காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மூன்றாம்கட்டளையைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். அபிராமிக்கும், அதே பகுதியிலுள்ள பிரியாணி கடையில் வேலைபார்த்த மீனாட்சிசுந்தரம் என்பவருக்கும் டிக்டாக் மூலமாக ஏற்பட்ட கள்ளத்தொடர்புக்கு இடைஞ்சலாக இருந்ததால், கடந்த 2018ஆம் ஆண்டில், தான் பெற்ற குழந்தைகள் இருவருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து, அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சிசுந்தரம் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி செம்மல், குற்றம் சாட்டப்பட்ட அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சிசுந்தரம் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்ததும், தனக்கு வயதான பெற்றோர்கள் இருப்பதாலும், ஏற்கெனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கண்ணீருடன் கேட்டார் அபிராமி.
நீதிபதியோ, "குழந்தைகளை கொலை செய்த இருவருக்கும் கருணை எதுவும் காட்ட முடியாது. அதனால் இருவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன்'' என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரத்தை மதிய உணவுக்குப்பின் வாசிப்பதாகக் கூறிச்சென்ற நீதிபதி, அடுத்த பத்தே நிமிடங்களில் திரும்பிவந்து, "இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையை அறிவிக்காமல் நான் எப்படி சாப்பிட முடியும்?'' எனக்கூறி தண்டனையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது!
கழுத்தறுத்துக் கொன்ற தந்தை! ஓட்டேரி கொடூரம்!
சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில், தந்தையே தனது குழந்தையை கழுத் தறுத்து கொலைசெய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் -ரெபேக்கா தம்பதிக்கு ஸ்டெபி ரோஸி என்ற 7 வயது மகள் இருக் கிறாள். கணவன் -மனைவி இடையிலான குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். விவாகரத்து வழக்கும் நடந்துவருகிறது. ஏற் கெனவே மனைவியை தாக்கிய வழக்கில் கைதாகி சிறைசென்று வெளியே வந்த சதீஷ், மீண்டும் மனைவியோடு தகராறு செய்திருக்கிறார். அடுத்து, தன் மகளை தன்னோடு அழைத்துச்சென்று ஆலந் தூரிலுள்ள விடுதியில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், கடந்த புதனன்று சதீஷின் அறையில் ஸ்டெபி கழுத்தறுபட்டு இறந்துகிடக்க, சதீஷ் கழுத்தறுபட்டு உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார். குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பிய பரங்கிமலை போலீசார், சதீஷை மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்தனர். குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்ய முயன்றார்களா என்று விசாரணை செய்துவருகிறார்கள். மகளின் உடலைக் கண்டு கதறியழுத தாயின் நிலை... பார்ப்போரை கலங்கடித்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/29/tiktalk-2025-07-29-16-05-50.jpg)