“செப்டம்பர் 5ஆம் தேதி  "மனம் திறந்து பேசுகிறேன்'’என்று செங்கோட்டையன் அறிவிக்க, “"மாலை 5 மணிக்கு நான் அதுபற்றிக் கூறுகிறேன்''’என செய்தியாளர் களிடம் எடப்பாடி தெரிவிக்க, அத்தனை அரசியல் கட்சிகளும் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், “என்னதான் சார் அவங்க திட்டம்?” என அறிவதற்காக அ.தி.மு.க.வின் உட்கட்சி நிலவரத்தை நன்கு அறிந்த கொங்கு மண்டல முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம். 

Advertisment

"சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். என முக்கியத் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டது முதல், பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தது வரை அனைத்துமே எடப்பாடியின் சுய விருப்பப்படி மட்டுமே நடக்கின்றன. அங்கு மூத்த தலைவர் களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. தேவைப்பட்டால், எதிர்க்கருத்து கூறுபவர்களை தள்ளி வைக்கவும் தயங்கியதில்லை எடப் பாடியார். சமீப காலமாக அப்படி தள்ளிவைக்கப்பட்டவர்களில் பலர், ‘"வெளியில் சொன்னால், வெட்கம்’ என்பதற் காகவே' கட்சித் தலைமையோடு இணக்கத்தில் இருப்பதாக நடிக் கிறார்கள். 

ஆனால், அப்படி நடிக்கத் தெரியாதவர் செங்கோட்டையன். காரணம், இன் றைக்கு கட்சியில் இருப்பவர்களில் மூத்த தலைவர் மட்டு மல்லாமல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உயிரோடு இருந்த போது எடப்பாடியார் உட்பட கொங்கு மண்டலத்தில் உள்ள பலருக்கும் கட்சிப் பதவிகள் கிடைக்க பரிந்துரை செய்தவரும் செங்கோட் டையன் தான். அப்படிப்பட்டவரை, முன்னாள் அமைச்சர் கவுந்தப்பாடி கே.சி.கருப்பண்ணன் மூலமாகவும், இப்போது வந்த எக்ஸ் எம்.எல்.ஏ. அந்தியூர் ராஜா மூலமாகவும் ‘டீஸ்’ செய்தால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்திவந்தவர், மனந்திறந்து பேசப்போவதாக என்றைக்குமே சொன்னது கிடையாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கி வளர்த்த கட்சி மக்கள் மன்றத்தில் ஓரங்கட்டப் பட்டுவிடக்கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர் செங்கோட்டையன். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது?

Advertisment

அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கான காரணங்களை அனைவருமே பட்டியல் போட்டுக் கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் எடப்பாடியார். அ.தி.மு.க. வெற்றி பெறுவதுதான் அவரது நோக்கம் என்றால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கட்சியில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், டி.டி.வி.தினகர னைக்கூட ஏற்க மறுக்கிறார். ஓ.பி.எஸ்.ஸை மோடி சந்திப்பதையும் தடுக்கிறார். இப்படியிருந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி எப்படி சாத்தியமாகும்? செங்கோட்டையனின் ஒரே வேதனை அதுதான் எனத் தெரிகிறது.

ஆகவே, அ.தி.மு.க. தொண்டர் களின் ஒட்டுமொத்த கவனத்தையும் இந்த முக்கியப்பிரச்சனை மீது திருப்ப முயற்சிக்கிறார் செங்கோட்டையன். கடந்த 2ஆம் தேதி கோபிசெட்டி பாளையத்தில்  அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பவானி எம்.எல்.ஏ. பண்ணாரி உட்பட 16 ஒ.செ.க்கள், 3 நகரச் செயலாளர்கள், 14 பேரூர் கழகச் செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஈரோடு, புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தாலும், 5ஆம் தேதிக்குப் பிறகு அவரது கூட்டத்தில் பலரும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. ஒன்றிணைந்த அ.தி. மு.க.வை உருவாக்குவது மட்டுமே அவரது நோக்கம். அதை நடத்தியே தீருவார்''’என ஆணித்தரமாகக் கூறினர்.

கூட்டணியை விட்டு ஓ.பி.எஸ். விலகிய பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தானும் கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தார் டி.டி.வி.தினகரன். அதற்கு, கடந்த வாரம் ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது, நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட் டணித் தலைவர்கள் அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடியாரை அழைத்துவர நேரில் சென்றிருக்கிறார் ஜி.கே.வாசன். அப்போது, நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என எடப் பாடியார் கேட்க, அந்த லிஸ்ட்டை படித்திருக்கிறார் வாசன். அதில், டி.டி.வி.தினகரன் பெயரும் இருக்கவே, "நா வரும்போது, அவரையெல்லாம் எதுக்கு கூப்பிடுறீங்க?''” என எடப்பாடி சிடுசிடுக்கவே, “"நீங்க வாங்கண்ணே, அவருகிட்டே நான் பேசிக்கிறேன்''’எனச் சொன்ன ஜி.கே.வாசன், அதன்பின்னர், நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஜரூராக கிளம்பி பாதி தூரம் வந்துகொண்டிருந்த டி.டி.வி.தினகரனை அலைபேசியில் தொடர்புகொண்டு எடப்பாடியாரின் மனநிலையை அவரிடம் நாசூக்காக சொல்லி, டி.டி.வி.தினகரனை ‘யூ டர்ன்’ போட வைத்துவிட்டார் வாசன். இதனால், பெருத்த அவமானத்     திற்கு உள்ளான டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. உடனான கூட்டணியிலிருந்தே விலகுவதாக அறிவித்து விட்டார்.

Advertisment

இந்நிலையில், “"அ.தி.மு.க.வி லிருந்து செங்கோட்டையனும் பிரிந்து சென்றால், அது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாதா?''’ என்ற கேள்வியோடு தமிழக பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 

“"அ.தி.மு.க.வி லிருந்து விலக்கப் பட்ட தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்     தால் மட்டுமே வரவிருக்கும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியும் என 2 முறை டெல்லி யில் நிர்மலா சீதா ராமனை சந்தித்த போதும் அவரிடம் வலி யுறுத்தியிருந்தார் செங் கோட்டையன். ஆனால், எடப்பாடியார் அதற்கு மசியவில்லை. அதன்பின் னர், சென்னை ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் வைத்து  நயினார் நாகேந்திரன், உட்பட முக்கியத் தலைவர்கள் அனைவரையும் நிர்மலா மேடம் சந்தித்தார். அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட அங்கே அனுமதியில்லை. அவ்வளவு ரகசியமாக நடந்த கூட்டத்தில், எடப்பாடியாருக்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்து சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்த வியூகங்கள் வகுக்கப்பட்டன. செங்கோட்டையனிடமும், வேறு சில முக்கிய அ.தி.மு.க. தலைவர்களிடமும் நிர்மலா மேடம் போனில் பேசினார். சுருக்கமாக சொல்ல வேண்டு மென்றால், செங்கோட்டையன் தலைமையில் சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ். ஆகியோர் அடங்கிய நால்வர் அணியை உருவாக்குவதும், பின்னர், புத்தாண்டில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து தேர்தலில் வெல்வதும்தான் தலைமையின் திட்டம்''’என புன்சிரிப்போடு கூறினார் நம்மிடம். ஆக, மொத்தத்தில், அ.தி.மு.க. ‘பணால்’ என்பது மட்டுமே இப்போதைக்கு உண்மை!- 


___________________
தலைமையேற்கும் செங்கோட்டையன்?

senkodiyan1

தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. பூஜ்ஜியமாக இருக்கிறது. ஆகவே கட்சிக்கு வெளியே உள்ள ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலின்போது இரட்டை இலை சின்னம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதற்கு ஒத்து வரவில்லையென்றால் ஏற்கெனவே எடப்பாடி தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கும் வழக்குகள் அடுத்தடுத்து அவர்மீது பாயத்தொடங்கும் என பா.ஜ.க. தரப்பில் எடப்பாடிக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அதன் ஆயுதம் தான் இப்போது செங்கோட்டையன்.

5ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக சொன்ன செங்கோட்டையன் "எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனத் தமிழ்நாடு முழுக்க அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது தான். ஆனால் நாம் முதலில் செய்ய வேண்டியது, வெளியே உள்ள எல்லோரையும் இணைத்து நமது கழகத்தை காப்போம். அதன்பிறகு பா.ஜ.க. தலைமையிலான வலுவான கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தை வெல்வோம் என்பதுதான். 

ஆட்சியில் உள்ள தி.மு.க. கூட்டணி பலத்தில் வலுவாக உள்ளது. தி.மு.க.வை தேர்தலில் எதிர்கொள்ள நமக்கு பலமான அணி தேவை. அதற்கு முதலில் நமது வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. செப்டம்பர் இறுதி அல்லது அதிகபட்சம் அக்டோபர் என இந்த இரண்டு மாதங்களுக்குள் அவரது நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்..'' இதைத்தான் செங்கோட்டையன் மனம்திறந்து பேசப்போவதாகக் கூறுகிறார்கள். 

2ஆம் தேதி காலையில் கோபி அ.தி.மு.க. அலுவலகத்தில் செங்கோட்டையனின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர் கள் கூட்டத்தில் கலந்து கொண்ட னர். அடுத்து  5ஆம் தேதி காலை யில், கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. அலுவலகப் பகுதியில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என 5000 பேர் திரள உள்ளார்கள். இதன்மூலம் மேற்கு மாவட்ட பகுதியிலுள்ள கட்சியினர் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டவுள்ளார் செங்கோட்டையன். இணைப்பு என்ற நிலைப்பாட்டுக்கு எடப்பாடி ஒத்து வராத பட்சத்தில் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பு செங்கோட் டையனிடம் வரும், அப்போது, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனு சாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி, தளவாய்சுந்தரம் உள்ளிட்ட மேலும் சிலர் செங்கோட் டையனோடு கைகுலுக்குவார்கள். அதன்பிறகு ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. என எல்லோரும் இணைந்து, நாங்கள் தான் அ.தி.மு.க. என்ற அதிரடி நிலைப்பாட்டை எடுத்து, எடப்பாடியை தனித்துவிட முடிவு செய்திருக்கிறது பா.ஜ.க. தலைமை.

-ஜீவா தங்கவேல்