

ஜவ்வாதுமலையில் தங்கப் புதையல்! குறிவைக்கும் கொள்ளை கும்பல்!

javathuhil

கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாதுமலை. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பறந்துவிரிந்துள்ள இம்மலையில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இம்மலையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் சிறியதும், பெரியதுமாக உள்ளன. பழங்கால கோவில் ஒன்றில் தங்கப்புதையல் கிடைக்க மக்கள் ஆச்சர்யத்துடன் அக்கோவிலை நோக்கி படையெடுக்கின்றனர். 

Advertisment

ஜவ்வாதுமலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் அருகேயுள்ளது கோவிலூர் கிராமம். இங்கு பல நூற்றாண்டு களுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த ஆதிசிவன் (திருமூலநாதர்) கோவில் சிதிலமடைந்துள்ளது. இதனை புனரமைக்கவேண்டுமென்ற கிராம மக்களின் கோரிக்கையால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கின. நவம்பர் 3-ஆம் தேதி பள்ளம்தோண்டும்போது ஒரு இடத்தில் கருங்கல்லால் செய்யப்பட்ட பானையில் மன்னர் காலத்து தங்கக்காசுகள் இருப்பதைப் பார்த்து வேலையாட்கள் ஆச்சர்யமடைந்தனர். அதில் மன்னர்கால அடையாளங்கள் இருந்தன. உடனே இதுபற்றி வருவா

கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாதுமலை. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பறந்துவிரிந்துள்ள இம்மலையில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இம்மலையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் சிறியதும், பெரியதுமாக உள்ளன. பழங்கால கோவில் ஒன்றில் தங்கப்புதையல் கிடைக்க மக்கள் ஆச்சர்யத்துடன் அக்கோவிலை நோக்கி படையெடுக்கின்றனர். 

Advertisment

ஜவ்வாதுமலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் அருகேயுள்ளது கோவிலூர் கிராமம். இங்கு பல நூற்றாண்டு களுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த ஆதிசிவன் (திருமூலநாதர்) கோவில் சிதிலமடைந்துள்ளது. இதனை புனரமைக்கவேண்டுமென்ற கிராம மக்களின் கோரிக்கையால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கின. நவம்பர் 3-ஆம் தேதி பள்ளம்தோண்டும்போது ஒரு இடத்தில் கருங்கல்லால் செய்யப்பட்ட பானையில் மன்னர் காலத்து தங்கக்காசுகள் இருப்பதைப் பார்த்து வேலையாட்கள் ஆச்சர்யமடைந்தனர். அதில் மன்னர்கால அடையாளங்கள் இருந்தன. உடனே இதுபற்றி வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அவர்கள் வந்து அதனை எண்ணியபோது 103 தங்கக் காசுகள் இருந்தன. அதனை வருவாய்த் துறை அலுவலகத்திற்கு கொண்டுசென்றவர்கள், இதுகுறித்து தொல்லியல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Advertisment

தொல்லியல் அறிஞர்கள், இது எந்த மன்னருடைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப் பட்டது? இதன் வரலாறு என்ன? இதனை எதற்காக புதைத்து வைத்தனர்? இன்னும் வேறு இடங்களில் தங்கப் புதையல் இருக்குமா? என ஆய்வு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து திரு வண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகனிடம் நாம் பேசியபோது, “"இப்போது நாம் ஜவ்வாதுமலை எனச் சொல்லும் இம்மலை சங்க காலத்தில் மலைப்படுகத்தில் நவீரமலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நன்னன் மன்னரோட மலையாக இது இருந்துள்ளது. செங்கம், திருப்பத்தூர் பகுதியில் அதற்கான பல கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டுகளும், விஜயநகர ஆட்சிக்கால கல்வெட்டுகளும், 16, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டுகளும் மலையின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. பல்லவர் கால, சோழர் கால கல்வெட்டுகள், நடுகல் வழிபாடு இங்கு இருந்துள்ளது. 10 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் இங்கு கிடைத்துள்ளன. தங்கக்காசு கிடைத்துள்ள கோவில் மற்றும் சுவாமியின் பெயர், கல்வெட்டுகளின்படி திருமூலநாதர் சுவாமி கோவில். இதன் பெயர் எப்படியோ மாறியுள்ளது. இது சோழர் காலத்து சிவன் கோவில். கோவிலின் சுவரில் வீரராஜ சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கள் உள்ளன. இப்போது கிடைத்துள்ள தங்கக் காசுகள், முன்பொரு காலத்தில் குடமுழுக்கு நடந்த போது வைத்ததாக இருக்கலாம். ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கோவில் அரிதான கோவில். கோவிலின் கர்ப்பக்கிரக பகுதி மட்டுமே இப்போதுள்ளன. அதனைச் சுற்றி கோவிலின் பல பகுதிகள் இருக்கலாம். முக்கிய அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கீழிருந்து மலைக்குச் சென்றுதான் இக்கோவிலை கட்டியுள்ளார்கள். பெரிய கோவில் இருந்ததாலே இது கோவிலூர் என அழைக்கப்பட்டுள்ளது. இம்மலையை தொல்லியல்துறை, தன்னார்வலர்கள் பல ஆய்வுகள் செய்து கல்வெட்டுகளை பதிவு செய்துள்ளார்கள்''’என்றார். 

javathuhil1

ஜவ்வாதுமலை ஒரு காலத்தில் சந்தன மரங்களுக்கு பெயர்போனது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்துவந்த மர மாபியாக்கள் உள்ளூர் கொள்ளையர்களுடன் சேர்ந்து, சில அதிகாரிகளின் துணையோடு சந்தன மரங்களை வெட்டி எடுத்துச்சென்றனர். ஜவ்வாது மலை சந்தனமரங்கள் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பலரை செல்வந்தர்களாகவும், அரசியல் பிரமுகர்களாகவும் மாற்றியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு, பிரச்சினை என வந்தபோது ஆசியாவி லேயே பெரிய சந்தனமர குடோனை தீவைத்து எரித்ததில் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. அதன்பின் ஜவ்வாது மலை வாழ் மக்களின் பெயர், ஆந்திரா செம்மரம் வெட்டச்சென்றவர்களால் சர்ச்சைகளில் அடிபட்டது. இப்போது புதையல் கிடைத்ததைத் தொடர்ந்து கொள்ளையர்களின் பார்வை ஜவ்வாதுமலை மீது திரும்பியுள்ளது. ஜவ்வாதுமலையில் சில இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. மொழலை உள்ளிட்ட இடங்களில் பழமையான கோவிலும், குள்ளர் குகைகளும் உள்ளன. அந்த இடங்களில் இப்படி புதையல் கிடைக்குமா என கும்பல்கள் தேடியெடுக்க அங்குள்ள வரலாற்று மையங்களுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளன.

தங்கம் கிடைத்த கோவிலூர் சிவன் கோவிலை ஆதிகாலத்தில் இருந்ததுபோல் இப்போது கட்டினால், ஜம்னாமத்தூர் பீமன் நீர்வீழ்ச்சிக்கும், இயற்கைச் சுற்றுலாவுக்காகவும் ஜம்னாமத்தூர் வரும் மக்கள் இக்கோவிலுக்கு வருவார்கள். இதனால் இம்மலையின் வரலாறு மக்களுக்கு தெரியவரும். அதோடு பொருளா தாரரீதியாக பின்தங்கியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்வும், பொருளாதாரத்திலும் பெரும் மாற்றங்கள் வரும். சட்டவிரோதமாக செம்மரம் வெட்டச்சென்று உயிரைவிடுவதும், போலீஸா ரிடம் சிக்கி ஆயிரத்துக்கும் அதிகமான மலைமக்கள் ஆந்திர சிறை செல்வதும், கூலி வேலைக்காக கேரளா, கர்நாடகா என மலைவாழ் மக்கள் சென்று துன்பப்படுவதும் குறையும் என கோரிக்கை வைக்கின்றனர், பழங்குடியின மக்கள்மீது அக்கறை கொண்டவர்கள். அரசு கவனிக்குமா? 

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn121125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe